சுந்தர் தாசு குங்கர்

இந்திய ஆட்சிப் பணியாளர்

சுந்தர் தாசு குங்கர் (Sunder Das Khungar) இந்திய ஆட்சிப்பணி அலுவலர் மற்றும் ஒரு கட்டிடப் பொறியாளர் ஆவார். பக்ரா அணை திட்டத்தின் பொது மேலாளராக குங்கர் பணி புரிந்தார்.[1] நீர்ப்பாசனத்திற்காக கட்டப்பட்ட அணையை, ஐந்து நீர் மின் உற்பத்தி அலகுகளை இணைப்பதன் மூலம் மின் உற்பத்திக்கும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது இவரது முன்மொழிவாகும்.[2] தாமோதர் பள்ளத்தாக்கு கழகத்தின் நீர் மேலாண்மை நடவடிக்கைகளை ஆராய்வதற்காக 1960 ஆம் ஆண்டு நீர்ப்பாசன மற்றும் மின் அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட ஆணையத்திற்கு இவர் தலைமை தாங்கினார்.[3] சுந்தர் தாசு குங்கரின் பங்களிப்புகளுக்காக 1955 ஆம் ஆண்டு இந்திய அரசு மூன்றாவது மிக உயர்ந்த விருதான பத்மபூசண் விருதை வழங்கி சிறப்பித்தது.[4]

சுந்தர் தாசு குங்கர்
Sunder Das Khungar
பிறப்புஇந்தியா
பணிஆட்சிப் பணீயாளர்
கட்டிடப் பொறியாளர்
அறியப்படுவதுபக்ரா அணை
குங்கர் ஆணையம்
விருதுகள்பத்ம பூசண்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Traverse City Record". Newspapers.com. 2016. பார்க்கப்பட்ட நாள் July 4, 2016.
  2. "Boon for parched lands". The Tribune. 20 October 2013. பார்க்கப்பட்ட நாள் July 4, 2016.
  3. Marcus F. Franda (8 December 2015). West Bengal and the Federalizing Process in India. Princeton University Press. pp. 125–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4008-7525-2.
  4. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on நவம்பர் 15, 2014. பார்க்கப்பட்ட நாள் January 3, 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுந்தர்_தாசு_குங்கர்&oldid=3555007" இலிருந்து மீள்விக்கப்பட்டது