நந்தி விருது

(நந்தி விருதுகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நந்தி விருது என்பது தெலுங்குத் திரைத்துறையினருக்காக ஆந்திரப் பிரதேச அரசு வழங்கும் உயரிய விருது ஆகும். நந்தி என்பது காளையை குறிக்கும் சொல்லாகும், இவ்விருதுகள், லெபாக்ஷி என்னும் ஆந்திராவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஒரு வகை நந்தியை குறிப்பிடுவதாகும்.

நந்தி விருதுகள்
விருது குறித்தத் தகவல்
பகுப்பு திரைப்படம்
நிறுவியது 1964
கடைசியாக வழங்கப்பட்டது 2010
வழங்கப்பட்டது ஆந்திரப் பிரதேச அரசு, இந்தியா
விவரம் தெலுங்குத் திரைத்துறையினருக்கான உயரிய விருது

நந்தி விருதுகள் நான்கு வகையாக பிரிக்கப்பட்டுள்ளன: தங்கம், வெள்ளி, வெண்கலம், மற்றும் செப்பு.

ஆண்டுதோறும் அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட குழுவானது இவ்விருதினை பெறும் திரைத்துறையினரைத் தேர்வு செய்யும். தேர்வு செய்யப்படுவர்களுக்கு ஹைதராபாத்தில் நடைபெறும் விழாவில் ஆந்திர முதலமைச்சரால் இவ்விருது வழங்கப்படும்.

இவ்விருதினைப் பெற அத்திரைப்படம் இந்தியத் திரைப்படத் தணிக்கை குழுவால் அதற்கு முந்தைய வருடத்தின் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31-க்குள் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

அதிக விருது பெற்ற சாதனையாளர்கள் மற்றும் திரைப்படங்கள்

தொகு

தங்கம்

தொகு
  • சிறந்த திரைப்படத்திற்கான விருது - தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம்
  • நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் திரைப்படத்திற்கான சரோஜினி தேவி விருது
  • சிறந்த குழந்தை நட்சத்திர விருது
  • சிறந்த ஆவணப்படம்
  • சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம்
வாழ்நாள் சாதனையாளர் விருது (தெலுங்கு திரைத்துறை)
  • இரகுபதி வெங்கையாஹ் விருது
வாழ்நாள் சாதனையாளர் விருது (இந்திய திரைத்துறை)
  • என். டி. ஆர் தேசிய விருது[1]
  • பி. என். ரெட்டி தேசிய விருது
  • நாகி ரெட்டி சக்ரபானி விருது
பி. என். ரெட்டி தேசிய விருது பெற்றவர்கள்
  • 2008 : கே. பி. திலக் (இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்)[2]
  • 2009 : கே. ராகவேந்திரா ராவ் (இயக்குநர்)[3]

வெள்ளி

தொகு
  • சிறந்த ஆவனப்படம்
  • சிறந்த கல்வியியல் திரைப்படம்
  • சிறந்த குடும்பத் திரைப்படத்திற்கான அக்கிநேனி விருது
  • சிறந்த இயக்குநர்
  • சிறந்த நடிகர்
  • சிறந்த நடிகை

வெண்கலம்

தொகு
  • சிறந்த துணை நடிகர்
  • சிறந்த துணை நடிகை
  • சிறந்த குணச்சித்திர நடிகர்
  • சிறந்த நகைச்சுவை நடிகர்
  • சிறந்த நகைச்சுவை நடிகை
  • சிறந்த வில்லன்
  • சிறந்த குழந்தை நட்சத்திரம் (ஆண்)
  • சிறந்த குழந்தை நட்சத்திரம் (பெண்)
  • சிறந்த அறிமுக இயக்குநர்
  • சிறந்த திரைக்கதை ஆசிரியர்
  • சிறந்த கதை ஆசிரியர்
  • சிறந்த சொல்லாடல் எழுத்தாளர்
  • சிறந்த பாடலாசிரியர்
  • சிறந்த புகைப்படக் கலைஞர்
  • சிறந்த இசையமைப்பாளர்
  • சிறந்த பின்னணி பாடகர்
  • சிறந்த பின்னணி பாடகி
  • சிறந்த தொகுப்பாளர்
  • சிறந்த கலை இயக்குநர்
  • சிறந்த ஒப்பனையாளர்
  • சிறந்த ஆடை வடிவமைப்பாளர்
  • சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்)
  • சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்)
  • சிறந்த நடனக் கலைஞர்
  • சிறந்த ஒலி தொகுப்பாளர்
  • சிறந்த சண்டை பயிற்சியாளர்
  • தெலுங்குத் திரைப்படங்களை சிறந்த முறையில் விமர்சனம் செய்தவர்
  • சிறந்த சிறப்பு விளைவுகள் (Best Special Effects)
  • தெலுங்குத் திரைப்படங்களை குறித்த சிறந்த புத்தகம்
  • சிறந்த அறிமுக நடிகர்
  • சிறந்த அறிமுக நடிகை
  • சிறப்பு நடுவர் விருது

இவற்றையும் பார்க்க

தொகு

குறிப்புகளும் மேற்கோள்களும்

தொகு
  1. "Raghupathi Venkaiah, Nagi Reddy, Chakrapani, B.N. Reddy and NTR National Awards announced…News,Telugu movie news, latest news, political news, Updated Movie News:Raghupathi Venkaiah, Nagi Reddy, Chakrapani, B.N. Reddy and NTR National Awards announced…". Myfirstshow.com. Archived from the original on 2012-03-13. பார்க்கப்பட்ட நாள் 2012-05-28.
  2. "Nandi Award for Ravi Teja, Swati". தி இந்து. 17 March 2010. Archived from the original on 23 மார்ச் 2010. பார்க்கப்பட்ட நாள் 22 March 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Prakash KL (2010-12-07). "B Saroja Devi bags NTR National Award". Entertainment.oneindia.in. Archived from the original on 2010-12-09. பார்க்கப்பட்ட நாள் 2012-05-28.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்தி_விருது&oldid=3908979" இலிருந்து மீள்விக்கப்பட்டது