சுதீரா தாசு
சுதீரா தாசு (Sudhira Das; 8 மார்ச் 1932 - 30 அக்டோபர் 2015) என்பவர் இந்தியப் பொறியாளர் ஆவார்.[1] இவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த முதல் பெண் பொறியாளர் ஆவார்.[2][3][4][5] இந்தியாவில் பெண்களுக்குக் கல்வி தடைசெய்யப்பட்ட நேரத்தில் இவர் பொறியியலாளர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.[2]
சுதீரா தாசு | |
---|---|
பிறப்பு | கட்டக், ஒடிசா, இந்தியா) | 8 மார்ச்சு 1932
இறப்பு | 30 அக்டோபர் 2015 புவனேசுவரம் | (அகவை 83)
தேசியம் | இந்தியர் |
குடியுரிமை | இந்தியர் |
கல்வி | ராவென்சா பல்கலைக்கழகம் கொல்கத்தா பல்கலைக்கழகம் |
பொறியியல் துறை | |
கல்வி நிலையங்கள் | பெர்காம்பூர் பொறியியல் பள்ளி(தற்போது உமா சரண் பட்நாயக் பொறியியல் பள்ளி), பெண்கள் தொழில்நுட்பப்பயிலகம், ரவுர்கேலா பெண்கள் தொழில்நுட்பப்பயிலகம், புவனேசுவரம் |
செயல் திட்டங்கள் | புவனேசுவரத்தில் மகளிர் தொழில்நுட்பப்பயிலகம் நிறுவுதல் |
இளமை
தொகுசுதீரா தாசு 1932ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி ஒடிசாவின் கட்டாக்கில் உயர்குடி குடும்பத்தில் பிறந்தார்.[2][6] சிறுவயதிலிருந்தே கணிதத்தில் ஆர்வம் கொண்டிருந்தார்.[3][6]
கல்வி
தொகுசுதீரா தாசு 1951-ல் ராவன்ஷா கல்லூரியில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். இதன் பிறகு தாசு 1956-ல் கொல்கத்தாவில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கதிரியக்க இயற்பியல் மற்றும் மின்னணுவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[2][6][7]
பணி
தொகுமுதுநிலைப் பட்டம் பெற்ற பிறகு. (தொழில்நுட்பம்), தாசு பெர்காம்பூர் பொறியியல் பள்ளியில் (தற்போது உமா சரண் பட்நாயக் பொறியியல் பள்ளி) கணிதத் துறையில் விரிவுரையாளராக 1957-ல் கற்பிக்கத் தொடங்கினார். பின்னர் ராவுர்கேலாவில் உள்ள மகளிர் தொழில்நுட்பப்பயிலக கல்லூரியின் முதல்வரானார். 1957-1990 காலகட்டத்தில், ஒடிசா அரசாங்கத்தில் பல்வேறு பதவிகளில் பணியாற்றினார்.[6] இந்த காலகட்டத்தில் இவர் புவனேசுவரத்தில் பெண்கள் தொழில்நுட்பப்பயிலகம் கல்லூரியினை நிறுவினார். இது பெண் மாணவர்களுக்குப் பட்டயப் படிப்புகளை வழங்கும் ஒரு நிறுவனமாகும். இது இவரது முக்கிய பங்களிப்புகளில் ஒன்றாகும்.[2][6]
இறப்பு
தொகுதாசு 30 அக்டோபர் 2015 அன்று தனது 83 வயதில் இறந்தார்.[2][6][7]
மேற்கோள்கள்
தொகு- ↑ Bulletin of the National Institute of Sciences of India. National Institute of Sciences of India. 1955.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "Odisha's first woman engineer passes away". www.dailypioneer.com. Daily Pioneer. 1 November 2015. http://www.dailypioneer.com/state-editions/bhubaneswar/odishas-first-woman-engineer-passes-away.html.
- ↑ 3.0 3.1 "First woman engineer of Odisha dies". OdishaSunTimes.com (Odisha Sun Times). 30 October 2015. http://odishasuntimes.com/2015/10/31/first-woman-engineer-of-odisha-dies/.
- ↑ "First Women and First Person of Orissa". Orissaspider.com. 7 September 2011. Archived from the original on 25 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 16 July 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Orissa reference: glimpses of Orissa. TechnoCAD Systems. 2001.
- ↑ 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 "RIP Smt Sudhira Das: The First Lady Engineer of Odisha - Bhubaneswar Buzz" (in en-US). Bhubaneswar Buzz. 2015-10-30. https://www.bhubaneswarbuzz.com/updates/odisha-news/rip-smt-sudhira-das-the-first-lady-engineer-of-odisha.
- ↑ 7.0 7.1 "Odisha's first woman engineer Sudhira Das passed away" (in en-US). Incredible Orissa. 2015-10-31. http://incredibleorissa.com/odisha-first-woman-engineer-sudhira-das-passed-away/.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் சுதீரா தாசு தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.