சுர்ஜித் சிங் ரண்டாவா

இந்திய வளைதடி விளையாட்டு வீரர்

சர்தார் சுர்ஜித் சிங் ரண்டாவா ( Sardar Surjit Singh Randhawa ( அக்டோபர் 10, 1951 - சனவரி 6, 1984) என்பவர் இந்தியாவுக்காக ஆடிய ஒரு வளைதடி வீரர். இவர் இந்திய தேசிய வளைதடி அணியில் இடம்பெற்று 1976 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு ஆடினார்.[1] இந்திய வளைதடி பந்தாட்ட அணியின் தலைவராகவும் இருந்தார்.

சுர்ஜித் சிங்
Surjit Singh
தனிநபர் தகவல்
பிறப்பு(1951-10-10)10 அக்டோபர் 1951
சுர்ஜித் சிங் வாலா, பட்டாலா, குர்தாஸ்பூர், பஞ்சாப், இந்தியா
இறப்பு6 சனவரி 1984(1984-01-06) (அகவை 32)
கரக்பூர், ஜலந்தர், பஞ்சாப், இந்தியா
உயரம்5'11" (180 செ.மீ)

துவக்க வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

இவர் பஞ்சாப்பின் பட்டாலாவில் பிறந்தார். அதே ஊரில் உள்ள குருநானக் பள்ளியில் படித்தார். ஜலந்தரில் உள்ள லையால்பூர் கல்சா கல்லூரியில் படித்தபோது பல்கலைக்கழக அளவிலான வளைதடி பந்தாட்ட அணியில் ஆடத்துவங்கினார்.[2]

வாழ்க்கை

தொகு

கல்லூரி வாழ்க்கைக்குப் பின் பஞ்சாப் காவல்துறையில் சில ஆண்டுகள் பணிபுரிந்தார். 1972 ஆண்டு ஆம்ஸ்டர்டம் நகரில் நடந்த உலக வளைதடி போட்டியில் விளையாடினார். அதே ஆண்டு நடந்த கோடைக்கால ஒலிம்பிக், 1974 மற்றும் 1978 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், 1976 கோடைக்கால ஒலிம்பிக், 1978 இல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேங்காக்கில் விளையாடினார், மேலும் 1982 இல் உலக கோப்பை போட்டிகள் மும்பையில் கலந்து கொண்டார். 1975 இல் கோலாலம்பூரில் நடந்த உலக கோப்பை போட்டியில் வென்ற அணியில் இருந்தார். அவர்அடுத்த ஆண்டு 1973 இல் உலக வளைத்தடி அணி XI மற்றும் அனைத்து நட்சத்திர வளைத்தடி XI அணியில் சேர்க்கப்பட்டார். மேலும் இவர் இரண்டிலும் இருந்தது அதிக கோல் அடித்தவர்- ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடந்த பன்னாட்டு வளைதடி போட்டி மற்றும் 1978 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றில் ஆடினார். அவரது வாழ்க்கையில் அவர் 4 ஒலிம்பிக் போட்டிகளில் கோல்களை அடித்தார். துவக்கத்தில் அவர் இந்திய இரயில்வே மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் போன்றவற்றில் பணியாற்றினார், இறுதியாக பஞ்சாப் காவல்துறையில் பணியாற்றினார்.[2]

இறப்பு

தொகு

சுர்ஜித் சிங் 1984 ஆண்டு ஜலந்தர் மாவட்டம், கர்டர்பூர் அருகில் நடந்த மகிழுந்து நேர்ச்சியில் இறந்தார். இவரது இறப்புக்குப்பின் ஜலந்தரில் உள்ள வளைதடியாட்ட அரங்கிற்கு (சுர்ஜித் ஆக்கி ஸ்டேடியம்) இவரது பெயர் சூட்டப்பட்டது. 1984 இல் பஞ்சாப் அரசாங்கம் துவக்கிய வளைதடியாட்ட பள்ளிக்கு இவரது பெயர் சூட்டப்பட்டது மட்டுமல்லாது சுர்ஜித் ஆக்கி சொசைட்டி என்ற பெயரில் ஜலந்தரில் அமைப்பு உருவாக்கப்பட்டு, சுர்ஜித் நினைவு வளைதடி போட்டிகள் ஆண்டுதோரும் ஜலந்தரில் நடத்தப்பட்டு வருகிறது,[3][4] 2012 ஆண்டு பஞ்சாப்பில் விளையாட்டை ஊக்குவிக்க இந்த அமைப்புக்கு பஞ்சாப் அரசால் உதவிகள் செய்யப்படுமென அறிவிக்கப்பட்டது.[5] இவரது இறப்பிற்கு பிறகு இவருக்கு அருச்சுனா விருது 1998 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.[6]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

இவரது மனைவியான சான்சாலுல் ஒரு பன்னாட்டு வளைதடியாட்ட விளையாட்டு வீரராவார், 1970 களில் இந்தியாவின் மகளிர் தேசிய பீல்ட் வளைதடியாட்ட அணியில் விளையாடியுள்ளார்..[7] இவரின் மகன் சர்பிரிந்தர் சிங் ரண்டவா உலக அளவிலான ஒரு டென்னீஸ் வீரராவார். இவர் உலகம் முழுவதும் பல்வேறு பன்னாட்டு போட்டிகளில், இந்தியாவின் சார்பில் ஆடியுள்ளார் . இந்தோனேசியாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டாம் இடம் பிடித்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Surjit Randhawa". Sports Reference. Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2016-07-07.
  2. 2.0 2.1 Surjit Singh Randhawa பரணிடப்பட்டது 2013-02-02 at Archive.today Sikhhockeyolympians
  3. "History of society". Archived from the original on 2012-10-29. பார்க்கப்பட்ட நாள் 2016-07-07.
  4. "Surjit hockey tourney begins from October 11". Indian Express. Sep 22, 2012. organized every year in memory of former Olympian Surjit Singh Randhawa
  5. "Plans to revive hockey - in hues of pink and blue". Indiatimes.com. August 2012. memory of former Olympian Surjit Singh Randhawa
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-11-27. பார்க்கப்பட்ட நாள் 2016-07-07.
  7. "Kartar Singh's appointment as sports director challenged". The Times of India. Feb 15, 2002 இம் மூலத்தில் இருந்து 2013-05-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130522090642/http://articles.timesofindia.indiatimes.com/2002-02-15/chandigarh/27143397_1_kartar-singh-appointment-joint-director. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுர்ஜித்_சிங்_ரண்டாவா&oldid=3792941" இலிருந்து மீள்விக்கப்பட்டது