சுனந்தா குமாரிரத்னா

தாய்லாந்து மன்னரின் மனைவி

  சுனந்தா குமாரிரத்னா [1] (தாய் மொழி: สุนันทากุมารีรัตน์, RTGS: சுனந்த குமாரிரத், Sunandākumārīratana; 10 நவம்பர் 1860 – 31 மே 1880) என்பவர் தாய்லாந்து மன்னரின் மனைவி ஆவார்.[2] இவர் "பாடழிவுற்ற இராணி " என்று நன்கு அறியப்பட்டாள்.[2]

சுனந்தா குமாரிரத்னா
தாய்லாந்து அரச மனைவிகள்
பதவிக்காலம்1877 – 31 May 1880
பிறப்பு(1860-11-10)10 நவம்பர் 1860
பாங்காக், இரத்தனகோசின் இராச்சியம் (1782–1932)
இறப்பு31 மே 1880(1880-05-31) (அகவை 19)
பாக் கிரெட் மாவட்டம், நொந்தபுரி மாகாணம், சியாம்
துணைவர்சுலலாங்கொர்ன் (இராமா V)
குழந்தைகளின்
பெயர்கள்
கண்ணபோர்ன் பெஜரதன
பெயர்கள்
சுனந்தா குமாரிரத்னா
மரபுசக்ரி வம்சம்
தந்தைமோங்குத் (இராமா IV)
தாய்பியமாவதி

பின்னணி

தொகு

சுனந்தா சியாமி மன்னர் மோங்குத் (இராமா IV) மற்றும் இளவரசி பியாமின் மகள் மற்றும் பதினைந்தாவது குழந்தை ஆவார்.[3] இவர் சியாமின் (இப்போது தாய்லாந்து) மன்னர் சுலலாங்கொர்னின் (இராமா V) ஒன்றுவிட்ட சகோதரி மற்றும் முதல் மனைவி.[3] அரசர்களின் மற்ற இரண்டு மனைவிகள் இவரது இளைய சகோதரிகள், இராணி சவாங் வதானா மற்றும் இராணி சாவபா போங்சி.[3]

பேங் பா-இன் அரண்மனை (கோடைக்கால அரண்மனை) செல்லும் வழியில் பான் மாருட் என்ற நீராவிப் படகு இழுத்துச் செல்லப்பட்ட இவர்களது அரச படகில் சொரவன் என்ற நீராவிப் படகு மோதியதில் இராணியும் இராணியின் மகள், கண்ணபோர்ன் பெஜரதனாவும் நீரில் மூழ்கினர்.[3]

விபத்தின் போது அங்கிருந்த பலரும் மரணதண்டனைக் குற்றம் என இராணியினை தொட்டுக் காப்பாற்ற ஒருவரும் முன்வரவில்லை. இது குறித்த கட்டுக்கதை ஒன்றும் உள்ளது. இருப்பினும், இது அவ்வாறு இல்லை; படகோட்டிகள் தண்ணீரில் மூழ்கி, இராணியையும் அவரது மகளையும் சிக்கிய திரைச்சீலைகளிலிருந்து இழுத்து, மற்றொரு படகில் ஏற்றிச் சென்றனர்.[4] இந்த விபத்தில் வேறு யாரும் உயிரிழக்கவில்லை.[3]

இறுதி சடங்கு

தொகு

துக்கத்தில் மூழ்கிய சுல்லாங்கொர்ன் அவர்களுக்கு அற்புதமான இறுதிச் சடங்கு செய்யுமாறு கோரினார். இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் 10 மாதங்கள் எடுத்தன. இறுதிச் சடங்கு 10 மார்ச் 1881 வரை தொடங்கவில்லை. இராணி மற்றும் இளவரசியின் உடல்கள் வெள்ளி ஊசி மூலம் உலர்த்தப்பட்டன மற்றும் தங்கக் கலசங்களில் சேமித்து வைக்கப்பட்டன. இதே நேரத்தில் ஒரு இறுதிச் சடங்கு கட்டுவதற்காக விலைமதிப்பற்ற மரங்கள் சேகரிக்கப்பட்டன. தகனச் சடங்குகளின் போது மன்னரும் பரிவாரங்களும் தங்கியிருந்த அரச வசதிகளும் பிரமனே என்று குறிப்பிடப்படும் இடத்தில் கட்டப்பட்டன. இறுதிச் சடங்கு 280 அடிகள் (85 m) உயரமானது மற்றும் ஒரு பலிபீடத்தின் மீது கட்டப்பட்டது. இங்குத் தகனம் செய்யக் கலசங்கள் வைக்கப்பட்டன.[3]

நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் செழுமையாக இருந்தன. பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு மிக விரிவாக ஆவணப்படுத்தப்பட்டது. சுமார் 6:00 மணியளவில் சுலாலொங்கோர்ன் இறுதிச் சடங்கைச் செய்தார். மார்ச் 15 அன்று மாலை கொம்புகள் முழங்க, இரவு முழுவதும் தீ எரிந்தது.[3] மார்ச் 20 அன்று பெரிய அரண்மனைக்கு ஊர்வலத்துடன் கொண்டாட்டங்கள் நிறைவடைந்தன.[3]

முன்னோர்கள்

தொகு
8. இராமா I
4. இராமா III
9. அமரிந்திரா
2. மோங்குட், சியாமின் நான்காம் இராமா
10. என்ஜிஓஎன் சே-டான்
5. ரத்தனகோசின் இளவரசி பன்ரோட்
11. இளவரசி கேவ், இளவரசி ஸ்ரீ சுதாரக்
1. சியாமின் ராணி சுனந்தா குமாரிரத்னா
12. கேவ்கீக் நோரராக், ப்ரேயா சிந்தராங்சன்
6. டேங் சுசரிடகுல், லுவாங் அசசம்டேங்
3. பியம் சுசரிடகுல்
7. நாக், தாவோ சுசரித்தம்ரோங்

மேற்கோள்கள்

தொகு
  1. Finestone, Jeffrey. The Royal Family of Thailand: The Descendants of King Chulalongkorn. Bangkok : Phitsanulok Publishing, 1989, p. 64
  2. 2.0 2.1 "ย้อนรอยโศกนาฏกรรม ตำนานเรื่องเล่าของ "สมเด็จพระนางเรือล่ม" อัครมเหสีในรัชกาลที่ 5" [Retrace the tragedy, Legend of "Wrecked Queen," the queen consort of King Rama V]. Art & Culture Magazine (in thai). 2020-11-28. பார்க்கப்பட்ட நாள் 2021-02-01.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 indochinoise, Société académique (1882). Bulletin de la Société académique indochinoise de France (in பிரெஞ்சு).
  4. The Palace Law of Ayutthaya and the Thammasat: Law and Kingship in Siam. APD SINGAPORE PTE. LTD. 2016. p. 63. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780877277699.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனந்தா_குமாரிரத்னா&oldid=3871417" இலிருந்து மீள்விக்கப்பட்டது