சுனந்தா மகிந்திரா
கலா கீர்த்தி சுனந்தா மகிந்திரா டே மெயில் (பிறப்பு 28 சனவரி 1938) (சிங்களம்: සුනන්ද මහේන්ද්ර), சுனந்தா மகிந்திரா (Sunanda Mahindra) என்று பிரபலமாக அறியப்படுபவர், இலங்கையில் எழுத்தாளர், நாடக இயக்குநர், கவிஞர் மற்றும் சிங்கள வானொலி நாடக எழுத்தாளர் ஆவார்.
சுனந்தா மகிந்திரா தற்போது, இலங்கையில் சிங்கள மற்றும் ஆங்கில பத்திரிகைகளில் தொடர்ந்து பங்களிப்பாளராக உள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுமகேந்திரா 28 சனவரி 1938 அன்று பிலியந்தலையில் ஐந்து உடன்பிறப்புகளில் மூன்றாவதாகப் பிறந்தார். இவரது தந்தை மார்ட்டின் என்றி டி மெல்வாசு பொதுச் சுகாதார பரிசோதகராக இருந்தார். இவரது தாயார் லிலியட் மார்கரெட் வைத்தியரத்ன ஒரு இல்லத்தரசி. இவரது இளைய சகோதரர் இளம் வயதிலேயே இறந்துவிட்டார். இவரது கல்வி கண்டி தர்மராஜா கல்லூரியில் தொடங்கியது. பின்னர் இவர் கொழும்பில் உள்ள ஆனந்தா கல்லூரியில் ஆங்கில வழிக் கல்வியில் சேர்ந்தார். ஜே. பி. திசாநாயக்க, டி. பி. நிகால்சிங்க, பண்டார விஜயதுங்க, அசோக பொன்னம்பெரும மற்றும் விஜயரத்ன வர்ககொட ஆகியோர் பாடசாலையில் இவரது சக தோழர்கள். [1]
கல்வி வாழ்க்கை
தொகுபள்ளி இறுதி தேர்வில் வெற்றியடைந்த பின்னர், மகேந்திரா வித்யாலங்கார பிரிவேனாவில் (தற்போது களனி பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படுகிறது) இளங்கலைப் பட்டம் பெற்றார்.[2] இதன் பிறகு இவர் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்பியல் துறையில் வருகை ஆராய்ச்சியாளராக இருந்தார். இலண்டன் விஜயத்தின் பின்னர் இலங்கை திரும்பிய இவர் களனி பல்கலைக்கழகத்தில் வருகை விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1987ஆம் ஆண்டில், மகிந்திரா வரோக்லாவ் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியல் படிப்பதற்காக போலந்து சென்றார். இங்கு இவர் கௌரவ முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் 1990களில், இவர் இலங்கையின் களனிப் பல்கலைக்கழகத்தில் தகைசால் பேராசிரியராகப் பணியாற்றினார்.
1987ஆம் ஆண்டில், இலங்கை தேசியப் பிரிவின் பத்திரிக்கை மற்றும் தொடர்பாடல் கல்விக்கான பொதுநலவாயச் சங்கத்தின் செயலாளராகப் பணியாற்றினார். பின்னர் துணைத் தலைவரானார். 1973 முதல் 1977 வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வருகை விரிவுரையாளராக இருந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bandara who does not know his size". Sarasaviya. பார்க்கப்பட்ட நாள் 7 March 2020.
- ↑ "Sunanda's story in print". Daily News. பார்க்கப்பட்ட நாள் 7 March 2020.