பத்தேஹாபாத் மாவட்டம்
பத்தேஹாபாத் மாவட்டம், இந்திய மாநிலமான அரியானாவின் மாவட்டங்களில் ஒன்று.[2] இதன் தலைமையகம் பத்தேஹாபாத்தில் உள்ளது.
பதேகாபாத் | |
---|---|
மாவட்டம் | |
அரியானா மாநிலத்தில் பதேகாபாத் மாவட்டத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள் (பதேகாபாத், அரியானா): 29°19′N 75°16′E / 29.31°N 75.27°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அரியானா |
வருவாய் கோட்டம் | ஹிசார் கோட்டம் |
நிறுவப்பட்டது | 15 சூலை 1997 |
தலைமையிடம் | பதேகாபாத் |
வருவாய் வட்டங்கள் | ரதியா, பதேகாபாத், தோகனா |
அரசு | |
• மாவட்ட ஆட்சியர் | அர்தீப் சிங்[1] |
பரப்பளவு | |
• Total | 2,538 km2 (980 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• Total | 9,42,011 |
• அடர்த்தி | 370/km2 (960/sq mi) |
Demographics | |
• எழுத்தறிவு | 67.92% |
• பாலின விகிதம் | 902 |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | HR-22 |
மக்களவைத் தொகுதி | சிர்சா மக்களவைத் தொகுதி |
இணையதளம் | https://fatehabad.nic.in |
வரலாறு
தொகுஇந்தோ-ஐரோப்பிய மொழி- பேசும் மக்கள் முதலில் சரஸ்வதி மற்றும் தர்சத்வதி நதிகளின் கரையில் குடியேறினர். ஹிசார் மற்றும் பதேஹாபாத்தின் பரந்த பகுதியை விரிவுபடுத்தினர். இந்த பகுதி பாண்டவர்களின் இராச்சியத்திலும் அவற்றின் வாரிசுகளாலும் ஆளப்பட்டிருக்கலாம். புராணங்களின்படி , பதேஹாபாத் மாவட்டத்தின் பகுதிகள் நந்தா பேரரசின் ஒரு பகுதியாகவே இருந்தன. ஹிசார் மற்றும் பதேஹாபாத்தில் அசோகன் தூண்களின் கண்டுபிடிப்பானது இந்த பகுதி மௌரிய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்தது என்பதைக் காட்டுகிறது. இந்தோ-கிரேக்க இராச்சியத்திற்கு எதிரான போரில் அக்ரோஹா பகுதி மக்கள் சந்திர குப்தா மௌரியர்க்கு உதவினார்கள். [சான்று தேவை]
மௌரியர்களினதும் சுங்கர்களினதும் வீழ்ச்சிக்கு பிறகு, ஆக்ராக்கள், யுதேயா ஆகிய பிராந்தியத்தின் பழங்குடியினர் தங்கள் சுதந்திரத்தை உறுதிப்படுத்தினர். ஆக்ராக்கள் பர்வாலா மற்றும் தலைமையகமான அக்ரோஹாவை உள்ளடக்கிய பிராந்தியத்தில் குடியேறினர். அவர்களிடம் நாணயங்களும் புழக்கத்தில் இருந்தன. கண்டுபிடிக்கப்பட்ட நாணய-அச்சுகளும் டெரகோட்டாக்களினதும் ஆய்வுகளின் படி, இப்பகுதி குஷன் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது.[சான்று தேவை] அனந்த் சதாஷிவ் அல்தேகரின் கூற்றுப்படி, கி.பி 2 ஆம் நூற்றாண்டின் இறுதியில் யுதேயாக்கள் சுதந்திரத்திற்கான இரண்டாவது முயற்சியை மேற்கொண்டனர். அவர்கள் தங்கள் தாயகத்தை விடுவிப்பதில் வெற்றி பெற்று குஷான்களை வெளியேற்றினர். இது அக்ரோஹா மவுண்டில் கண்டுபிடிக்கப்பட்ட முத்திரைகளின் ஆய்வுகளினால் அறியப்பட்டது. [சான்று தேவை]
11 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கஸ்னவிட் இந்த பகுதியில் அத்துமீறி நுழைந்தார்கள் . சுல்தான் மசூத் அக்ராஹாவை நோக்கி பயணங்களை நடத்தினார். மங்கோலிய ஊடுருவல்களுக்கு எதிராக இப்பகுதியைப் பாதுகாக்க சவ்கான்கள் சிறப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. இரண்டாம் தரெய்ன் போரில்(1192) மூன்றாம் பிருத்விராஜ் சவுகானின் தோல்விக்கு பின்னர் அக்ரோஹாவின் பகுதி குரிட் ஆட்சியின் கீழ் சென்றது. [சான்று தேவை]
1398 ஆம் ஆண்டில் திமூர் படையெடுத்தபோது ஃபதேஹாபாத்தை ஆக்கிரமித்தார். இது மக்களின் எதிர்ப்பின்றி கைப்பற்றப்பட்டது. கடைசியாக படையெடுப்பாளர் தோஹானாவை அடைந்தார். ஆனால் அந்த பகுதியில் தனது நிரந்தர ஆட்சியை அமைக்க முடியவில்லை. இந்த பகுதிகளை சூறையாடிய பின்னர் அவர் விரைவில் சமனாவுக்கு புறப்பட்டார். பதேஹாபாத்தின் பகுதிகள் முகலாயர்களான பாபர் மற்றும் ஹுமாயுனின் கட்டுப்பாட்டில் வந்தன. [சான்று தேவை]
1774 ஆம் ஆண்டில் பாட்டியாலாவின் மகாராஜா அமர் சிங் மற்றும் அவரது பிரபல மந்திரி திவான் நானுமால் ஆகியோர் ஃபதேஹாபாத் அருகே பிகார் கோட்டையை முற்றுகையிட்டு கைப்பற்றினர்.
பின்னர் மகாராஜா பட்டிகளின் ஆட்சியில் இருந்த ரானியா மீது படையெடுத்தார். தோஹானாவும் பாட்டியாலாவின் மன்னரால் கைப்பற்றப்பட்டது. ஆனால் 1781 இல் ஜிந்த் உடன்படிக்கைக்குப் பிறகு, ஃபதேஹாபாத் மற்றும் சிர்சா ஆகியவை பட்டிகளுக்கு வழங்கப்பட்டன. மீதமுள்ள பிரதேசங்கள் சீக்கியர்களால் தக்கவைக்க அனுமதிக்கப்பட்டன. 1798 ஆம் ஆண்டுகளில் ஜார்ஜ் தாமஸின் கட்டுப்பாட்டில் இருந்த அக்ரோஹா மற்றும் தோஹானா முக்கியமான பர்கானாக்கள் ஆகும். ஜார்ஜ் தாமஸை சீக்கிய - மராத்திய கூட்டமைப்பு விரட்டியடித்தபோது பிரெஞ்சு அதிகாரியான லெப்டினென்ட் போர்குவியன் மராத்தியர்கள் சார்பாக இந்த பகுதிகளை கட்டுப்படுத்தினார். அவர் தோஹானா மற்றும் ஹிசார் நகரங்களை மீண்டும் கட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் இந்த பகுதிகள் ஹன்சியின் முகலாய பிரபு இலியாஸ் பேக்கின் பொறுப்பின் கீழ் வந்தன. [சான்று தேவை]
நவம்பர் 1884 இல், சிர்சா மாவட்டம் அகற்றப்பட்டு ணிர்சா தெஹ்சில் உருவானது. 1889 ஆம் ஆண்டில், புத்லாடா என அழைக்கப்படும் பிரிக்கப்பட்ட தொகுதியை உருவாக்கும் 15 கிராமங்கள் கைதல் தெஹ்சில் வடிவமாக பதேஹாபாத் தெஹ்சிலுக்கு மாற்றப்பட்டன. 139 கிராமங்களைக் கொண்ட பார்வாலா தெஹ்சில் 1891 ஆம் ஆண்டு சனவரி 1 முதல் நடைமுறைக்கு வந்தது. அதன் பகுதி 3 தொடர்ச்சியான தெஹ்சில்களுக்கு இடையில் பகிரப்பட்டது. ஹன்சியிற்கு 13 கிராமங்களும், ஹிசாரிற்கு 24 கிராமங்களும் பதேஹாபாத்திற்கு 102 கிராமங்களும் பிரிக்கப்பட்டன. அதே நேரத்தில் 13 கிராமங்கள் ஹிசார் தெஹ்சிலில் பிவானி தெஹ்சிலில் மாற்றப்பட்டன. மேலும் பதேஹாபாத் தெஹ்சிலில் தோஹானாவின் துணை தெஹ்சில் நிறுவப்பட்டது. 1923 ஆம் ஆண்டில் தோஹானா துணை தெஹ்சில் பதேஹாபாத்திலிருந்து ஹிசார் தெஹ்சிலுக்கு மாற்றப்பட்டது. 1972 ஆம் ஆண்டில் தோஹானா துணை தெஹ்சில் மேம்படுத்தப்பட்டு தெஹ்சில் ஆனது. இரண்டு துணை தெஹ்சில்கள், ஒன்று பதேஹாபாத்தின் தெஹ்சிலிலும் மற்றொன்று ஹிசார் தெஹ்சிலின் அடம்பூரிலும் உருவாக்கப்பட்டது. 1978 ஆம் ஆண்டின் இறுதியில், ஹிசார் மாவட்டம் 486 கிராமங்களை உள்ளடக்கியது. இந்த கிராமங்களில் பதேஹாபாத்திற்கு 166 கிராமங்களும், ஹிசாரிற்கு 115 கிராமங்களும், ஹன்சியிற்கு 119 கிராமங்களும், தோஹானாவிற்கு 86 கிராமங்களுமாக பிரிக்கப்பட்டது. 1997 ஜூலை 15 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பதேஹாபாத் ஒரு முழுமையான மாவட்டமாக உருவானது. இப்போது மூன்று துணைப்பிரிவுகள், மூன்று தெஹ்சில்கள், மூன்று துணை தெஹ்சில்கள் உள்ளன. [சான்று தேவை]
புள்ளிவிபரங்கள்
தொகு2011 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின்படி பதேஹாபாத் மாவட்டத்தின் மக்கள் தொகை 942,011 ஆகும்.[3] சனத்தொகையின் அடிப்படையில் இது பிஜி[4] தேசத்திற்கு அல்லது அமெரிக்க மாநிலமான டெலாவேருக்கு சமமானதாகும்[5]. இது இந்தியாவின. 640 மாவட்டங்களில் 461 வது இடத்தைப் பெறுகிறது.[3] மாவட்டத்தில் சதுர கிலோமீட்டருக்கு 371 மக்கள் அடர்த்தி (960 / சதுர மைல்) உள்ளது. 2001–2011 காலப்பகுதியில் சனத் தொகை வளர்ச்சி விகிதம் 16.79% ஆகும். ஃபதேஹாபாத்தில் ஒவ்வொரு 1000 ஆண்களுக்கும் 903 என்ற பெண்கள் பாலின விகிதம் உள்ளது. இந்த மாவட்டத்தின் கல்வியறிவு விகிதம் 69.1% ஆகும்.[3]
2011 இந்திய மக்கட் தொகை கணக்கெடுப்பின் போது மாவட்டத்தில் 57.98% மக்கள் இந்தி மொழியையும் 41.29% பஞ்சாபியையும் முதன்மை மொழியாகப் பேசினார்கள்.[6]
அரசியல்
தொகுஇந்த மாவட்டம் டோஹானா, பதேகாபாத், ரத்தியா ஆகிய சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் தலா ஒருவர் என்ற முறையில் மாநில சட்டமன்றத்துக்காக மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த மாவட்டம் சிர்சா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2]
சான்றுகள்
தொகு- ↑ "District Fatehabad | Haryana". பார்க்கப்பட்ட நாள் 9 July 2018.
- ↑ 2.0 2.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-02-13.
- ↑ 3.0 3.1 3.2 "Indian Districts by Population, Sex Ratio, Literacy 2011 Census". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2019-11-07.
- ↑ "The World Factbook — Central Intelligence Agency". www.cia.gov. Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2019-11-07.
- ↑ "US Census Bureau". web.archive.org. 2013-10-19. Archived from the original on 2011-08-17. பார்க்கப்பட்ட நாள் 2019-11-07.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "Census of India Website : Office of the Registrar General & Census Commissioner, India". www.censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2019-11-07.