சுபகிருது ஆண்டு
தமிழ் ஆண்டுகளான 60வதில் 36 ஆம் ஆண்டு
சுபகிருது ஆண்டு என்பது தமிழ்ப் புத்தாண்டில் பிரபவ ஆண்டு துவங்கி அறுபது ஆண்டுகள் என ஆண்டு வட்ட முறையில் வரக்கூடிய ஆண்டுகளில் முப்பத்தாறாம் ஆண்டாகும்.[1] இந்த ஆண்டை செந்தமிழில் நற்செய்கை என்றும் குறிப்பர்.
சுபகிருது ஆண்டு வெண்பா
தொகுசுபகிருது ஆண்டு எப்படிப்பட்டது என்பது குறித்து இடைக்காட்டுச் சித்தர் இயற்றியதாக கூறப்படும் அறுபது வருட வெண்பாவில்
சுபகிருது தன்னிலே சோழதே சம்பாழ்
அவமாம் விலைகுறையு மான்சாம் சுபமாகும்
நாடெங்கு மாரிமிகு நல்லவிளை வுண்டாகுங்
கேடெங்கு மில்லையதிற் கேள்
இந்தப் பாடலின்படி இந்த ஆண்டில், அதாவது சுபகிருது ஆண்டில் சோழநாடு பாழாகும்; மணப்பண்டங்களின் விலை குறையும். நல்ல விதமாக மழை பெய்து விளைச்சல் அதிகரிக்கும். மழை மிகுதியாகப் பெய்தாலும் அதனால் எந்த பாதிப்பும் இருக்காது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "சுபகிருது". பொருள். விக்சனரி. பார்க்கப்பட்ட நாள் 16 ஏப்ரல் 2020.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "இந்த 'சுபகிருது' ஆண்டு சோழ தேசம் பாழாகும்!-கடந்த காலம், நிகழ் காலம்!-தமிழ் வருட பொதுப் பலன்கள்!-உள்ளது உள்ளபடி..! – ULLATCHITHAGAVAL" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-14.