சுபைதா பேகம்
சுபைதா பேகம் தன்ராஜ்கிர் (Zubeida) (1911–1988) ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் இந்தியாவின் முதல் பேசும் படமான ஆலம் ஆரா (1931) வில் நடித்துள்ளார்.[1] மேலும், "தேவதாஸ்" (1937), மற்றும் சாகர் மூவிடோனின் "மேரி ஜான்" போன்ற வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
சுபைதா | |
---|---|
சுபைதா மற்றும் மாஸ்டர் வித்தல் ஆலம் ஆரா (1931). | |
பிறப்பு | சுபைதா பேகம் 1911 சூரத்து, மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
இறப்பு | செப்டம்பர் 1988 (அகவை 76–77) மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1922–1949 |
பெற்றோர் | ஃபாத்திமா பேகம் நவாப் சித்தி இப்ராஹிம் மொஹமத் யாகுட் கான் III |
வாழ்க்கைத் துணை | மகராஜ் நர்சிங்கிர் தன்ராஜ்கிர் கியான் பஹதூர் |
பிள்ளைகள் | 2 |
உறவினர்கள் | சுல்தானா(சகோதரி) ரியா பிள்ளை(பேத்தி) |
இளமைப் பருவம்
தொகுசுபைதா, மேற்கு இந்தியா குசராத்து மாநிலத்திலுள்ள சூரத்தில் பிறந்தார். சுபைதா ஒரு முஸ்லீம் இளவரசி, நவாப் சித்தி இப்ராஹிம் முஹம்மது யாகூத் கான் III (சச்சின் மாநிலம்) மற்றும் பாத்திமா பேகத்திற்கு மகளாகப் பிறந்தார்.. அவளுக்கு இரண்டு சகோதரிகள் இருந்தனர், சுல்தானா மற்றும் ஷேலாடி இருவரும் நடிகைகள். மரியாதைக்குரிய குடும்பங்களில் இருந்து வரும் பெண்களுக்கு பொருத்தமான தொழிலாக திரைப்படத்தைக் கருதாத சமயத்தில் ராயல்டியை மட்டும் அனுமதித்த நேரத்தில் ஒரு இளம் வயதில் திரைப்படங்களில் நுழைந்த சில பெண்களில் ஒருவராக இருந்தார்.
தொழில்
தொகு"கோகினூர்" படத்தில் அறிமுக நடிகையாக நடிக்கும்போது சுபைதாவிற்கு வயது 12 மட்டுமே. 1920 களில் அவர் சுல்தானா (நடிகை)வுடன் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சுல்தானா இந்திய சினிமாவின் அழகான நடிகைகளில் ஒன்றாகவும் இருந்தார். 1924 இல் வெளிவந்த "கல்யாண் கஜினா" இரண்டு பேரும் நடித்த படங்களில் ஒன்றாகும். இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான சுபைதாவின் முதல் வெற்றிப் படமான 'வீர் அபிமன்யு' படத்தில், இவரது தாயார் பாத்திமா பேகமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சொந்த வாழ்க்கை
தொகுசுபைதா ஐதராபாத்து "மகாராஜா நர்சிங்கிர் தன்ராஜ்கிர் கியான் பஹதூர்" அவர்களை மணந்து கொண்டார். இவர் ஹுமாயூன் தன்ராஜ்கிர், மற்றும் துர்ரேஷ்வர் தன்ராஜ்கிர் ஆகியோரின் தாய். துர்ரேஷ்வர் விளம்பர மாதிரியான ரியா பிள்ளையின் தாய் ஆவார்.
இறப்பு
தொகுசுபைதா தன் இறுதிக் காலத்தை குடும்ப அரண்மனையான "தன்ராஜ் மஹாலில்" கழித்தார். இவர் 1988இல் இறந்தார்.[2]
குறிப்புகள்
தொகு- ↑ First Talkie Actress – Rani Zubieda பரணிடப்பட்டது 2014-10-20 at the வந்தவழி இயந்திரம் www.downmelodylane.com.
- ↑ With Rani Zubeida Dharajgir's death:Curtain comes down on silent movie. The Free Press Journal]] 17 October 1988 பரணிடப்பட்டது 16 சூலை 2011 at the வந்தவழி இயந்திரம்