சுதர்மசுவாமி

வார்ப்புரு:Use Indian English

வார்ப்புரு:Infobox deity/Wikidata

சுதர்மசுவாமி (சமக்கிருதம்: Sudharmāsvāmī அல்லது சுதர்மன்; பொ.ஊ.மு. 607 – 507) என்பவர் மகாவீரரின் ஐந்தாம் கணாதரர் ஆவார். அனைத்துச் சமண ஆச்சாரியர்களும் துறவிகளும் இவரது சட்டங்களையே பின்பற்றுகின்றனர்.

வாழ்க்கை

தொகு

மகாவீரரால் மீள ஒழுங்கமைக்கப்பட்ட சமயப் பிரிவில் இந்திரபூதி கௌதமருக்குப் பின் சுதர்மசுவாமி தலைமைப் பொறுப்பேற்றார்.[1] இவரது வாழ்க்கைக் காலப்பகுதி மரபின் படி பொ.ஊ.மு. 607இலிருந்து 506 வரையாகும்.[2] சமண மரபின் படி, 12 ஆண்டுகளின் பின் பொ.ஊ.மு. 515இல் இவர் முற்றறிவு (கேவலஞானம்) பெற்றதாக நம்பப்படுகிறது.[1] இவர் பொ.ஊ.மு. 507ல், தனது 100வது அகவையில் நிர்வாணம் அடைந்ததாக நம்பப்படுகிறது.[1][3] இவருக்குப் பின், இச் சமயப்பிரிவின் தலைமை சம்புசுவாமியிடம் ஒப்படைக்கப்பட்டது. சம்புசுவாமி 44 ஆண்டுகள் பதவி வகித்ததோடு, மகாவீரரின் இறப்புக்குப் பின் இருந்த இறுதி கணாதரரும் ஆவார்.[1]

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Natubhai Shah 2004, ப. 39.
  2. Natubhai Shah 2004, ப. 41.
  3. George 2008, ப. 319.

மூலங்கள்

தொகு

வார்ப்புரு:சமணத் துறவிகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதர்மசுவாமி&oldid=3270524" இலிருந்து மீள்விக்கப்பட்டது