சுபூர் பார்த்தசாரதி
சுபூர் பார்த்தசாரதி (பிறப்ப்: சுபூர் முகசேத் 1911 - 10 அக்டோபர் 1966), என்பவர் ஒரு இந்திய கல்வியாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராவார். எத்திராஜ் மகளிர் கல்லூரியில் முதல் துணைவேந்தராக இருந்த இவர், 1960 முதல் 1966 வரை இவர் இந்தியப் நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றினார்.
சுபூர் பார்த்தசாரதி | |
---|---|
பிறப்பு | சுபூர் முகசேத் 1911 கோழிக்கோடு |
இறப்பு | 10 அக்டோபர் 1966 நியூயார்க் |
பணி | கல்வியாளர், கல்லூரி நிர்வாகி |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுசுபூர் முகசேத் கோழிகோட்டில் பார்சி சமூகத்தில் ஒரு முக்கிய குடும்பத்தில் கோடாதாட் முகசேத்தின் மகளாக பிறந்தார். [1] [2] இவரது ஒரே சகோதரர் இரண்டாம் உலகப் போரில் இறந்தார். [3] இவர் சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றார். மேலும் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார், [4] 1936 இல் முனைவர் பட்டமும் பெற்றார். [5]
தொழில்
தொகுபார்த்தசாரதி மதராசின் இராணி மேரி கல்லூரியில் ஆங்கிலம் கற்பித்தார். இவர் எதிராஜ் மகளிர் கல்லூரியின் முதல் துணைவேந்தராகி 1948 முதல் 1952 வரை பணியாற்றினார். இவருக்கு அடுத்து மோனா ஹென்ஸ்மேன் துணைவேந்தராக பதவி வகித்தார். [6] 1952 ஆம் ஆண்டில், இவர் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளைப் நுண்ணாய்வு செய்ய அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டார். பார்த்தசாரதி 1960 முதல் 1966 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகு1939 ஆம் ஆண்டில், சுபூர் முகசேத் பத்திரிகையாளரும் இராஜதந்திரியுமான கோபாலசாமி பார்த்தசாரதியை ஆக்ஸ்போர்டில் சந்தித்த பின்னர் திருமணம் செய்து கொண்டார். [7] [8] இந்த இணையரின் ஒரே மகனான, அசோக் பார்த்தசாரதி (1940–2019), அவர் தனது பெற்றோரை அரசு பணி மற்றும் கல்வி போன்றவற்றில் வழிதொடர்ந்தார். [9] இவரது கணவர் ஐக்கிய நாடுகள் அவையில் இந்தியாப்பபிரதிநிதியாக இருந்தபோது இவர் 1966 ஆம் ஆண்டில் நியூயார்க்கில் இதயம் மற்றும் சிறுநீரக நோய்களால் இறந்தார்.
நடிகரும் நாடக எழுத்தாளருமான கிரீஷ் கர்னாட் இவரது சகோதரர் மகளின் கணவர்; மற்றும் பத்திரிகையாளர் ரகு கர்னாட் இவரது பேரன். [4]
குறிப்புகள்
தொகு
- ↑ "The Mugaseths of Calicut". Calicut Heritage Forum. June 21, 2015. பார்க்கப்பட்ட நாள் 2020-10-12.
- ↑ "Thiruvananthapuram: Milk man of India, Calicut Parsis and World War". Deccan Chronicle (in ஆங்கிலம்). 2016-10-23. பார்க்கப்பட்ட நாள் 2020-10-12.
- ↑ Srinivasan, Krishnan (2015-09-13). "Of battles long ago". The Statesman (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2020-10-14. பார்க்கப்பட்ட நாள் 2020-10-12.
- ↑ 4.0 4.1 "The first Principal". 2015-09-07. https://www.thehindu.com/features/metroplus/society/the-first-principal/article7685506.ece.
- ↑ "Mrs. Parthasarathi, Wife Of India's Delegate to U.N.". 1966-10-11. https://www.nytimes.com/1966/10/11/archives/mrs-parthasarathi-wife-of-indias-delegate-to-un.html.
- ↑ "Former Principals". Ethiraj College for Women. பார்க்கப்பட்ட நாள் 2020-10-12.
- ↑ Gandhi, Gopalkrishna (2018-03-22). "Gopalaswami Parthasarathi: Sportsman, diplomat and troubleshooter, a man of many parts". Hindustan Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-12.
- ↑ Parthasarathi, Ashok (2018). "Down the Memory Lane: Recalling India's Nation-Building Exercise" பரணிடப்பட்டது 2020-10-17 at the வந்தவழி இயந்திரம் Indialics.
- ↑ Parthasarathi, Ashok (30 June 2018). "Indira Gandhi's decision to hold the Indian Army back from Peshawar in 1971". The Caravan (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-12.