வெடியூசி (சுடுகலன்)
வெடியூசி (firing pin, ஃபையரிங் பின்) அல்லது அடிப்பான்(striker, ஸ்ட்ரைக்கர்) என்பது, சுடுகலன் அல்லது (எம்14 கண்ணிவெடி போன்ற) வெடிகளில் உள்ள, வெடிக்கும் இயக்கமுறையின் ஒரு கூறு / பாகம் ஆகும்.
(மிதிவெடிகள், எறிகணைகள், கொத்துக் குண்டுகள் மற்றும் கையெறிகுண்டுகள் முதலியன போன்ற) ஒருமுறை-உபயோக சாதனங்களுக்கான வெடித்தூண்டியில் (fuze) பயன்படுத்தப்படும் வெடியூசி, கூரான முனையுடன் இருக்கும். மாறாக, சுடுகலன்களில் உள்ள வெடியூசிகள், வெடிபொதியின் எரியூட்டியை அடிக்க ஏற்றவாறு சிறிய, வட்டமுனையுடன் வடிவமைக்கப் பட்டிருக்கும்.[1][2][3]
பொதுவாக எஃகு, அலுமினியக் கலப்புலோகம், அல்லது தைட்டானியம் ஆகியவற்றால் வெடியூசிகளும், அடிப்பான்களும் செய்யப்படும். குறைவுலோக மிதிவெடிகளைப் போன்ற சில சிறப்புப் பயன்பாடுகளில், கண்ணாடிப் பீங்கான் போன்று உலோகமில்லா பொருட்கள் பயன்படுத்தப்படும்.
வெடியூசி - அடிப்பான் வேறுபாடு
தொகுவெடியூசி என்பது, சுருள்வில்-பூட்டிய சுத்தியலின் ஆற்றலை எரியூட்டிக்கு வழங்கும், ஒரு எடைகுறைவான கூறு ஆகும். மேலும், அடிப்பான் என்பது நேரடியாக சுருள்வில்லுடன் பூட்டப்பட்டிருப்பதால், அதுவேதான் எரியூட்டியை தாக்கி ஆற்றலை வழங்கும்; இதன் எடை வெடியூசியைவிட அதிகமாக இருக்கும். சுத்தியல் மற்றும் வெடியூசியின் செயல்பாடுகள், அடிப்பானில் ஒருங்கிணைவதால்; அடிப்பான் இயங்குமுறைகள் பொதுவாகவே எளிமையாக இருக்கும்.[1]
பொதுவாக, தொடர்ந்துசுடும் சுடுகலனின் ஆணியில், வெடியூசி அல்லது அடிப்பான் அமைந்திருக்கும். ஆணியில்லாத, சுழல்-கைத்துப்பாக்கிகள் மற்றும் பலவகையிலான ஒற்றைக்குண்டு இயக்கங்களில் மிகச்சிறிய வெடியூசி, அல்லது சுத்தியலோடு இணைந்த வெடியூசி இருக்கும். இவ்வகை சுடுகலங்கள் பெருபாலனவை, அடிப்பானை கொண்டிருப்பது இல்லை, ஏனெனில் அடிப்பான் இயங்குமுறையை அதில் பொறுத்த போதுமான இடம் இருப்பதில்லை. அரை-தானியக்க கைத்துப்பாக்கிகள் மற்றும் ஆணி-இயக்க சுடுகலங்களில் அடிப்பான்களை காணலாம்.[1]
வெடியூசியின் உரு
தொகுஒரு வழக்கமான வெடியூசி என்பது, எரியூட்டியை அடிக்க ஏற்றவாறு அரைகோள வடிவிலுள்ள முனை உடைய, ஒரு சிறு கம்பி ஆகும்.
அடிப்பானின் உரு
தொகுஅடிப்படையில் அடிப்பாங்கள் சுருள்வில்-பூட்டிய வெடியூசிகளே ஆகும், பொதுவாக ஒன்று- அல்லது இரு-கூறுகளாக இருக்கும்.
படங்கள்
தொகு-
எஃப்1 கையெறிகுண்டின் வெடியூசியை காட்டும் உட்புற தோற்றம்.
-
எம்1 கவசவூர்த்திக் கண்ணிவெடியின் ஒருங்கிணைந்த வெடியூசியை காட்டும் உட்புற தோற்றம்.
-
பீ.எம்-79 ஆட்களுக்கான மிதிவெடி
-
சோவியத் ஒன்றியத்தின் சூழ்ச்சிப்பொறியை வெடிக்க வைக்கும் கருவி – இழு வெடித்தூண்டி (fuze): பொதுவாக இழுக்கம்பியுடன் (tripwire) இணைக்கப்படும்.
-
சோவியத் ஒன்றியத்தின் சூழ்ச்சிப்பொறியை வெடிக்க வைக்கும் மாற்று வடிவக் கருவி – இழு வெடித்தூண்டி: பொதுவாக இழுக்கம்பியுடன் இணைக்கப்படும். தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அடிப்பானை காண்க. முனையில் இருக்கும் கெற்பை வெடிபொருளில் செருகப்படும்.
-
சோவியத் ஒன்றியத்தின் சூழ்ச்சிப்பொறியை வெடிக்க வைக்கும் கருவி – அழுத்த வெடித்தூண்டி: தளர்ந்த பலகைக்கு அடியில் வெடித்தூண்டி மறைக்கப்பட்டிருக்கும், பலியாள் இதை மிதித்தால் வெடிக்கும்.
-
வெடியூசி, கெற்பு மற்றும் அதையடுத்த வெடிபொருள் ஆகியவற்றை காட்டும் பி.எல்.யூ-43 டிராகன்ட்டூத் கொத்துக் குண்டின் குறுக்குவெட்டுத் தோற்றம்.
-
வெடியூசியை காட்டும், ஜப்பானிய வகை 99 கையெறிகுண்டின் குறுக்குவெட்டு படம்.
-
ஓர் அமெரிக்க எம்2 மிதிவெடியின் குறுக்குவெட்டு தோற்றம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Charles E. Petty. "XD X-Deelicious!". American Cop. Archived from the original on July 23, 2008.
- ↑ "SAAMI Glossary, F". SAAMI. Archived from the original on 2008-01-31. பார்க்கப்பட்ட நாள் 2017-04-28.
- ↑ "SAAMI Glossary, S". SAAMI. Archived from the original on 2013-05-11. பார்க்கப்பட்ட நாள் 2017-04-28.