சுரேந்திர இரானந்தானி
சுரேந்திர இரானந்தானி (Surendra Hiranandani) இந்தியாவில் பிறந்த ஓர் தொழில்முனைவோர் ஆவார். இரானந்தானி குழுமத்தின் இணை நிறுவனராகவும் நிர்வாக இயக்குனராகவும் இவர் பொறுப்பில் உள்ளார். நிலம் வாங்கல் விற்றல் வணிகத்தில் இரானந்தானி குழுமம் ஈடுபட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில், இவர் தனது இந்திய குடியுரிமையை கைவிட்டு சைப்பிரசு நாட்டின் குடிமகனாக ஆனார்.[1] சுரேந்திரா 2018 ஆம் ஆண்டு நிலவரப்படி $1.3 பில்லியன் நிகர மதிப்புடன் போர்ப்சு உலகளாவிய கோட்டீசுவரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.[2]
சுரேந்திர இரானந்தானி Surendra Hiranandani | |
---|---|
பிறப்பு | 1954 மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
பணி | தொழிலதிபர் |
அறியப்படுவது | இரானந்தானி இல்லம் |
பெற்றோர் | இலக்குமல் இரானந்து இரானந்தானி |
துணைவர் | பிரித்தி பாட்டியா - இரானந்தானி (விவாகரத்து), அல்கா பாட்டியா - இரானந்தானி (திருமணம் 2012) |
பிள்ளைகள் | 3 |
உறவினர்கள் | அக்சய் குமார் |
வலைத்தளம் | |
Website |
ஆரம்பகால வாழ்க்கை.
தொகுசுரேந்திர இரானந்தானி 1954 ஆம் ஆண்டில் மும்பையில் பிறந்தார்.[3] இவரது தந்தை இலக்குமல் இரானந்து இரானந்தானி, ஒரு காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். இவருக்கு இந்திய அரசு பத்ம பூசண் விருது வழங்கி சிறப்பித்தது. இவருக்கு நவீன் மற்றும் நிரஞ்சன் என்ற இரண்டு மூத்த சகோதரர்கள் உள்ளனர். இரானந்தானி குடும்பம் சிந்தி பாரம்பரியத்தைச் சேர்ந்ததாகும்
தொழில் வாழ்க்கை
தொகுஇரானந்தானி குழும நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநராக இவர் பணியாற்றினார். இரானந்தானி 2005 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 7 ஆம் தேதி முதல் 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 வரை புரோவாக் (இந்தியா லிமிடெட்) நிறுவனத்தின் நிர்வாகத் தொடர்பற்ற சுயாதீன இயக்குநராக பணியாற்றினார்.[4]
சுரேந்திரா தனது சகோதரர் நிரஞ்சனுடன் இணைந்து 1985 ஆம் ஆண்டில் மும்பையின் போவாய் பகுதியில் 250 ஏக்கர் நிலத்தை வாங்கி இரானந்தானி கார்டன்சு என்ற பெயரில் நிலம் வாங்கல் விற்றல் தொழிலைத் தொடங்கினார்.[5]
மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபரும் இரானந்தானி குழுமத்தின் உரிமையாளருமான சுரேந்திர இரானந்தானி, பெங்களூர் சென்னை மற்றும் ஐதராபாத்து நகரங்களில் 250 ஏக்கர் நிலத்தை ரூ 800 கோடிக்கு வாங்கியதாக அறியப்படுகிறது. பெங்களூரில் 120 ஏக்கர், சென்னையில் 110 ஏக்கர் மற்றும் ஐதராபாத்தில் 20 ஏக்கர் என மூன்று பகுதிகளில் நிலங்களை உள்ளடக்கியது இந்த நிறுவனமாகும். விரைவில் இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளின் நிலம் வாங்கல் விற்றல் சந்தையில் நுழையவும் இக்குழுமம் திட்டமிட்டுள்ளது.[6]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுசுரேந்திர இரானந்தானி மும்பையில் வசித்தார். இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார். இவரது முதல் மனைவி பிரித்தி இரானந்தானியாவார். இத்தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இரண்டு மகள்களின் பெயர் நேகா மற்றும் கோமல் என்பதாகும். ஒரு மகன் பெயர் அர்சு என்பதாகும். சுரேந்திராவும் பிரித்தியும் 2009 ஆம் ஆண்டில் விவாகரத்து செய்தனர். குழந்தைகள் தங்கள் தாயுடன் வசிக்கின்றனர்.[7] வர்ச்சினியா பல்கலைக்கழக முன்னாள் மாணவரான நேகா தற்போது இரானந்தானி இல்லத்தின் இயக்குநராக உள்ளார்.[8]
2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சுரேந்திரா மீண்டும் திருமணம் செய்து கொண்டார். விவாகரத்து பெற்ற அல்கா பாட்டியாவின் இரண்டாவது கணவராக இருந்தார். அல்கா பாட்டியா தனது முதல் திருமணத்தால் ஒரு மகளின் தாயாக இருந்தார். அல்கா நடிகர் அக்சய் குமாரின் இளைய சகோதரி ஆவார்.[9][10]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Power of passport: Why did billionaire Surendra Hiranandani ditch India for Cyprus?". The Economic Times. 2018-04-19. https://economictimes.indiatimes.com/news/company/corporate-trends/power-of-passport-why-did-billionaire-surendra-hiranandani-ditch-india-for-cyprus/articleshow/63826128.cms.
- ↑ "Surendra Hiranandani". Forbes. 3 March 2018. https://www.forbes.com/profile/surendra-hiranandani/.
- ↑ "Surendra Hiranandani - Founder & MD of House of Hiranandani". surendrahiranandani.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-10-22.
- ↑ "Surendra L. Hiranandani B.Com.: Executive Profile & Biography". Bloomberg. பார்க்கப்பட்ட நாள் 2018-10-22.
- ↑ "Powai's Hiranandani Garden project completes 25 years" (in en-US). Daily News and Analysis. 2015-01-03. http://www.dnaindia.com/mumbai/report-powai-s-hiranandani-garden-project-completes-25-years-2049114.
- ↑ "Realty slowdown acute only in high price segment: Surendra Hiranandani, MD, House of Hiranandani". Economic Times. பார்க்கப்பட்ட நாள் 2018-10-22.
- ↑ "Hiranandanis do the marry-go-round". Mumbai Mirror. Feb 17, 2010. பார்க்கப்பட்ட நாள் 22 October 2018.
- ↑ "Neha Hiranandani | Founder House of Hiranandani". houseofhiranandani.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-10-22.
- ↑ "Take a VOW". Hindustan Times. 25 December 2012. பார்க்கப்பட்ட நாள் 2018-10-22 – via PressReader.
- ↑ "Akshay at sister's wedding". photogallery.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2018-10-22.