பெரிய அரண்மனை, தாய்லாந்து
பெரிய அரண்மனை (Grand Palace, தாய் மொழி: พระบรมมหาราชวัง,[1]}}) தாய்லாந்தின் தலைநகரமான பேங்காக்கின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. 1782லிருந்து, இந்த அரண்மனை சியாம் வம்சத்தின் அதிகாரப்பூர்வமான வசிப்பிடமாகும். 1925 ஆம் ஆண்டு வரை ராஜா, அவரது அரச நீதிமன்றம் மற்றும் அரசாங்கம் இந்த அரண்மனை வளாகத்தில் செயல்பட்டனர். தற்போதைய மன்னர், கிங் பூமிபால் அதுல்யாதெச் (ராமா IX) , தற்போது சித்ரலதா அரண்மனை வளாகத்தில் வசிக்கிறார், ஆனால் பெரிய அரண்மனை இன்னும் உத்தியோகபூர்வ நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பல அரச விழாக்கள் மற்றும் அரசாங்கத்தின் செயல்பாடுகள் அரண்மனை வளாகத்தினுள் நடைபெறுகிறது. இந்த அரண்மனை தாய்லாந்தின் மிகவும் பிரபலமான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடங்களில் ஒன்றாகும்.
தோற்றம்
தொகுசக்ரி வம்சம் நிறுவனர் கிங் புத்தா யோத்வா சுலாலொக் (ராமா I) தலைநகரை தோன்புரியிலிருந்து பாங்காக்கிற்கு மாற்றியபொழுது, அவரது ஆணைப்படி மே 6 1782 அன்று இந்த அரண்மனை கட்டுமானப் பணி தொடங்கியது. அவரைத் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களும் பல புதிய கட்டிடங்களையும், கட்டமைப்புகளையும் உருவாக்கினர், குறிப்பாக கிங் சுலலாங்கொர்ன் (ராமா V) காலத்தில் அதிக அளவில் கட்டப்பட்டன. 1925ல் அரசரும், அரச குடும்பத்தினரும், அரசாங்கமும் நிரந்தரமாக இந்த அரண்மனையிலிருந்து வெளியேறி வேறு வசிப்பிடத்திற்கு மாறினர். 1932ல் முடியாட்சி முடிவுக்கு பிறகு, அனைத்து அரசாங்க அமைப்புகளும் முற்றிலுமாக அரண்மனையிலிருந்து மாற்றப்பட்டது.
வடிவத்தில், அரண்மனை வளாகம் தோராயமாக செவ்வக வடிவத்தில் உள்ளது. நான்கு சுவர்களால் சூழப்பட்டு 218.400 சதுர மீட்டர்(2,351,000 சதுர அடி) இணைந்த பகுதியாக இரத்தனகோசின் தீவில் சாவோ பிரயா ஆற்றின் கரையிலுள்ளது. இது ஒரே கட்டிடமாக இல்லாமல் காட்சி அரங்குகள், கூடாரங்கள், திறந்தவெளி தோட்டங்கள் மற்றும் முற்றமாக அமைந்துள்ளது. இது பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது அவை: மரகதபுத்தக் கோவில், பல்வேறு பொதுக் கட்டிடங்களுடன் வெளிப்பிரகாரம், சக்ரி மகா பிரசாத் கட்டிடங்களை உள்ளடக்கிய நடுப்பிரகாரம், உள்பிரகாரம், மற்றும் சிவாலே தோட்டம் ஆகும். பெரிய அரண்மனை தற்போது பொதுமக்களுக்கு அருங்காட்சியமாக திறந்துவிட்டுள்ளபொழுதும் அங்கு அரசு அலுவலகங்கள் இன்னும் செயல்பட்டுவருகின்றன.
நுழைவு
தொகுஅரண்மனைக்குள் நுழைபவர்கள் உடுத்தும் ஆடையானது கட்டுப்படுத்தப்படுகிறது. அரண்மனையின் முக்கிய நுழைவாயினுள் அங்கி போன்ற மேலாடை கொடுக்கப்படுகிறது இதனை கட்டுப்படுத்தப்பட்ட ஆடையின் மீது அணிந்துகொண்டு நுழையலாம்.
பெரிய அரண்மனையின் செவ்வக வடிவ மதில்சுவரில் பக்கத்திற்கு மூன்றாக 12 நுழைவாயில்கள்(ประตู, Pratu, கதவு) உள்ளன, இது செங்கற்களைக் கொண்டும், மோர்டாரைக் கொண்டும் கூம்புவடிவில் கட்டப்பட்டுள்ளன. இந்த நுழைவாயில்கள் அணைத்திற்கும் வெள்ளை வண்ணம் பூசப்பட்டு பிரம்மாண்ட சிவப்பு நிறக் கதவுகளுடன் உள்ளன. இவை அணைத்திற்கும் இயைபு பெயரிடப்பட்டுள்ளன.[2]
பெரிய அரண்மனையின் மதில்சுவரின் மீது சிறிய கோட்டைகள்(ป้อม, Pom) 17 உள்ளன, ஆரம்பத்தில் பத்து கோட்டைகளே இருந்தன; பிற்பாடு 7 கோட்டைகள் சேர்க்கப்பட்டன. இந்த சிறிய கோட்டைகள் பீரங்கி பாதுகாப்பு கட்டைகளாகவும், கண்காணிப்பு கோபுரமாகவும் உள்ளன. கோட்டைகள் அனைத்திற்கும் இயைபு பெயரிடப்பட்டுள்ளன.
சான்றுகள்
தொகு- ↑ Royal Institute of Thailand. (2011). How to read and how to write. (20th Edition). Bangkok: Royal Institute of Thailand. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-974-349-384-3.
- ↑ Watcharothai, et al. 2005, ப. 198–201
வெளி இணைப்புகள்
தொகு- Official website
- Thai Royal Palaces Virtual Tour பரணிடப்பட்டது 2016-03-28 at the வந்தவழி இயந்திரம்
- Bureau of the Royal Household பரணிடப்பட்டது 2016-03-22 at the வந்தவழி இயந்திரம்
- Ministry of Defence's Website on the Grand Palace (Thai) பரணிடப்பட்டது 2012-04-25 at the வந்தவழி இயந்திரம்
- The Grand Palace on Bangkok For Visitors
- Panoramic view of The Grand Palace