வெடியூசி (சுடுகலன்)

(அடிப்பான் (சுடுகலன்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வெடியூசி (firing pin, ஃபையரிங் பின்) அல்லது அடிப்பான்(striker, ஸ்ட்ரைக்கர்) என்பது, சுடுகலன் அல்லது (எம்14 கண்ணிவெடி போன்ற) வெடிகளில் உள்ள, வெடிக்கும் இயக்கமுறையின் ஒரு கூறு / பாகம் ஆகும்.

ஒருங்கிணைந்த வெடியூசியை காட்டும், எம்14 ஆட்களுக்கான மிதிவெடியின் உட்புற தோற்றம்.
எம்1911 கைத்துப்பாக்கியின் விசைத்திரள் / விசை இயங்குமுறை. வெடியூசியை படத்தில் கவனிக்கவும்.

(மிதிவெடிகள், எறிகணைகள், கொத்துக் குண்டுகள் மற்றும் கையெறிகுண்டுகள் முதலியன போன்ற) ஒருமுறை-உபயோக சாதனங்களுக்கான வெடித்தூண்டியில் (fuze) பயன்படுத்தப்படும் வெடியூசி, கூரான முனையுடன் இருக்கும். மாறாக, சுடுகலன்களில் உள்ள வெடியூசிகள், வெடிபொதியின் எரியூட்டியை அடிக்க ஏற்றவாறு சிறிய, வட்டமுனையுடன் வடிவமைக்கப் பட்டிருக்கும்.[1][2][3] 

பொதுவாக எஃகு, அலுமினியக் கலப்புலோகம், அல்லது தைட்டானியம் ஆகியவற்றால் வெடியூசிகளும், அடிப்பான்களும் செய்யப்படும். குறைவுலோக மிதிவெடிகளைப் போன்ற சில சிறப்புப் பயன்பாடுகளில், கண்ணாடிப் பீங்கான் போன்று உலோகமில்லா பொருட்கள் பயன்படுத்தப்படும்.

வெடியூசி - அடிப்பான் வேறுபாடு 

தொகு
 
சுமித் அண்டு வெஸ்ஸன் மாடல் 13 சுழல்-கைத்துப்பாக்கியின், ஒருங்கிணைந்த வெடியூசியைக் கொண்ட சுத்தியல்

வெடியூசி என்பது, சுருள்வில்-பூட்டிய சுத்தியலின் ஆற்றலை எரியூட்டிக்கு வழங்கும், ஒரு எடைகுறைவான கூறு ஆகும். மேலும், அடிப்பான் என்பது நேரடியாக சுருள்வில்லுடன் பூட்டப்பட்டிருப்பதால், அதுவேதான் எரியூட்டியை தாக்கி ஆற்றலை வழங்கும்; இதன் எடை வெடியூசியைவிட அதிகமாக இருக்கும். சுத்தியல் மற்றும் வெடியூசியின் செயல்பாடுகள், அடிப்பானில் ஒருங்கிணைவதால்; அடிப்பான் இயங்குமுறைகள் பொதுவாகவே எளிமையாக இருக்கும்.[1] 

பொதுவாக, தொடர்ந்துசுடும் சுடுகலனின் ஆணியில், வெடியூசி அல்லது அடிப்பான் அமைந்திருக்கும். ஆணியில்லாத, சுழல்-கைத்துப்பாக்கிகள் மற்றும் பலவகையிலான ஒற்றைக்குண்டு இயக்கங்களில் மிகச்சிறிய வெடியூசி, அல்லது சுத்தியலோடு இணைந்த  வெடியூசி இருக்கும். இவ்வகை சுடுகலங்கள் பெருபாலனவை, அடிப்பானை கொண்டிருப்பது இல்லை, ஏனெனில் அடிப்பான் இயங்குமுறையை அதில் பொறுத்த  போதுமான இடம் இருப்பதில்லை. அரை-தானியக்க கைத்துப்பாக்கிகள் மற்றும் ஆணி-இயக்க சுடுகலங்களில் அடிப்பான்களை காணலாம்.[1]

வெடியூசியின் உரு  

தொகு
 
மௌசெர் எம் 98-ன் ஆணி, வெடியூசி மற்றும் பாதுகாப்பு இயங்குமுறை தனித்தனியாக பிரிக்கப்பட்டு உள்ளது.

ஒரு வழக்கமான வெடியூசி என்பது, எரியூட்டியை அடிக்க ஏற்றவாறு அரைகோள வடிவிலுள்ள முனை உடைய, ஒரு சிறு கம்பி ஆகும்.

அடிப்பானின் உரு 

தொகு

அடிப்படையில் அடிப்பாங்கள் சுருள்வில்-பூட்டிய வெடியூசிகளே ஆகும், பொதுவாக ஒன்று- அல்லது இரு-கூறுகளாக இருக்கும்.

படங்கள் 

தொகு

மேற்கோள்கள் 

தொகு
  1. 1.0 1.1 1.2 Charles E. Petty. "XD X-Deelicious!". American Cop. Archived from the original on July 23, 2008.
  2. "SAAMI Glossary, F". SAAMI. Archived from the original on 2008-01-31. பார்க்கப்பட்ட நாள் 2017-04-28.
  3. "SAAMI Glossary, S". SAAMI. Archived from the original on 2013-05-11. பார்க்கப்பட்ட நாள் 2017-04-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெடியூசி_(சுடுகலன்)&oldid=3588207" இலிருந்து மீள்விக்கப்பட்டது