ஆணி (சுடுகலன்)

ஆணி (ஆங்கிலம்: bolt, போல்ட்) என்பது உந்துபொருள் எரிகையில், அறையின் பிற்பகுதியை அடைப்பதற்கும், மற்றும் சேமகத்தில் இருக்கும் வெடிபொதியை அறைக்குள் செலுத்த வகை செய்ய நகரவும் கூடிய, மீளச்சுடும் பின்-குண்டேற்ற சுடுகலனின் ஓர் கூறு ஆகும். 

மௌசர் 98 ஆணி-இயக்க புரிதுமுக்கியின் ஆணி. இதை இயக்க ஏதுவாக அதில் இருக்கும் வளைந்த கைப்பிடியை கவனிக்கவும்.

உறையகற்றியும்வெடியூசியும், ஆணியின் ஒருங்கிணைந்த பகுதிகளாக விளங்குபவை.

விரிவுரை

தொகு

ஆணி-இயக்க , நெம்புகோல்-இயக்க, மற்றும் இழைவு-இயக்க புரிதுமுக்கிகள் (மற்றும் சிதறுதுமுக்கிகள்) போன்ற (முற்றிலும்) கைகளால் இயக்கப்படும் சுடுகலன்களில், சுடும் தருணத்தில் ஆணி  நகரா வண்ணம், அதனை பூட்டும்-முனைதுண்டு (locking lugs) பிடித்து வைக்கும்; இதனால் விரிவடையும் வாயுக்கள் எல்லாமும் முன்னோக்கித் தள்ளப்படும். பின் மற்றொரு பொதியை அறையில்இடுவதற்கு, ஆணி கைகொண்டு பின்னிழுக்கப்பட வேண்டும்.  

தானியக்க அல்லது அரை-தானியக்க சுடுகலன்களில், ஒவ்வொரு வெடிப்புக்கும் இடையில், ஆணி முன்னும் பின்னுமாக நகர்ந்து கொண்டிருக்கும். இவ்வகை சுடுகலன்களில், பின்னுதைப்பு அல்லது விரிவடையும் வாயு அல்லது பின்னுதைப்புச் சுருள்வில்முதலியன ஆணிக்கு உந்துதல் அளிக்கும். ஆணி பின்னோக்கி நகர்கையில், உறையகற்றி காலி பொதியுறையை அறையில் இருந்து வெளியே இழுக்கும்; அறையில் இருந்த  பொதியுறை முற்றிலும் வெளியே வந்த பின், வெளித்தள்ளியைக் கொண்டு காலி பொதியுறை சுடுகலனில் இருந்து உமிழப்படும் (தூக்கி எறியப்படும்). ஆணி முன்னோக்கி  நகர்கையில், சேமகத்தில் இருந்து ஒரு வெடிபொதியை உருவி, அதனை அறைக்குள் தள்ளும். 

அரை-தானியக்க கைதுப்பாக்கியின் இழைவோனும் கூட, ஆணியின் மறுவடிவமே ஆகும்.

படங்கள்

தொகு

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  • ஆணியை பற்றி மெலும் அறிய http://www.notpurfect.com/main/fullauto.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆணி_(சுடுகலன்)&oldid=2543626" இலிருந்து மீள்விக்கப்பட்டது