சுபவி ஆர்யா

இந்தியத் திரைப்பட இயக்குநர்

சுபவி ஆர்யா (Shubhavi Arya) என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குநர் ஆவார். 16 வயதில் அட்வென்ச்சர்ஸ் ஆஃப் மாலியா என்ற ஒட்டுருவப் பட அசைபட திரைப்படத்தை உருவாக்கியதற்காக இவர் மிகவும் பிரபலமானவர்.

சுபவி ஆர்யா
பிறப்புசுபவி ஆர்யா
7 அக்டோபர் 1998 (1998-10-07) (அகவை 25)
புது தில்லி, தில்லி, இந்தியா
கல்விமின்னசொட்டா பல்கலைக்கழகம், கனடியல் பன்னாட்டுப் பள்ளி, சிங்கப்பூர்
பணிஇயக்குநர், அனிமேட்டர்
செயற்பாட்டுக்
காலம்
2011–தற்போது

2015 ஆம் ஆண்டில், இவர் அட்வென்ச்சர்ஸ் ஆஃப் மாலியாவை இயக்கினார். இது 11 சர்வதேச திரைப்பட விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆத்திரேலியாவின் கலர்டேப் சர்வதேச திரைப்பட விழாவில் கௌரவ வெளிநாட்டு திரைப்பட விருது மற்றும் அமெரிக்காவின் குளோபல் இன்டிபெண்டண்ட் பிலிம் விருதுகளில் 18 வயதுக்குட்பட்ட சிறந்த திரைப்படப் படைப்பாளி உட்பட 3 விருதுகளைப் பெற்றார். [1] [2] [3]

ஆரம்ப வாழ்க்கையும் பின்னணியும் தொகு

சுபவி ஆர்யா இந்தியாவின் புது தில்லியில் பிறந்தார். சுபவியின் தந்தை ஜெய்பீர் சிங் ஆர்யா, இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார். இவரது தாயார், மினாட்சி ஆர்யா, கால்நடை மருத்துவர் ஆவார். பெற்றோர் இருவரும் இந்திய அரசு பணியில் உள்ளனர். இவரது தாயார், மினாட்சி ஆர்யா, வடக்கு டகோட்டா மாநில பல்கலைக்கழகத்தில் மென்பொருள் பொறியியலில் எம்பிஏ மற்றும் எம்எஸ் பட்டம் பெற்றவர். இவருக்கு சாத்விக் ஆர்யா என்ற தம்பி உள்ளார். [4]

கல்வி தொகு

சுபவி ஆர்யா தற்போது மினசோட்டா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் மற்றும் உளவியல் என இரட்டை இளங்கலை அறிவியல் பட்டப்படிப்புகளை படித்து வருகிறார். [5] சுபவி ஆர்யா சிங்கப்பூரில் உள்ள கனடியன் பன்னாட்டுப் பள்ளியில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளை படித்தார். [6] இவர் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளை வீட்டிலிருந்தே படித்தார். அவர் ஒரு தனித் தேர்வராக படித்து எடிக்சல் இன்டர்நேஷனல் ஏ-லெவலை தொடர்ந்தார். அவரது ஏ-லெவல் பாடங்களில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வணிகப் படிப்பு ஆகியவை அடங்கும். [7] 2015 சூலையில், தன் 16 ஆம் வயதில் 11 ஆம் வகுப்புத் தேர்வில், இவர் கணிதத்தில் ஏ-தரப் பரீட்சையில் ஏ* தரத்தைப் பெற்றார். மேலும் இயற்பியலில் ஏ.எஸ் லெவல் தேர்வில் தேர்ச்சி பெற்று ஏ கிரேடு பெற்றுள்ளார். தற்போது சுவீடிய மொழியையும் படித்து வருகிறார்.

2012 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் உள்ள கனடியன் பன்னாட்டுப் பள்ளியில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் S$63,962 மதிப்பிலான முழு தகுதி அடிப்படையிலான கல்வி உதவித்தொகையை சுபவி பெற்றார். [8] இது ஒரு இந்திய உயர்நிலைப் பள்ளி மாணவர் பெற்ற அதிகப்படியான உதவித்தொகையாகும். 2014 இல் சிங்கப்பூரில் உள்ள ஜெர்மன் ஐரோப்பிய பள்ளியில் 10,000 S$ மதிப்புள்ள 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான கல்வி உதவித்தொகையைப் பெற்றார். சிங்கப்பூரில் உள்ள குளோபல் இந்தியன் இன்டர்நேஷனல் பள்ளியில் 4,600,000 இந்திய ரூபாய் மதிப்புள்ள தகுதி அடிப்படையிலான ஐ.பி பட்டயப் படிப்பு உதவித்தொகைக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். [9] 2009 ஆம் ஆண்டில், இந்தியாவில் கணிதம், அறிவியல், ஆங்கிலத்தில் தேசிய அளவில் சிறந்து விளங்கியதற்காக சர்வதேச குழந்தைகள் சமபங்கு நிதியத்தால் 800 ரூபாய் மதிப்புள்ள கல்வி உதவித்தொகையையும் பெற்றார்.

இவர் பல கணித மற்றும் அறிவியல் போட்டிகளில் தீவிரமாக கலந்து கொண்டுள்ளார். இவர் அமெரிக்க கணிதப் போட்டி, சிங்கப்பூர் இளையோர் வேதியியல் ஒலிம்பியாட் மற்றும் இந்திய தேசிய மாநில இயற்பியல் ஒலிம்பியாட் (NSEP) ஆகியவற்றில் கலந்துகொண்டார். கனடாவின் வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் கேலி கணிதப் போட்டி மற்றும் கலோயிஸ் கணிதப் போட்டியையும் அவர் கலந்துகொண்டார்.

திரைப்பட வாழ்க்கை தொகு

சுபவீ ஆர்யாவுக்கு சிறு வயதிலிருந்தே கலை மற்றும் அசைபடங்களில் ஆர்வம் வளர்ந்துவந்தது. 12 வயதில், டென்மார்க் மற்றும் செர்பியாவில் நடந்த திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட "ZAP" என்ற அசைபட குறும்படத்தில் அனிமேட்டராக பணியாற்றினார். 2012 ஆம் ஆண்டில், டென்மார்க்கில் உள்ள Viborg, The Animation Workshop, Animationspædagogik மையத்திற்கு இவர் அழைக்கப்பட்டார், அங்கு இவர் தன் சகோதரருடன் இணைந்து Viborg அசைபட விழாவிற்காக ஒரு அசைபட திரைப்படத்தை உருவாக்கினார். பின்னர் இவர் தனது சொந்த அடுத்த படத்திற்காக ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார். மேலும் வழக்கத்திற்கு மாறாக நீண்ட காலத்திற்குப் பிறகு, இவர் 2015 இல் அட்வென்ச்சர்ஸ் ஆஃப் மாலியா குறும்படத்தை முடித்தார்.

அசைபடத்தின் பல்வேறு பாணிகளை இவர் பரிசோதித்துள்ளார். 16 வயதில் அசைபடத்தில் இவரது அசாதாரண திறமைக்காக சி.ஐ.என்.இ கோல்டன் ஈகிள் விருதுகளின் நடுவர் குழுவால் இவர் பாராட்டப்பட்டார். அண்டர் எக்ஸ்போஸ்டு திரைப்பட விழாவின் நடுவர் இவரது துடிப்பான திரைப்படப் படைப்பைப் பாராட்டினார்.

இவரது அட்வென்ச்சர்ஸ் ஆஃப் மலியா திரைப்படம் 30 க்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில், 10 க்கும் மேற்பட்ட நாடுகளில் திரையிட ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இயக்குநராக தொகு

திரைப்படம் ஆண்டு
அட்வென்ச்சர்ஸ் ஆஃப் மலியா 2015


மேற்கோள்கள் தொகு

  1. "Global Independent Film Awards Winners". Archived from the original on 5 January 2016. பார்க்கப்பட்ட நாள் 12 November 2015.
  2. "Washington News World". Archived from the original on 25 January 2016. பார்க்கப்பட்ட நாள் 12 November 2015.
  3. "Global Independent Film Awards August winners".
  4. "brother-sister duo Shubhavi and Saatvik Arya". Times of India.
  5. "Shubhavi Arya Official Website Resume". Shubhavi Arya.
  6. "Week at a Glance – TK – 23 November 2012". Canadian International School. 18 April 2023.
  7. "Shubhavi Arya". Shubhavi Arya.
  8. "Congratulations to Shubhavi Arya MUN Conference Verbal Commendation Award Recipient". Canadian international school. 18 April 2023.
  9. "shubhavi arya". shubhavi arya.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபவி_ஆர்யா&oldid=3896502" இலிருந்து மீள்விக்கப்பட்டது