சுபோத்து ராய்
சுபோத்து ராய் (Subodh Roy) இந்தியாவைச் சேர்ந்த புரட்சிகர சமதர்மவாதியாவார். 1915 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். சூங்குராய் என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். இந்திய சுதந்திர இயக்கத்தில் செல்வாக்கு பெற்றவராகவும் ஓர் அரசியல்வாதியாகவும் திகழ்ந்தார். .
சுபோத்து ராய் Subodh Roy | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1915 சிட்டகாங் மாவட்டம், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (Now வங்காளதேசம்) |
இறப்பு | 26 ஆகத்து 2006 கொல்கத்தா, இந்தியா |
தேசியம் | வங்காளம், இந்தியர் |
அரசியல் கட்சி | மார்க்சியம் |
தொழில் | இந்திய விடுதலை இயக்கம் செயற்பாட்டாளர், புரட்சியாளர் |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுசுபோத்து ராய் 1915 ஆம் ஆண்டு பிரிக்கப்படாத வங்காளத்தில் உள்ள சிட்டகாங்கில் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தார். 14 வயதில், புரட்சித் தலைவர் சூர்யா சென் (மாசுடர்டா) தலைமையில் 1930-31 ஆம் ஆண்டில் சிட்டகாங் ஆயுதக் களஞ்சியத் தாக்குதலில் பங்கேற்ற இளையவர் என்ற சிற்ப்புக்குரியவராகவும். தண்டனை விதிக்கப்பட்ட முதல் தொகுதியில் இடம்பெற்றவராகவும் சுபோத்து ராய் இருந்தார்.[1]
விசாரணைக்குப் பிறகு, சுபோத்து ராய் 1934 ஆம் ஆண்டு போர்ட் பிளேயரில் உள்ள செல்லுலார் சிறைக்கு நாடு கடத்தப்பட்டார் [1]
1940 ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுதலையான பிறகு, அவர் இந்தியப் பொதுவுடமைக் கட்சி அரசியலில் சேர்ந்தார். இந்திய பொதுவுடமைக் கட்சியின் உறுப்பினராகவும் சேர்ந்தார். சுதந்திரத்திற்குப் பிறகு, இவர் கல்கத்தாவுக்கு மாறினார். கட்சியின் மாகாண மையத்தில் முழுநேர ஊழியராக சேர்ந்தார். 1964 ஆம் ஆண்டில் இந்திய பொதுவுடமைக் கட்சி பிளவுபட்ட பிறகு, சுபோத்து ராய் இந்திய பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சியம்) கட்சியுடன் இணைந்தார். இக்கட்சியின் மேற்கு வங்க மாநிலக் குழுவில் நீண்டகாலமாக உறுப்பினராக இருந்தார்.[2]
சுபோத் ராய் பொதுவுடமை கட்சி இயக்கத்தின் வரலாற்றில் ஒரு பெரிய அறிவார்ந்த பங்களிப்பைச் செய்தார். தேசிய ஆவணக் காப்பகத்தில் ஆராய்ச்சிக்குப் பிறகு, "இந்தியாவில் கம்யூனிசம்: வெளியிடப்படாத ஆவணங்கள்" என்ற புத்தகத்தைத் திருத்தினார்.[2]
தெல்சாத்து இல்வாடே இளம் வயது சுபோத்து ராய் (சூங்கு) வேடத்தில் நடித்தார். அதே சமயம் விஜய் வர்மா பெதபிரதா பெயின் திரைப்படமான சிட்டகாங்கில் இவரது வயதானவர் வேடத்தில் நடித்தார்.[3]
2006 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 26 ஆம் தேதியன்று சுபோத் ராய் காலமானார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Model revolutionary". தி இந்து. 1930-04-18.
- ↑ 2.0 2.1 "Comrade Subodh Roy Passes Away". Pd.cpim.org. 2006-09-03. Archived from the original on 2011-06-15. பார்க்கப்பட்ட நாள் 2010-11-01.
- ↑ "Bedabrata Pain sacrificed a lot for 'Chittagong': Anurag Kashyap". 8 October 2012.