சுத்தியல்பிடிப்பான் (சுடுகலன்)

சுடுகலனில், சுத்தியல்பிடிப்பான் (ஆங்கிலம்: sear) என்பது விசையின்மீது சரியான அளவில் அழுத்தம் தரும்வரை, சுத்தியல், அடிப்பான், அல்லது ஆணியை பிடித்துவைக்க, விசை இயக்கமுறையோடு இருக்கும் ஒரு பாகம்/கூறு ஆகும். இதிலிருந்து விடுவிக்கப்படும் சுத்தியலோ, அடிப்பானோ, அல்லது ஆணியோ தான் ஆயுதத்தை வெடிக்கச் செய்யும். 

எம்1911 கைத்துப்பாக்கியின் விசைத்திரள் / விசை இயங்குமுறை
கைத்துப்பாக்கி குறுக்குவெட்டு தோற்றம்
3. துமுக்கி குழல்
4. இழைவோன் நிறுத்தி
5. இழைவோன்
6. வெடியூசி
7. சுத்தியல்
8. (சுத்தியல்) பிடிப்பான்
9. சுத்தியல்-சுருள்வில்
11. பின்னுதைப்புச் சுருள்வில்
12. விசை
13. சேமகம்

ஒரு சுடுகலன் உற்பத்தியாளரின் குறிப்பின்படி:

சுத்தியல்பிடிப்பான் - சுருள்வில்லின் இழுவிசையிலுள்ள சுத்தியலை பின்பக்கமாக இருக்கும்வகையில் பிடித்துவைக்கும், சுத்தியலில் இருக்கும் ஒரு காடியின்மீது அமர்த்தபட்டிருக்கும், ஒரு கூரான கட்டை ஆகும்.[1]

ஒரு விசைத்திரளில், எத்தனை பிடிப்பான் வேண்டுமானாலும் இருக்கலாம். உதாரணமாக, ரூகர் ப்ளாக்ஹாக் ஓரியக்க சுழல்துப்பாக்கியில் சுத்தியலை விடுவிப்பதற்கு, ஒன்று தான் இருக்கும். ரூகர் ரெட்ஹாக் ஓர்/ஈரியக்க சுழல்துப்பாக்கியில் இரண்டு பிடிப்பான்கள் இருக்கும் (ஓரியக்க விடுவிப்பிற்காக ஒன்றும், ஈரியக்க விடுவிப்பிற்காக மற்றொன்றும் இருக்கும்). பிரவுனிங் பி.எல்.ஆர் புரிதுமுக்கியில் மூன்று பிடிப்பாங்கள் இருக்கும். பல தெரிவுச்சூடு புரிதுமுக்கிகளில் இரண்டு பிடிப்பான்கள் இருக்கும், ஒன்று அரை-தானியக்க சுடுதலுக்காக, இரண்டாவது தானியக்க சுடுதலுக்காக

பல சுடுகலன்களில், துண்டிப்பியுடன் பிடிப்பான் இணைக்கப்பட்டிருக்கும். அரை-தானியக்க சுடும்சுழற்சி முடிவுற்றபிறகு, விசை விடுவிக்கப்பட்டு பிடிப்பான் தயாராகும் வரை, துண்டிப்பி தான் சுத்தியலை அதன் இடத்திலேயே வைக்கும்.

வெளி இணைப்புகள் 

தொகு

மேற்கோள்கள் 

தொகு
  1. "Sear". Hallowell & Co., Fine Sporting Guns. பார்க்கப்பட்ட நாள் January 5, 2016.