சுரங்கங்கள் அமைச்சகம்

சுரங்க அமைச்சகம் என்பது இந்திய அரசின் அமைச்சகஙகளில் ஒன்றாகும். இந்தியாவில் சுரங்கங்கள் தொடர்பான சட்டங்களை உருவாக்குவதற்கும், நிர்வாகத்துக்கும் முதன்மை அமைப்பாக இந்த அமைச்சகம் செயல்படுகிறது. அமைச்சகத்தின் கேபினெட்[தெளிவுபடுத்துக] அமைச்சர் பிரகலாத ஜோஷி சூன் 2019 முதல் பணியாற்றி வருகிறார்.[2]

சுரங்கங்கள் அமைச்சகம்
துறை மேலோட்டம்
ஆட்சி எல்லைஇந்திய அரசு
தலைமையகம்புது தில்லி
ஆண்டு நிதி1,669.52 (US$21) (2018-19)[1]
அமைப்பு தலைமை
வலைத்தளம்https://mines.gov.in

செயல்பாடுகள் தொகு

சுரங்கம் மற்றும் உலோகவியலில் பயன்படுத்தப்படும் கனிமங்களை (இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியம் தவிர) ஆய்வு செய்வதற்கும் சுரங்க அமைச்சகம் பொறுப்பாகும். சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957 (எம்எம்டிஆர் சட்டம்) நிர்வாகத்திற்காக அலுமினியம், தாமிரம், துத்தநாகம், ஈயம், தங்கம், நிக்கல் போன்ற இரும்பு அல்லாத உலோகங்களையும், நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி போன்றவைகளை இது சுரங்கங்களில் தேடுகிறது. ஒரு தலைமைஅலுவலகம், ஒரு துணை அலுவலகம், மூன்று பொதுத்துறை நிறுவனங்கள் (PSU), மூன்று தன்னாட்சி அமைப்புகள் மற்றும் சுரங்க அமைச்சகத்தின் ஆதரவின் கீழ் செயல்படும் கூடுதல் முகமைகள் உள்ளது.

இணைக்கப்பட்ட அலுவலகங்கள் தொகு

பொதுத்துறை நிறுவனங்கள் தொகு

தன்னாட்சி அமைப்புகள் தொகு

  • ஜவகர்லால் நேரு அலுமினியம் ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் வடிவமைப்பு மையம் (JNARDDC), நாக்பூர்[3]
  • தேசிய பாறை இயந்திரவியல் நிறுவனம் (NIRM), கோலார்[4]
  • தேசிய சுரங்கத் தொழிலாளர்கள் நல நிறுவனம் (NIMH), நாக்பூர்[5]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு