சுமத்திரா பறக்கும் அணில்
சுமத்திரா பறக்கும் அணில் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | கைலோபீட்சு
|
இனம்: | கை. வின்சுடோனி
|
இருசொற் பெயரீடு | |
கைலோபீட்சு வின்சுடோனி (சோடி, 1949) |
சுமத்திரா பறக்கும் அணில் (Sumatran flying squirrel)(கைலோபீட்சு வின்சுடோனி) என்பது சுமத்திரா தீவில் மட்டுமே காணப்படும் பறக்கும் அணில் சிற்றினம் ஆகும். இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்க செம்பட்டியலில் தரவு குறைபாடு எனப் பட்டியலிடப்பட்டுள்ளது. இது முதலில் 1949-ல் கண்டுபிடிக்கப்பட்டது. இச்சிற்றினம் ஒரு மாதிரியிலிருந்து மட்டுமே அறியப்படுகிறது. இது ஒரு இரவுநேர, மரத்தில் வாழக்கூடிய உயிரினம் ஆகும். இதன் வாழ்நாளின் பெரும்பகுதியை விதானத்தில் கழிக்கிறது. சுமத்திரா பறக்கும் அணில் குறிப்பிட்ட வரம்பில் வாழ்வதாலும், மரங்களை வெட்டுவதால் வாழ்விட இழப்பாலும் அச்சுறுத்தப்படுகிறது. மற்ற பறக்கும் அணில்களைப் போலல்லாமல், இதன் வாலுடன் இணைக்கும் சவ்வு இல்லை.
மேற்கோள்கள்
தொகு- ↑ Lee, B. (2016). "Hylopetes winstoni". IUCN Red List of Threatened Species 2016: e.T10608A22244199. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T10608A22244199.en. https://www.iucnredlist.org/species/10608/22244199. பார்த்த நாள்: 12 November 2021.