சுபாசு பராலா
சுபாசு பராலா (Subhash Barala) இந்தியாவின் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1967 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 5 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். அரியானா மாநிலத்தில் பாரதிய சனதா கட்சியின் தலைவராகச் செயல்பட்டார். [1] 2014-2020 ஆம் ஆண்டு காலத்தில் கட்சியின் மாநில பிரிவின் முன்னாள் தலைவராகவும், பதேகாபாத்து மாவட்டத்தில் உள்ள தோகானா தொகுதியிலிருந்து வெற்றி பெற்று அரியானா சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினராகவும் திகழ்ந்தார். [2][3][4][5]
சுபாசு பராலா | |
---|---|
உறுப்பினர், அரியானா சட்டமன்றம் | |
பதவியில் 2014–2019 | |
முன்னையவர் | பரம்வீர் சிங் |
பின்னவர் | தேவேந்திர சிங் பாப்லி |
தொகுதி | தோகனா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 5 திசம்பர் 1967[1] தாங்கரா, அரியானா, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய சனதா கட்சி |
துணைவர் | தர்சனா[1] |
வாழிடம் | தாங்கரா கிராமம், தோகனா, பத்தேகாபாத்து மாவட்டம், அரியானா) இந்தியா[1] |
முன்னாள் கல்லூரி | எச்.எம்.எசு தொழிநுட்ப நிறுவனம், பெங்களுரு[1] |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | கட்டடப் பொறியாளர், விவசாயி |
மதம் | இந்து |
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் தோகானா சட்டமன்றத் தொகுதியை சனநாயக்கு சனதா கட்சி வேட்பாளர் தேவேந்தர் சிங் பாப்லியிடம் இழந்தார்.[6] தேவேந்தர் சிங் பாப்லி சுபாசு பராலாவை 52,302 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இது மாநிலத்தில் எந்தவொரு வேட்பாளரும் எதிர்கொண்ட இரண்டாவது மோசமான தோல்வியாகும்.[7]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுபராலா தோகானா தாலுகாவில் உள்ள தாங்க்ரா கிராமத்தில் பிறந்தார். பெங்களூருவில் உள்ள எச். எம். எசு பல்தொழில்நுட்ப நிறுவனத்தில் கட்டடப்பொறியியல் பாடத்தில் பட்டயம் படித்து முடித்தார்.
மேற்கோள்கள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Haryana MLA Official Profile of Subhash Barala
- ↑ "List of Ex State Presidents". BJPHaryana.org.
- ↑ Hindustan Times
- ↑ "Barely Corporate". Archived from the original on 7 February 2016. பார்க்கப்பட்ட நாள் 7 February 2016.
- ↑ "Jat leader Barala appointed Haryana BJP chief". Times of India. 24 November 2014.
- ↑ "Tohana Result: Major upset as BJP Haryana Chief Subhash Barala loses by 52,302 votes". India TV News. 24 October 2019. பார்க்கப்பட்ட நாள் 31 December 2019.
- ↑ "Haryana Assembly election results 2019: Here are the winners with highest and lowest vote margins". CNBC TV18. 25 October 2019. பார்க்கப்பட்ட நாள் 31 December 2019.