சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை
சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை என்பது தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் ஆலாபுரத்தை அடுத்த கோபாலபுரத்தில் உள்ள ஒரு கூட்டுறவு சர்க்கரை ஆலை ஆகும்.[1] இந்த ஆலைக்கு விடுதலைப் போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா நினைவாக அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ஆலை தருமபுரி நகரிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவிலும் சேலத்திலிருந்து 50 கி.மீ தொலைவிலும் சேலம் வேலூர் சாலையிலிருந்து 5 கி.மீ தொலைவிலும் உள்ளது. இந்த ஆலை 1990, மே. 13 அன்று அன்றைய முதல்வர் மு. கருணாநிதி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, சுமார் 33 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டு 01-10-1992 அக்டோபர் 1 அன்று இந்த ஆலை தனது முதல் அரவையைத் தொடங்கியது. இந்த ஆலை 2500 மெட்ரிக் டன் கரும்பு அரவைத்திறன் கொண்டது. இது சுமார் 96.14 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஆலை ஐ.எஸ்.ஓ 9001-2000 தரச்சான்றிதழ் பெற்றது.
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "சுப்பிரமணிய சிவா சர்க்கரை ஆலை வளாகத்தில் தீ விபத்து". செய்தி. தினமணி. 25 சனவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 8 பெப்ரவரி 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)