சுனிதா தேவி (கொற்றர்)

சுனிதா தேவி (Sunita Devi) (பிறப்பு 1980) கழிப்பறைகளை கட்டியதற்காக கௌரவிக்கப்பட்ட ஒரு இந்திய கொற்றராவார். இவரது கிராமத்தில் 90% பெண்களுக்கு கழிப்பறை வசதி இல்லை. இவருடைய இந்தப் பணிக்குப் பிறகு அவர்கள் அனைவருக்கும் இப்போது கழிவறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக இவருக்கு 2019ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் தலைவர் நாரி சக்தி விருது வழங்கினார்.

சுனிதா தேவி
பிறப்பு1980
புது தில்லி, இந்தியா
தேசியம் இந்தியர்
பணிமேசன்
அறியப்படுவதுகழிவறைகள் கட்டியது

வாழ்க்கை

தொகு

சுனிதா தேவி 1980இல் பிறந்தார். இவர் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றார். இவர் 2010இல் திருமணம் செய்து கொண்ட உடனேயே, சார்கண்ட்டின் தலைநகர் இராஞ்சியிலிருந்து 115 கி.மீ தூரத்தில் உள்ள லதேஹர் மாவட்டத்தின் உதய்புரா கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றார். குப்பை மற்றும் அசுத்தமாக தேங்கி நிற்கும் நீர், திறந்தவெளி மலம் கழித்தல் போன்றவை பொதுவாக கிராமத்தில் இருந்தது. மேலும், தனது புதிய வீட்டில் கழிப்பறை பயன்பாட்டில் இல்லை என்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். இவரது கிராமமான உதய்புரா என்பது மாநிலத் தலைநகர் ராஞ்சியிலிருந்து 115 கி.மீ தூரத்தில் இருந்தது [1] இவருடைய கிராமத்தில் அக்கம்பக்கத்தினரும் இதேபோன்ற சூழ்நிலையில் இருந்தனர். ஆனால் ஆசாரம் காரணமாக இவரால் இதை ஒரு பிரச்சினையாக எழுப்ப முடியவில்லை. 10% பெண்களுக்கு மட்டுமே கழிப்பறை வசதி இருந்தது. மீதமுள்ளவர்கள் திறந்த வெளியில் மலம் கழிக்க வேண்டியிருந்தது. [2]

தொழில்

தொகு

இந்தியாவின் தூய்மை திட்டங்களுள் ஒன்றான தூய இந்தியா இயக்கம் கிராமின் (எஸ்.பி.எம்-ஜி) உட்பட மற்றவர்கள் 2015 ஆம் ஆண்டில் இவரது கிராமத்திற்கு வந்து கழிப்பறைகள் பற்றி பேசத் தொடங்கினர். [1] ஒரு திறந்தவெளியில் மலம் கழிக்கும் சமூகத்தை மாற்ற இந்த பணி விரும்பியது. மேலும் அவர்கள் ஒரு கிராமப்புற குடும்பத்தால் கட்டப்படும் ஒவ்வொரு கழிப்பறைக்கும் 12,000 ரூபாய் மானியம் வழங்கினர். [3]

 
நாரி சக்தி விருது பெறுநர்கள். சுனிதா தேவி பின் வரிசையின் நடுவில் இருக்கிறார்

தேவி இப்பணியில் ஆர்வம் காட்டினார். இவர் ஒரு மேசனாக பயிற்சி பெற விரும்பினார். ஆனால் இவர் ஒரு பெண் என்பதால் இவரது மாமியார் ஆட்சேபித்தார். ஒரு மேசன் பணி என்பது ஆண்களால் மட்டுமே செய்யப்பட்டு வந்தது. இருப்பினும் பல மேசன்கள் சிறியதாக கழிப்பறைகளை உருவாக்கும் பணியை தங்களை கவனத்தில் கொள்ளச் செய்யும் என்று கருதினர். கணவரின் ஆதரவுடன் இவர் விடாமுயற்சியுடன் ஒரு "பெண் மேசன்" ஆனார். [2] இவருக்கு எதிர்ப்பும் இருந்தது. சிலர் உதய்புராவை விட்டு வெளியேறும்படி கேட்டுக் கொண்டனர். தான் கழிப்பறைகளை கட்டிவதை அவர்கள் ஆட்சேபித்ததைக் கண்டு தேவி திகைத்துப் போனார். ஆனால் பெண்கள் தெருவில் மலம் கழிப்பதை அவர்கள் எதிர்க்கவில்லை. [1]

விருது

தொகு

இவருக்கு 2019ஆம் ஆண்டில் நாரி சக்தி விருது விருது வழங்கப்பட்டது. [1] விருது வழங்கும் விழாவில் பிரதமர் தூய இந்தியா இயக்கத்தின் திட்டப் பணிகளைத் குறிப்பிட்டார். இது தேவியின் குறிப்பிட்ட பணிக்கு பாராட்டாக ஊக்கமளித்தது. [4] 2018 ஆண்டும் இதே போல விருது குடியரசுத் தலைவர் இல்லத்தில் சர்வதேச மகளிர் தினத்தன்று இந்தியாவின் குடியரசுத் தலைவர் வழங்கினார். [5] ஒரு வருடம் கழித்து 2019இல் கான்பூரில் இதே போன்று கழிப்பறைகள் கட்ட மேசனாக பயிற்சி பெற்ற மற்றொரு பெண் கலாவதி தேவியை குடியரசுத் தலைவர் கௌரவித்தார். [6]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "Award for woman who took up a trowel to turn mason". www.telegraphindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-26.
  2. 2.0 2.1 "Defying Gender Problems And Open Defecation, Sunita Devi From Jharkhand Is Training Women To Build Toilets | Swachh Warriors". NDTV-Dettol Banega Swasth Swachh India (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-02-28. பார்க்கப்பட்ட நாள் 2020-04-26.
  3. "MDWS Intensifies Efforts with States to Implement Swachh Bharat Mission". https://www.business-standard.com/article/government-press-release/mdws-intensifies-efforts-with-states-to-implement-swachh-bharat-mission-116031801084_1.html. 
  4. "PM interacts with recipients of Nari Shakti Puraskar". www.pmindia.gov.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-12.
  5. "Nari Shakti Puraskar - Gallery". narishaktipuraskar.wcd.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-04-11.
  6. "Meet Kalavati, The Mason With A Mission To Build Toilets In Her Village". The Better India (in அமெரிக்க ஆங்கிலம்). 2015-03-17. பார்க்கப்பட்ட நாள் 2020-04-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனிதா_தேவி_(கொற்றர்)&oldid=3643457" இலிருந்து மீள்விக்கப்பட்டது