சுனில் வர்மா
சுனில் வர்மா (தெலுங்கு: సునీల్ వర్మ), ஒரு தெலுங்கு நகைச்சுவை நடிகர். இவர் அந்தால ராமுடு (2006), திரைப்படத்தில் முதன்முறையாக கதையின் நாயகனாக நடித்தார், பிறகு 2010-ம் ஆண்டு இயக்குநர் எஸ். எஸ். ராஜமெளலியின் மரியாத ராமன்னா (2010) திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்தார். இவர் தன்னுரைய நகைச்சுவை நடிப்பிற்காக பல விருதுகளை வென்றுள்ளார். இவர் இயக்குநர் வீரபத்திரன் திரைப்படமான பூல ரங்கடு (2012) படத்திற்காக சிக்ஸ் பேக் ஏற்றியிருக்கிறார்.
சுனில் | |
---|---|
பிறப்பு | சுனில் வர்மா இந்துக்கூரி 28 பெப்ரவரி 1974 பீமாவரம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1996-தற்போது வரை |
ஆரம்பகால வாழ்க்கை
தொகு1974-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் திகதி ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பீமாவரத்தில் பிறந்தார், இவருடைய ஐந்தாவது அகவையில் தன்னுடைய தந்தையை பறிகொடுத்தார், தன்னுடைய தாயின் பராமரிப்பில் வளர்ந்தார்.
இவர் நடிகர், சிரஞ்சீவியின் தீவிர ரசிகர், தன்னுடைய பள்ளி பருவத்தில் சிறந்த நடனக்கலைஞராக வர வேண்டுமென்று எண்ணினார். இவர், வட்டார நடன் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளும் பெற்றார். இவருடைய ஆசிரியரின் அறிவுரையின்படி, கலைத்துறையில் இளங்கலை பட்டமும் பெற்றார். அதன்பிறகு, மேடை நாடகத்தில் நடிக்கத்தொடங்கினார். இவருடைய தோற்றத்தின் காரணமாக, இவருக்கும் வரும் வாய்ப்புகள் குறையத்தொடங்கியது.
1995-ம் ஆண்டு, இவர் திரைத்துறையில் நடனக்கலைஞராக நுழைந்தார். ஐதராபாத்தில் உள்ள ஒரு நடனப்பள்ளியிலும் இணைந்தார். இவருக்கு வில்லனாக நடிக்க அவா இருந்தபோதும், நகைச்சுவை நடிகராக நடிக்கவே வாய்ப்பு கிடைத்தது. இவர் இயக்குநர் திரிவிக்ரமின் நெருங்கிய நண்பராவார்.
திரை வாழ்க்கை
தொகுசுனிலின் திரை வாழ்க்கை ஆரம்ப காலத்தில் மிகவும் சிக்கலாக அமைந்தது. இவர் நடித்த செகன்ட் ஹேன்ட் பாதியில் நிறுத்தப்பட்டது.
ப்ரேம கதா மற்றும் சுயம்வரம் ஆகியவையே இவருடைய திரை வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழியிட்டது. சிறு நவ்வுட்டோ மற்றும் நுவ்வே காவாலிஆகிய படங்களில் முதலில் நடித்தார். இவற்றுல், நுவ்வே காவாலி திரைப்படம் முதலில் வெளியானது.[1]
2006-ம் ஆண்டு, ஆர்த்தி அகர்வாலுடம் இணைந்து, அந்தால ராமுடு திரைப்படத்தில் முதன்முறையாக கதையின் நாயகனாக நடித்தார் பிறகு எஸ். எஸ். ராஜமெளலி இயக்கத்தில், சலோனியுடன் இணைந்து மரியாத ராமன்னா திரைப்படத்திலும் கதையின் நாயகனாக நடித்தார். மரியாத ராமன்னா திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு சுனில் தெலுங்கு திரைத்துறையில் ஒரு கதாநாயகனாக வலம் வரத் தொடங்கினார். இவர் ராம் கோபால் வர்மாவுடன், கதா ஸ்கிரீன்ப்ளே தர்ஷக்தவம் அப்பலராஜு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். இத்திரைப்படம் பிப்ரவரி 18, 2012-ம் ஆண்டு வெளியானது.
சுனில் நடிப்பில் வெளியான பூல ரங்கடு திரைப்படம் உலகம் முழுவதிலும் 450 - திரையரங்கில் வெளியானது, நல்ல வரவேற்பையும் பெற்றது. தற்போது, ராமு வெட்ஸ் சீதா திரைப்பத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். பூல ரங்கடு திரைப்படத்திற்குப் பிறகு, பல இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும், சுனிலுடம் படம் செய்ய முன்வந்துள்ளனர். சுனில் நகைச்சுவையாளராக இருந்த போது, சுமார் 15 லட்சங்கள் சம்பளமாக பெற்றவர், தற்போது, 3 கோடி வரையிலும் உயர்த்தியுள்ளார்.
விருதுகள்
தொகு- சிறந்த நகைச்சுவையாளருக்கான நந்தி விருது - நுவ்வு நேனு (2001)
- சிறந்த நகைச்சுவையாளருக்கான நந்தி விருது - அந்துருடு (2005)
- சிறப்பு நடுவர் விருது - மரியாத ராமன்னா (2010)
- சிறந்த நகைச்சுவையாளருக்கான பிலிம்பேர் விருது (தெலுங்கு) - பேடாபாபு (2004)
திரைப்படங்கள்
தொகுவருடம் | பெயர் | கதாப்பாத்திரம் |
---|---|---|
2000 | பாப்பே நா ப்ராணம் | |
2001 | தோழி வலப்பு | |
1999 | சுயம்வரம் | |
2000 | நுவ்வே காவாலி | |
2002 | சொந்தம் | |
2001 | பேமிலி சர்க்கஸ் | |
2001 | மனசந்த நுவ்வே | |
2001 | நுவ்வு நாக்கு நச்சாவு | பந்தி |
2000 | சிறு நவ்வுட்டோ | |
2002 | நுவ்வு லேக்க நேனு லேனு | |
2002 | கலுசுக்கோவலனி | |
2001 | நுவ்வு நேனு | |
2002 | சந்தோசம் (2002) | |
2002 | நுவ்வே நுவ்வே | பாண்டு |
2002 | இந்த்ரா | |
2002 | மன்மதடு | பங்க் சீனு |
2003 | தாகூர் | பூஸ்ட் |
2003 | நீ மனசு நாக்கு தெலுசு | கபில் |
2003 | சிம்மாச்சலம் | |
2003 | நின்னே இஷ்டப்பட்டானு | |
2004 | வர்ஷம் | |
2004 | ஆர்யா | பஞ்சிங்க் பலாக்நாமா |
2004 | தொங்கா தொங்கடி | |
2004 | கொடுக்கு | |
2004 | நானி | விஜய் குமார் |
2004 | லக்ஷ்மி நரசிம்மா | |
2004 | மல்லீஸ்வரி | பத்து |
2004 | நேனுன்னானு | |
2004 | மாஸ் | |
2005 | அந்துருடு | |
2005 | நுவ்வஸ்தானன்டே நேனொத்தன்டானா | |
2005 | அத்தடு | |
2005 | பாலு ஏ.பி.சி.டி.ஈ.எப்.ஜி | |
2005 | ஜெய் சிரஞ்சீவா | தனுஷ்கோடி |
2006 | ராக்கி | |
2006 | ஸ்டாலின் | |
2006 | அந்தால ராமுடு | ராமு |
2006 | பெளர்ணமி | |
2006 | சிறீ ராமதாசு | |
2006 | பொமரில்லு | சட்டி |
2006 | லக்ஷ்மி | |
2007 | தீ | கத்தி |
2007 | யோகி | |
2007 | ஆட்டா | |
2007 | நவ வசந்தம் | |
2007 | துபாய் சீனு | |
2007 | ஆடவாரி மாட்டலாக்கு அர்த்தலு வேறுலு | |
2008 | புஜ்ஜிகாடு | |
2008 | நேனு மீக்கு தெலுசா | |
2008 | ஜல்சா | |
2008 | கதாநாயக்கடு | கட்டிங் கந்தா ராவ் |
2008 | கந்த்ரி | ரஜ்னி ஹாசன் |
2008 | சிந்தாக்காயல ரவி | பென்டுர்த்தி பாபு |
2008 | பலே தொங்கலு | |
2008 | கிருஷ்ணா | |
2008 | ரெடி | ஜானகி |
2008 | பருகு | |
2008 | கிங் | சரத் |
2009 | அ ஆ இ ஈ | |
2009 | ரெச்சிப்போ | |
2009 | சலீம் | |
2009 | ஏக் நிரஞ்சன் | |
2009 | ஆ ஒக்கடு | |
2009 | ஜோஷ் | |
2009 | மஹதீரா | |
2009 | மஷ்கா | |
2009 | துரோனா | |
2009 | ஓய்! | அபிஷேக் |
2011 | உடத்த உடத்த ஊச் | |
2010 | ஓம் சாந்தி | |
2010 | பிந்தாஸ் | |
2010 | ப்ரவாராக்யுடு | |
2010 | சம்போ சிவ சம்போ | |
2010 | மரியாத ராமன்னா | ராமு |
2010 | கலேஜா | |
2011 | கதா ஸ்கிரீன்ப்ளே தர்ஷக்தவம் அப்பலராஜு | அப்பலராஜு |
2011 | மிரப்பக்காய் | சாருகேஷா |
2011 | தொங்கலா முத்தா | |
2012 | பூல ரங்கடு | ரங்கா |
2012 | ஊ கொடத்தாரா? உளிக்கி படத்தாரா? | |
2012 | ப்பந்தி | |
2012 | ராதா கிருஷ்ணுடு |
குறிப்புகள்
தொகு- ↑ Sunil - Telugu Cinema interview (ஆங்கில மொழியில்)
வெளி இணைப்புகள்
தொகு- தெலுங்கு கேக்ஸ் பரணிடப்பட்டது 2012-04-19 at the வந்தவழி இயந்திரம் இணையதளத்தில் சுனில் பற்றி பரணிடப்பட்டது 2012-04-28 at the வந்தவழி இயந்திரம்(ஆங்கில மொழியில்)