சுற்றமைப்புப் பிரிகலன்


ஒரு சுற்றமைப்புப் பிரிகலன் என்பது தானாகவே-இயங்கும், மிகு சுமை அல்லது குறுஞ்சுற்றிணைவினால் ஒரு மின் சுற்றமைப்பிற்கு ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்ட, மின்சார இணைப்பு மாற்றியாகும். ஒரு பிழை நிலையைக் கண்டுபிடிப்பதும், தொடர் சுழற்சியில் இடையிட்டு மின்சாரம் பாய்வதை உடனடியாக நிறுத்துவதும்தான் இதனுடைய அடிப்படைப் பணியாகும். ஒரு முறை மட்டுமே இயங்கிப் பின்னர் மாற்றப்பட வேண்டிய உருகியை போல் அல்லாமல், ஒரு சுற்றமைப்பு பிரிகலனை (கைகளைக் கொண்டோ அல்லது தானியங்கி முறைமையிலோ) சாதாரண இயக்கத்திற்கான மீள் படிவு நிலைக்கு கொண்டு வர முடியும் . ஒரு தனிப்பட்ட இல்லத்தின் பயன்பாட்டுப் பொருட்களைப் பாதுகாக்கும் சிறிய பிரிகலன் துவங்கி, ஒரு நகரம் முழுவதும் செல்லக்கூடிய உயர் மின்னழுத்த சுற்றமைப்புகளைப் பாதுகாக்கும் பெரிய இணைப்பியமைப்பு வரை, பல அளவுகளிலும் சுற்றமைப்புப் பிரிகலன்கள் உருவாக்கப்படுகின்றன.

சுற்றமைப்புப் பிரிகலன் இணைப்பியமைப்பு
ஒரு இரு-துருவ மிகச்சிறிய அளவிலான சுற்றமைப்புப் பிரிகலன்
ஒரு துருவச் சுற்றமைப்பு பிரிகலன்கள் நான்கு

தோற்றுவாய்கள்

தொகு

எடிசன் அவர்களின் வர்த்தக மின்சார வினியோக அமைப்பு உருகிகளையே பயன்படுத்தியிருந்தாலும், ஒரு தொடக்ககால சுற்றமைப்புப் பிரிகலன் என்பது 1879வது ஆண்டின் காப்புரிமை விண்ணப்பத்தில் இவரால் விளக்கப்பட்டிருந்தது.[1] எதேச்சையாக நிகழும் குறுஞ் சுற்றிணைவு மற்றும் மிகு சுமை ஆகியவற்றிலிருந்து ஒளி சுற்று கம்பியமைப்பைப் பாதுகாப்பதே இதன் நோக்கமாக இருந்தது.

இயங்குமுறை

தொகு

எல்லா சுற்றமைப்புப் பிரிகலன்களும் இயங்குமுறையில் பொதுவான அம்சங்களையே கொண்டுள்ளன; எனினும் மின்னழுத்தப்பிரிவு, மின்னோட்ட அறுதியீடு மற்றும் சுற்றமைப்பு பிரிகலனின் வகை ஆகியவற்றைப் பொறுத்து இவற்றின் வகைகள் பெருமளவில் வேறுபடுகின்றன.

சுற்றமைப்புப் பிரிகலன் என்பது ஒரு பிழை நிலையைக் கண்டுபிடித்தல் தேவையாகும். குறைந்த-மின்னழுத்த சுற்றமைப்புப் பிரிகலன்களில் இது பிரிகலனின் உள்ளமைப்பிற்குள்ளாகவே நிகழ்த்தப்படுகிறது. அதிக மின்சாரம் அல்லது உயர்ந்த மின்னழுத்தத்திற்கான சுற்றமைப்புப் பிரிகலன்கள் பொதுவாக ஒரு பிழையுள்ள மின் நிலையைக் கண்டறியவும் மற்றும் திறப்பி இயந்திர அமைப்பைத் திறக்கவும் வழிகாட்டும் சாதனங்களுடனேயே அமைக்கப் பெறுகின்றன. சில உயர்-மின்னழுத்த சுற்றமைப்புப் பிரிகலன்கள் மின்மாற்றிகள், பாதுகாப்பு உணர்த்திகள் மற்றும் ஒரு அகக் கட்டுப்பாட்டு மின்சக்தி தோற்றுவாயையும் தன்னுள்ளேயே கொண்டிருந்தாலும்; பொதுவாக பொறித் தாழ்ப்பளை விடுவிக்கும் திறப்பு வரிச்சுருள் என்பது ஒரு தனி மின்கலத்தாலேயே சக்தியூட்டப் படுகிறது.

ஒரு பிழை கண்டுபிடிக்கப்பட்டவுடன், சுற்றமைப்புப் பிரிகலன்களில் உள்ள தொடுமுனைகள் அந்த சுற்றமைப்பைத் தடுப்பதற்காக திறக்க வேண்டும்; சக்தியில் ஒரு பங்கு குறைபாடுடைய மின்சாரத்திலிருந்தே கிடைக்கப்பெற்றாலும், பிரிகலனின் உள்ளே இயந்திரமயமாக-சேமிக்கப்பட்ட சக்தி (சுருள் வில் அல்லது அழுத்தப்பட்ட காற்று போன்றவற்றைப் பயன்படுத்தி), இந்தத் தொடுமுனைகளைத் துண்டிக்க உதவுகிறது. சிறிய சுற்றமைப்புப் பிரிகலன்கள் கைகளால் இயக்கப்படலாம்; பெரிய அளவிலானவை இந்த இயந்திரச் செயல்பாட்டைத் திறப்பதற்கு வரிச்சுருள்கள் கொண்டிருக்கின்றன, மற்றும் சுருள் வில்களில் சக்தியைத் திரும்பக் கொண்டு வருவதற்கான மின்னோடிகளையும் கொண்டுள்ளன.

சுற்றமைப்புப் பிரிகலன்கள் அதிக வெப்பம் ஏற்படுத்தாமல் மின் பளுவை தாங்கி செல்ல வேண்டும்; மேலும் சுற்றமைப்பைத் தடுக்கும்பொழுது மின்வில் ஏற்படுத்தும் வெப்பத்தையும் அது தாங்கிக்கொள்ள வேண்டும். தொடுமுனைகள் செம்பு அல்லது செம்பு கலந்த உலோகங்கள், வெள்ளி கலந்த உலோகங்கள் மற்றும் இதரப் பொருட்களினால் ஆகியவற்றால் உருவாக்கப்படுகின்றன. இந்த இணைப்புகளின் செயற்பாட்டுக் காலம் என்பது மின்வில்லை துண்டிப்பதனால் ஏற்படும் தேய்மானத்தைப் பொறுத்து அமைகிறது. மிகச் சிறிய அல்லது வார்ப்படம் செய்யப்பட்ட சுற்றமைப்புப் பிரிகலன்கள் சாதாரணமாக தொடுமுனைகள் தேய்ந்த பின்பு தூக்கி எறியப்படுகின்றன. ஆனால் மின்சக்தி சுற்றமைப்புப் பிரிகலன்களிலும் உயர்-மின்னழுத்த சுற்றமைப்பு பிரிகலன்களிலும் மீண்டும் பொருத்தப்படக்கூடிய தொடுமுனைகள் உள்ளன.

ஒரு மின்னோட்டம் தடைபடும் பொழுது ஒரு மின் வில் சுடர் உருவாகிறது. இநத தொடுமுனைகளின் இடைவெளியானது சுற்றமைப்பில் உள்ள மின்னழுத்தத்தை மறுபடியும் தாங்கும் பொருட்டு இந்த மின்வில் சுடரானது கட்டுப்படுத்தப்பட்டு, குளிர்விக்கப்பட்டு கட்டுப்பட்ட நிலைகளில் அணைக்கப்படவேண்டும். பல்வேறு சுற்றமைப்புப் பிரிகலன்களும் மின் வில் சுடர் உருவாகும் ஊடகமாக, வெற்றிடம், காற்று, மின் காப்பு வாயு, அல்லது எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றன. மின்வில் சுடரை அணைப்பதற்கு பல்வேறு விதமான உத்திகள் கையாளப்படுகின்றன; அவற்றுள் கீழ்க் காண்பவை அடங்கும்:

  • மின் வில் சுடரை நீட்டிப்பது
  • ஆழ்ந்த குளிர்விப்பு (பீற்று நீர் அறைகளில்)
  • பகுதியளவான மின்வில் சுடர்களாக பிரித்தல்
  • பூஜ்ய நுண் அளவிற்குக் குளிர்வித்தல்[தெளிவுபடுத்துக]
  • டிசி சுற்றமைப்புகளின் தொடுமுனைகளுக்கு இணைவாக கொண்மிகளை இணைத்தல்

இறுதியாக, அந்த பிழை நிலை சீரமைக்கப்பட்ட பின்பு, தடைப்பட்ட சுற்றமைப்புக்கு மின்சக்தி மீண்டும் வழங்கப்படும் வண்ணம் அத் தொடுமுனைகள் மறுபடி மூடப்பட வேண்டும்.

மின்வில் சுடர் தடை

தொகு

மிகச்சிறிய குறைந்த-மின்னழுத்த சுற்றமைப்புப் பிரிகலன்கள் காற்றை மட்டுமே கொண்டு மின்வில் சுடர்களை அணைக்கின்றன. பெரிய அளவிலானவை மின்வில் சுடரை பிரிப்பதற்கும் குளிர்விப்பதற்கும் உலோகத் தட்டுக்கள் அல்லது உலோகம் அல்லாத மின்வில் சுடர் சரிவுகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. காந்த சக்தியைச் செலுத்தி அணைக்கும் கம்பிச்சுருள்கள் மின்வில் சுடரை மின்வில் சுடர் சரிவிற்குள் வளைத்து அனுப்புகின்றன.

அதிகத் திறன் கொண்டவற்றில், எண்ணெய் சுற்றமைப்புப் பிரிகலன்கள் எண்ணெயில் சிறிதளவு ஆவியாகி மின்வில் சுடர் வழியாக எண்ணெயை பீய்ச்சியடிக்கும் முறைமையைக் கொண்டு செயல்படுகின்றன.[2]

வாயு சுற்றமைப்புப் பிரிகலன்கள் (பொதுவாக ஸல்ஃபர் ஹெக்ஸாஃப்ளூரைட்) சில சமயங்களில் காந்த எல்லையைப் பயன்படுத்தி மின்வில் சுடரை நீட்டிக்கின்றன, பின்னர் அப்படி நீட்டிக்கப்பட்ட மின் வில் சுடரை குளிர்விக்க ஸல்ஃபர் ஹெக்ஸாஃப்ளூரைடின் (எஸ்எஃப்6) மின்கடத்தாப் பொருளின் வலிமையைப் பயன்படுத்துகின்றன.

வெற்றிட சுற்றமைப்புப் பிரிகலன்கள் மிகக் குறைந்தபட்ச மின் வில் சுடரையே கொண்டுள்ளன (இணைப்புப் பொருளைத் தவிர வேறெதையும் அயனியாக்கத் தேவை இல்லாததால்), இதனால் மிகச் சிறிய அளவில் நீட்டிக்கப்படும் பொழுது (<2-3 மிமீ) இந்த மின் வில் சுடர் குளிர்ந்து விடுகிறது. நவீன மித-மின்னழுத்த இணைப்பியமைப்பிலிருந்து 35,000 வோல்ட்டுகள் வரை வெற்றிட சுற்றமைப்புப் பிரிகலன்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.

காற்று சுற்றமைப்புப் பிரிகலன்கள் இந்த மின்வில் சுடரை ஊதி அணைக்க அழுத்தப்பட்ட காற்றை பயன்படுத்தலாம் அல்லது இதற்கு மாற்றாக, இந்த தொடுமுனைகள் ஒரு சிறிய மூடப்பட்ட அறைக்குள் அதி வேகமாக எறியப்படலாம். அப்பொழுது அங்கிருந்து வெளியேறும் காற்றானது மின்வில் சுடரை அணைத்து விடும்.

சுற்றமைப்புப் பிரிகலன்கள் சாதாரணமாக அனைத்து மின்னோட்டத்தையும் மிக விரைவில் துண்டித்து விடக்கூடியவையாகவே இருக்கின்றன: சாதனத்தின் அமைப்பு மற்றும் அதன் காலத்தைப் பொறுத்து, இயந்திர செயல்முறை திருப்பப்பட்ட பிறகு 30 எம்எஸ்ஸிலிருந்து 150 எம்எஸ்ஸிற்கு இடையில் மின்வில் சுடர் குறிப்பிடத்தக்க வகையில் அணைக்கப்படுகிறது.

குறுஞ் சுற்றிணைவு மின்னோட்டம்

தொகு

சுற்றமைப்புப் பிரிகலன்களை, அவற்றின் தாங்கும் சக்தி என்று எதிர்பார்க்கப்படக்கூடிய அளவு சாதாரண மின்னோட்டத்தையும் மற்றும் அவை பாதுகாப்பாக தடை செய்யக்கூடிய அதிக பட்ச குறுஞ்சுற்றிணைவு மின்னோட்டத்தையும் பொறுத்து அறுதிப்படுத்தலாம்.

குறுஞ் சுற்றிணைவு மின்னோட்ட நிலைகளில், சாதாரண நிலையை விட பல மடங்கு அதிகமான மின்னோட்டம் இருக்கக்கூடும் (காண்க: அதிகபட்சமாக எதிர் நோக்கக்கூடிய குறுஞ்சுற்றிணைவு மின்னோட்டம்). ஒரு அதிக அளவு மின்னோட்டத்தை தடைப்படுத்துவதற்கு மின் தொடுமுனைகள் திறக்கும் பொழுது திறந்திருக்கும் தொடுமுனைகளில் ஒரு மின்வில் சுடர் உருவாகக் கூடிய போக்கு உண்டு; இது மின்னோட்டம் தொடர்ந்து பாய அனுமதிக்கிறது. எனவே, சுற்றமைப்புப் பிரிகலன்கள் மின்வில் சுடரைப் பிரிப்பதற்கும் மற்றும் அணைப்பதற்கும் தேவையான பல்வேறு அம்சங்களை கொண்டிருக்க வேண்டும்.

காற்று-மின்காப்பு மற்றும் மிகச் சிறிய பிரிகலன்களில் உலோகத் தட்டுகள் அல்லது பீங்கான் மேல் விளிம்புகள் ஆகியவற்றால் அமைந்துள்ள (பெரும்பாலும்) மின்வில் சுடர் சரிவு மின்வில் சுடரை குளிர்விக்கின்றன, மேலும் காந்தசக்தியால் அணைக்கும் கம்பிச்சுருள்கள் மின்வில் சுடர் சரிவுக்குள் மின்வில் சுடரைத் திருப்புகின்றன. மின் திறன் பகிர்மானத்தில் பயன்படுத்தப்படுபவை போன்ற பெரிய சுற்றமைப்புப் பிரிகலன்கள் வெற்றிடத்தையோ, ஸல்ஃபர் ஹெக்ஸாஃப்ளூரைட் போன்ற ஒரு திறங்குன்றிய வாயுவையோ அல்லது இணைப்புகளை எண்ணெயில் அமிழ்த்தியோ மின்வில் சுடரை அணைக்கலாம்.

ஒரு பிரிகலனால் தடைப்படுத்தப்படக்கூடிய அதிகபட்ச குறுஞ்சுற்றிணைவு மின்னோட்டம் என்பது சோதனையின் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு பிரிகலன் அதன் தடைபடுத்தும் திறனை விட, எதிர் நோக்கப்படக்கூடிய குறுஞ் சுற்றிணைவு மின்னோட்டம் அதிகமாக இருக்கும் சுற்றமைப்பில் பயன்படுத்தப்பட்டால் அந்தப் பிரிகலன் பிழையைக் கண்டுபிடித்துப் பாதுகாப்பான முறையில் மின்தடையை ஏற்படுத்த முடியாமல் தோல்வியுறக்கூடும். இதை விட அதி மோசமான நிலைகளும் உருவாகும். இத்தகைய பிரிகலன் வெற்றிகரமாக தடையை ஏற்படுத்தி விட்டாலும், மீள்விப்பு நிலைக்கு மறுபடி வரும்போது வெடித்து விடும்.

கட்டுப்படுத்தப்பட்ட சுற்றமைப்புகள் அல்லது சிறிய சாதனங்களில் பயன்படுத்தப்படும் மிகச்சிறிய சுற்றமைப்புப் பிரிகலன்கள் முகப்புப் பலகையில் பயன்படுத்தப்படக்கூடிய அளவு தேவையான தடை செய்யும் திறன் கொண்டவையாக இருக்காது. இத்தகைய சுற்றமைப்புப் பிரிகலன்களை பகிர்மான-வகை சுற்றமைப்புப் பிரிகலன்களிலிருந்து வேறுபடுத்த, அவை "துணை சுற்றமைப்புப் பாதுகாப்பாளர்கள்" என்று அழைக்கப்படுகின்றன.

தரமான மின்னோட்ட அறுதியீடுகள்

தொகு

சர்வதேச தரம் ஐஈசி 60898-1 மற்றும் ஐரோப்பிய தரம் ஈஎன் 60898-1 ஆகியவை, குறைந்த மின்னழுத்த பகிர்மான பயன்பாட்டு சுற்றமைப்புப் பிரிகலனுக்கான அறுதியிடப்பட்ட மின்சாரம் என் என்பது அந்த பிரிகலன் தொடர்ந்து கடத்தக்கூடியதாக (சூழ்ந்துள்ள காற்று வெப்பநிலையான 30°சியில்) வடிவமைக்கப்பட்ட மின்சார அளவையே என்று வரையறுக்கிறது. அறுதியிட்ட மின்சாரத்தின் பொதுவாக-கிடைக்கும் விரும்பத்தக்க அளவீடுகள் 6 ஏ, 10 ஏ, 13 ஏ, 16 ஏ, 20 ஏ, 25 ஏ, 32 ஏ, 40 ஏ, 50 ஏ, 63 ஏ, 80 ஏ மற்றும் 100 ஏ[3] ஆகியனவாகும். (ரெனார்ட் தொகுதி, பிரித்தானிய பிஎஸ் 1363 குதை குழிகளின் மின்சார அளவையும் சேர்ப்பதற்காக சிறிதே மாற்றியமைக்கப்பட்டது) சுற்றமைப்புப் பிரிகலன்கள் அறுதியிட்ட மின்சாரத்தை அதன் அளவுக் குறியீடான "ஏ" என்பது இல்லாமல் ஆம்பியர் எனப்படும் மின்னோட்ட அளவுகளில் குறிக்கின்றன. இதற்குப் பதிலாக, கணத்தில் திறக்கும் மின்னோட்டம் என்பதைக் குறிக்கும் வகையில் இந்த ஆம்பியர் எண்ணின் முன்னால் "பி", "சி" அல்லது "டி" என்று குறிப்பிடப்படுகிறது; இது நேர்வுக் குறிக்கோளான சமய தாமதம் ஏதுமின்றி (அதாவது 100 எம்எஸ்ஸிற்கும் குறைவாக) சுற்றமைப்புப் பிரிகலனை திறக்க வைக்கும் குறைந்தபட்ச மின்னோட்ட அளவேயாகும். இது என் என்று குறிப்பிடப்படுகிறது:

வகை கணத்தில் திறக்கும் மின்னோட்டம்
பி 3 என்க்கும் அதிகமாக ஆனால் 5 என்னையும் சேர்த்து மற்றும் அதன் வரையிலும்
சி 5 என்க்கும் அதிகமாக ஆனால் 10 என்னையும் சேர்த்து மற்றும் அதன் வரையிலும்
டி 10 என்க்கும் அதிகமாக ஆனால் 20 என்னையும் சேர்த்து மற்றும் அதன் வரையிலும்
கே 8 என்க்கும் அதிகமாக ஆனால் 12 என்னையும் சேர்த்து மற்றும் அதன் வரையிலும் சாதாரண இயக்கத்தில் அடிக்கடி நிகழ்கிற குறைந்த காலம் (ஏறத்தாழ 400 எம்எஸ் முதல் 2 எஸ் வரை) உள்ள மின்னோட்ட உச்சங்களை உருவாக்கும் சுமைகளின் பாதுகாப்பிற்காக.
இசட் 2 என்க்கும் அதிகமாக ஆனால் 3 என்னையும் சேர்த்து மற்றும் அதன் வரையிலும் இது விநாடிகளில் பத்து பத்தாக உருவாகும் காலங்களுக்காக.மின்மாற்றிகளைப் பயன்படுத்தி சுற்றமைப்புகளை அளவிடுவதற்கு அல்லது பகுதிக்கடத்தி சாதனங்கள் போன்ற சுமைகளின் பாதுகாப்பிற்காக.

சுற்றமைப்புப் பிரிகலன்களின் வகைகள்

தொகு
 
ஏபிபி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 1250 ஏ காற்று சுற்றமைப்புப் பிரிகலனின் முகப்புப் பலகை. இந்த குறைந்த மின்னழுத்த மின்சக்தி சுற்றமைப்புப் பிரிகலனை பழுது பார்க்க அதன் அமைப்பிலிருந்து கழற்ற முடியும். முகப்புப் பலகையில் உள்ள டிப் இணைப்பு மாற்றிகளின் மூலம் திறப்புக் கருவியின் குணாதிசயங்களைச் செயல்படுத்த முடியும்.

மின்னழுத்தப் பிரிவு, தயாரிப்பு வகை, தடை செய்யும் வகை, மற்றும் கட்டமைப்பு சார்ந்த அம்சங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் சுற்றமைப்புப் பிரிகலன்களை பல வகைகளாகப் பிரிக்கலாம்.

குறைந்த மின்னழுத்த சுற்றமைப்புப் பிரிகலன்கள்

தொகு

வீடுகள், வர்த்தகங்கள் மற்றும் தொழிற்துறை பயன்பாடுகளில் குறைந்த மின்னழுத்த (1000 வி ஏசிக்கு குறைவாக) வகைகள் பொதுவாக காணப்படுகின்றன, இவற்றுள் கீழ் காண்பவை அடங்கும்:

  • எம்சிபி (மிகச்சிறிய சுற்றமைப்புப் பிரிகலன்)- அறுதியிடப்பட்ட மின்னோட்டம் 100 ஏக்கு மிகாதிருக்கும். திறப்பு அம்சங்கள் சாதாரணமாக ஏற்றவாறு மாற்றியமைக்க முடியாதவை. வெப்ப அல்லது வெப்ப-காந்த இயக்கம். மேலே குறிப்பிடப்பட்டுள்ள பிரிகலன்கள் இந்தப் பிரிவைச் சார்ந்தவை.
  • எம்சிசிபி (வார்ப்பட உருவமைப்பு சுற்றமைப்புப் பிரிகலன்கள்)-அறுதியிடப்பட்ட மின்னோட்டம் 1000 ஏ வரையிலானது. வெப்ப அல்லது வெப்ப-காந்த இயக்கம். அதிக அளவில் அறுதியிடப்பட்டவைகளில் திறக்கும் மின்னோட்டம் தக்கவாறு அமைக்கப்படலாம்.
  • எல்வி இணைப்புப் பலகைகளிலோ அல்லது இணைப்பியமைப்பு பெட்டிகளிலோ பல-அடுக்குகளில் குறைந்த மின்னழுத்த சுற்றமைப்புப் பிரிகலன்கள் அமைக்கப்படலாம்.

எல்வி சுற்றமைப்புப் பிரிகலன்களின் குணாதிசயங்கள் ஐஈசி 947 போன்ற சர்வதேச தரநிலைகள் வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய சுற்றமைப்புப் பிரிகலன்கள் பெரும்பாலும் இணைப்பியமைப்புகளை பிரிக்காமல் மாற்றவும் நீக்கி விடவும் ஏதுவான வெளியில்-இழுக்கக்கூடிய உள்ளமைப்புகளில் நிறுவப்படுகின்றன.

பெரிய அளவிலான, குறைந்த-மின்னழுத்த வார்ப்பட பெட்டி மற்றும் மின் திறன் சுற்றமைப்புப் பிரிகலன்களில் மின்னோடி இயக்கிகள் இருக்கலாம்; இவை தொலைக் கட்டுப்பாட்டின் வழி திறக்க மற்றும் மூடப்பட அனுமதிக்கலாம். இவை ஒரு உறுதுணை மின்னோட்டத்திற்கான தானியங்கி மாற்றல் இணைப்புமாற்றி அமைப்பின் ஒரு அங்கமாக பயன்படுத்தப்படலாம்.

குறைந்த-மின்னழுத்த சுற்றமைப்புப் பிரிகலன்கள் நேர்திசை-மின்னோட்ட (டிசி) பயன்பாடுகளுக்காகவும் தயாரிக்கப்படுகின்றன, உதாரணத்திற்கு துணைவழி மின் தொடர்களுக்கு வழங்கப்படும் நேர்திசை மின்னோட்டம். நேர்திசை மின்னோட்டத்திற்குத் தனிப் பிரிகலன்கள் தேவைப்படுகின்றன; ஏனெனில் மாறுதிசை மின்னோட்டத்தைப் போல ஒவ்வொரு அரை சுற்றுக்கும் வெளியில் செல்லும் போக்கு இந்த மின்வில் சுடருக்கு இருப்பதில்லை. ஒரு நேர்திசை மின்னோட்ட சுற்றமைப்பு பிரிகலனில் காந்த எல்லையை உருவாக்கக்கூடிய, ஊதி அணைக்கும் கம்பிச்சுருள்கள் இருக்கும்; இவை நேர்திசை மின்னோட்டத்தை தடை செய்யும் பொழுது மின் வில் சுடரை அதிவேகமாக நீட்டிக்கும்.

சிறிய சுற்றமைப்புப் பிரிகலன்கள் கருவியினில் நேரடியாக நிறுவப்படும் அல்லது பிரிகலன் பலகையில் பொருத்தப்படும்.

 
ஒரு சுற்றமைப்பு பிரிகலனின் உள்ளமைப்பின் புகைப்படம்

10 ஆம்பியர் டிஐஎன் தண்டவாள-ஏற்றியமைக்கப்பட்ட வெப்ப-காந்த மிகச்சிறிய சுற்றமைப்புப் பிரிகலன் என்பதுதான் ஐரோப்பா முழுவதும் நவீன உள்நாட்டு நுகர்வோர் இடங்கள் மற்றும் வர்த்தக மின்சார பகிர்மானப் பலகைகளில் பெரும்பாலும் உபயோகப்படுத்தப்படும் ஒரு வகையாகும். இந்த வடிவமைப்பு கீழ்காணும் உறுப்புகளை உள்ளிட்டதாகும்:

1 செயற்படுத்தும் நெம்புகோல் - சுற்றமைப்பு பிரிகலனை கைகளால் திறக்கவும் மீள்விப்பு நிலைக்கு மறுபடி கொண்டு வருவதற்குமானது. இது சுற்றமைப்புப் பிரிகலனின் நிலையையும் குறிப்பிடுகிறது (இணைப்பு நிலை அல்லது இணைப்பு இல்லாத நிலை/திறப்பு நிலை). பெரும்பான்மையான பிரிகலன்கள் "இணைப்பு நிலை"யில் நெம்புகோல் இருக்கும் பொழுதும் அல்லது இறுகிப் பற்றியிருக்கும் நிலையிலும் கூட திறப்பதற்கு ஏதுவாக வடிவமைக்கப்படுகின்றன. இது சில சமயங்களில் "இலவசத் திறப்பு" அல்லது "நேர்மறை திறப்பு" இயக்கம் என்று குறிப்பிடப்படுகின்றது. 2 செயற்படுத்தும் இயந்திர அமைப்பு - இது தொடுமுனைகளைச் சேர்ந்தோ அல்லது விலகியோ இருக்கச் செய்கிறது. 3 தொடுமுனைகள் - தொடும்பொழுது மின்னோட்டம் பாயவும் விலகும் பொழுது மின்னோட்டத்தைத் தடை செய்யவும் அனுமதிக்கின்றன.

4 மின்முனைகள் 5 ஈருலோகத்தகடு 6 அளவீட்டு திருகாணி - இது சாதனத்தை ஒருங்கிணைத்த பின் திருப்புதல் மின்னோட்டத்தை சரி செய்ய தயாரிப்பாளருக்கு உதவுகிறது. 7 வரிச்சுருள் 8 மின்வில் சுடர் பிரிப்பான்/அணைப்பான்

காந்த சுற்றமைப்புப் பிரிகலன்

தொகு

காந்தச் சுற்றமைப்புப் பிரிகலன்கள் ஒரு வரிச்சுருள் மின்காந்தத்தை பயன்படுத்துகிறது; இதன் இழுவை விசை மின்னோட்டத்தோடு அதிகரிக்கிறது. சில வடிவமைப்புகள் வரிச்சுருளுடன் கூடுதலாக மின்காந்த விசையையும் பயன்படுத்துகின்றன. சுற்றமைப்பு பிரிகலனின் தொடுமுனைகள் ஒரு பொறித் தாழ்ப்பாளால் மூடப்பட்டிருக்கின்றன. வரிச்சுருளில் உள்ள மின்னோட்டம் சுற்றமைப்பு பிரிகலனின் அறுதியிட்ட மின்னோட்டத்தைத் தாண்டி அதிகரிக்கும் பொழுது, வரிச்சுருளின் விசையானது பொறித் தாழ்ப்பாளை நீக்கி தொடுமுனைகள் சுருள் வில் இயக்கத்தின் மூலம் திறந்து கொள்வதற்கு அனுமதிக்கிறது. காந்தப் பிரிகலன்களில் சில வகைகள் பாகியல்பு திரவம் ஒன்றைப் பயன்படுத்தி நீரியல் நேர தாமதம் செய்யும் அம்சத்தை இணைக்கின்றன. பிரிகலனின் அறுதியினைத் தாண்டி மின்னோட்டம் அதிகரிக்கும் வரை உள்ளகத்தை ஒரு சுருள் வில் தடுத்து நிறுத்துகிறது. ஒரு மிகுசுமையின் போது, வரிச்சுருளின் இயக்கத்தின் வேகத்தினை திரவம் கட்டுப்படுத்துகிறது. இந்த தாமதமானது சாதாரண மின்னோட்டத்தை தாண்டி இயந்திரம் செயல்படுத்த தொடங்குவது, உபகரணங்களுக்கு சக்தியளிப்பது போன்றவற்றிற்காக குறுகிய அளவு மின்னலைகளை அனுமதிக்கிறது. குறுஞ் சுற்றிணைவு மின்னோட்டங்கள் உள்ளகத்தின் நிலை எப்படியிருந்தாலும் பொறித்தாழ்ப்பாளை நீக்குவதற்காக தேவையான அளவு வரிச்சுருள் விசையை அளிக்கின்றன. சூழ்ந்துள்ள வெப்பநிலை நேர தாமதத்தைப் பாதிக்கும்; ஆனால் ஒரு காந்தப் பிரிகலனின் மின்னோட்ட அறுதியை பாதிக்காது.

வெப்ப காந்தச் சுற்றமைப்புப் பிரிகலன்

தொகு

பகிர்மானப் பலகைகளில் பெரும்பாலும் காணப்படும் வகையான வெப்ப காந்தச் சுற்றமைப்புப் பிரிகலன்கள் இரு வகை நுட்பங்களையும் உள்ளடக்கியுள்ளன; மின் காந்த வகையானது மின்னோட்டத்தில் அதிக அலைகளுக்கு (குறுஞ் சுற்றிணைவு) உடனடியாக செயலாற்றுவதற்காகவும் மற்றும் இதை விடக் குறைந்த அளவு ஆனால் அதிக நேரம் நீடிக்கும் மிகை-மின்னோட்ட நிலைகளுக்காக ஈருலோகத் தகடுகளையும் பயன்படுத்துகின்றன.

வழக்கமான திறப்பு பிரிகலன்கள்

தொகு
 
ஒரு முத்தருவாய் சாதனத்திற்கான மூன்று காந்த முனை கொண்ட பொதுவான திறப்பு பிரிகலன். இந்தப் பிரிகலன் 2 ஏ தரவரிசையில் உள்ளதாகும்.

ஒரு கிளை சுற்றுவழிக்கு ஒரு மின்னூட்ட கடத்திக்கு மேல் அளிக்கும் பொழுது, ஒவ்வொரு மின்னூட்ட கடத்தியும் ஒரு பிரிகலன் துருவத்தால் பாதுகாக்கப்பட வேண்டும். ஒரு துருவம் திறக்கப்பட்டாலும் அனைத்து மின்னூட்ட கடத்திகளும் தடை செய்யப்படுவதை உறுதி செய்து கொள்ள, ஒரு "பொது திறப்பு" பிரிகலனைப் பயன்படுத்த வேண்டும். இவற்றில் ஒரே பெட்டியில் இரண்டு அல்லது மூன்று திறப்பு இயக்கங்கள் இருக்கக்கூடும் அல்லது சிறிய பிரிகலன்களுக்கு துருவ முனைகளை அவற்றின் இயக்கப்படும் கைப்பிடிகளின் மூலமாக வெளிப்புறமாக கட்டலாம். இரண்டு துருவங்கள் கொண்ட வழக்கமான திறப்பு பிரிகலன்கள் 120/240 மின்னழுத்த அமைப்புகளில் பொதுவாக இருக்கின்றன; இதில் 240 மின்னழுத்தச் சுமை (பெரிய சாதனங்கள் அல்லது அதிகமான பகிர்மானப் பலகைகள் உள்ளிட்ட) இரண்டு மின்னூட்டக் கம்பிகளையும் இணைக்கின்றன. மூன்று-துருவ வழக்கமான திறப்பு பிரிகலன்கள் குறிப்பாக பெரிய இயந்திரங்கள் மற்றும் அதிக பகிர்மானப் பலகைகளுக்கு முத்தருவாய் மின்சக்தியை அளிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

இரண்டு மற்றும் நான்கு துருவ பிரிகலன்கள் நடுநிலை கம்பி இணைப்பை துண்டிக்க அவசியமிருக்கும் இடங்களில் பயன்படுத்தப்படுகி்ன்றன; சீரமைப்பு பணிக்காக ஊழியர்கள் கம்பிகளைத் தொடும்பொழுது அதே வலைப்பின்னலி்ல் இணைக்கப்பட்டிருக்கும் மற்ற சுமைகளிலிருந்து இந்த நடுநிலைக் கம்பிகளின் மூலம் மின்சாரம் திரும்பப் பாய்ந்து விடாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இயங்கிக்கொண்டிருக்கும் மற்றும் நடுநிலைக் கம்பிகளின் இணைப்பைத் துண்டிக்க தனித்தனியான சுற்றமைப்புப் பிரிகலன்களை ஒரு போதும் பயன்படுத்தக்கூடாது, ஏனெனில் இயங்கிக்கொண்டிருக்கும் கடத்தி இணைப்பிலேயே இருக்கும்பொழுது நடுநிலைக் கம்பி இணைப்பில்லாமல் இருந்தால் ஒரு ஆபத்தான நிலை உருவாகிவிடும்: சுற்றமைப்பு சக்தி-இழந்தவையாய் காணப்படும் (சாதனங்கள் வேலை செய்யாது), ஆனால் கம்பிகள் இயக்கத்தில் இருக்கும் மற்றும் யாரேனும் மின்னூட்டக் கம்பியைத் தொட்டால் ஆர்சிடிக்கள் திறக்காது (ஏனெனில் திறப்பதற்கு ஆர்சிடிக்களுக்கு மின்சக்தி தேவை). இதன் காரணமாகவே நடுநிலைக் கம்பியின் இணைப்பை துண்டிக்க வேண்டியிருக்கும்பொழுது வழக்கமான திறப்புப் பிரிகலன்களையே பயன்படுத்த வேண்டும்.

மித-மின்னழுத்த சுற்றமைப்புப் பிரிகலன்கள்

தொகு

1-72 கேவி வரை அறுதியிடப்பட்ட மித-மின்னழுத்த சுற்றமைப்புப் பிரிகலன்கள் மனையக உலோகம்-இணைத்த இணைப்பியமைப்பு மின்தொடர்களில் பொருத்தப்படலாம், அல்லது ஒரு துணை மின்நிலையத்தில் வெளியில் பொருத்தப்படும் தனிப்பட்ட உறுப்புகளாகவும் செயல்படலாம். மனையக பயன்பாடுகளில் இருந்த எண்ணெய்-நிரம்பிய உபகரணங்களின் இடத்தை காற்று-சுற்றமைப்புப் பிரிகலன்கள் பிடித்தன, ஆனால் இப்பொழுது இவற்றை (35கேவி வரையிலும்) வெற்றிட சுற்றமைப்புப் பிரிகலன்கள் மாற்றீடு செய்கின்றன. கீழே விவரிக்கப்பட்டிருக்கும் உயர் மின்னழுத்த சுற்றமைப்புப் பிரிகலன்களைப் போல, இவையும் மின்மாற்றிகள் மூலமாக மின் உணர்த்தும் பாதுகாப்பு உணர்த்திகளால் இயக்கப்படுகின்றன. எம்வி பிரிகலன்களின் குணாதிசயங்கள் ஐஈசி 62271 போன்ற சர்வதேச தரங்களால் அளிக்கப்படுகின்றன. மித-மின்னழுத்த சுற்றமைப்புப் பிரிகலன்கள் உள்ளமைக்கப்பட்ட வெப்ப அல்லது காந்த மிகை மின்னோட்ட உணரிகளை விடுத்து எப்பொழுதும் தனியான மின்னோட்ட உணரிகள் மற்றும் பாதுகாப்பமைப்பு உணர்த்திகளையே பயன்படுத்துகின்றன.

மித-மின்னழுத்த சுற்றமைப்புப் பிரிகலன்களை மின்வில் சுடர்களை அணைக்கப் பயன்படுத்தப்படும் ஊடகங்களைக் கொண்டு வகைப்படுத்தலாம்:

  • வெற்றிட சுற்றமைப்புப் பிரிகலன்

3000 ஏ வரை அறுதியிடப்பட்ட மின்னோட்டத்தை கொண்டுள்ள இந்தப் பிரிகலன்கள் ஒரு வெற்றிடக் கலத்தில் மின்வில் சுடரை உருவாக்கி அணைப்பதன் மூலம் மின்னோட்டத்தை தடை செய்கின்றன. இவை பொதுவாக 35,000 வி வரை உள்ள மின்னழுத்தங்களுக்கு பயன்படுகின்றன;[4] இது மித-மின்னழுத்த வரிசையில் உள்ள மின்சக்தி அமைப்புகளுக்கு ஏறத்தாழ ஒத்ததாக இருக்கும். வெற்றிட சுற்றமைப்புப் பிரிகலன்கள் பழுதுபார்க்கும் இடைவெளிகளில் காற்று சுற்றமைப்பு பிரிகலன்களை விட அதிக ஆயுள் உடையதாய் இருக்கின்றன.

  • காற்று சுற்றமைப்புப் பிரிகலன்-10,000 ஏ வரையில் அறுதியிடப்பட்ட மின்னோட்டம். சாதாரணமாக திறப்பு குணாதிசயங்கள் முழுவதும் சரி செய்யப்படக்கூடியதாய் இருக்கும்; இவற்றுள் உருவாக்கப்படக்கூடிய திறப்பு தொடக்க நிலைகளும் தாமதங்களும் அடங்கும்.

சில வடிவங்கள் ஒரு உள்ளார்ந்த மின்ம திறப்பு உறுப்பின் மூலம் மைக்ரோபிராசஸர் என்னும் மிகச்சிறு இயக்குவானால் கட்டுப்படுத்தப்பட்டாலும், இவை வழக்கமாக மின்ம இயல் வழியாகவே கட்டுப்படுத்தப்படுகின்றன. பெரும் தொழிற்கூடங்களில் முக்கிய மின்சக்தி பகிர்மானத்திற்காக வழக்கமாகப் பயன்படுத்தப்படும் இதில் இலகுவான பராமரிப்பிற்காக வெளியில் இழுக்கும் இணைப்புகளில் பிரிகலன்கள் அமைக்கப்படுகின்றன.

  • எஸ்எஃப்6 சுற்றமைப்புப் பிரிகலன்கள் ஸல்ஃபர் ஹெக்ஸாஃப்ளூரைட் வாயு நிரப்பப்பட்ட அறையில் மின்வில் சுடரை அணைக்கின்றன.

மித-மின்னழுத்த சுற்றமைப்புப் பிரிகலன்கள் மின்வாய்ச் சட்டங்கள் அல்லது கம்பிகளுடன் பூட்டப்பட்ட இணைப்புகள் மூலமாக சுற்றமைப்புகளுக்குள், குறிப்பாக வெளியிட இணைப்பு முற்றங்களில், இணைக்கப்படலாம். இணைப்பியமைப்பு மின் தொடர்களில் இருக்கும் மித-மின்னழுத்த சுற்றமைப்புப் பிரிகலன்கள் வழக்கமாக வெளியில் இழுக்க ஏதுவாக இருப்பதாகவே அமைக்கப்படுகின்றன; இது பிரிகலனை அதன் இணைப்பிலிருந்து பிரிப்பதற்கு ஒரு மோட்டாரால்-இயக்கப்படும் அல்லது கையால் திருப்பப்படும் அமைப்பினைப் பயன்படுத்தி மின்சக்தி சுற்றமைப்பு இணைப்புகளை பாதிக்காமல் பிரிகலனை நீக்குவதற்கு அனுமதிக்கிறது.

உயர்-மின்னழுத்த சுற்றமைப்புப் பிரிகலன்கள்

தொகு
 
115 கேவி பெருமளவு எண்ணெய் சுற்றமைப்புப் பிரிகலன்.

மின்சார ஆற்றல் அனுப்பிடும் வலை அமைப்புகள் உயர்-மின்னழுத்த பிரிகலன்களால் பாதுகாக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகின்றன. உயர் மின்னழுத்தம் என்பதன் வரையறையானது மாறுபடக்கூடியது, ஆனால் ஆற்றல் அனுப்பீட்டில் வழக்கமாக இதன் பணி நிலை 72.5 கேவி அல்லது அதற்கும் மேலாக இருக்கும் என்று சமீபத்தில் சர்வதேச மின்தொழில் நுட்பவியல் ஆணையம் (ஐஈசி) வரையறுத்திருக்கிறது. உயர்-மின்னழுத்த பிரிகலன்கள் அநேகமாக வரிச்சுருளால்-இயக்கப்படுவதாய், மின்மாற்றிகளின் மூலம் இயங்கும் மின் உணரி பாதுகாப்பு உணர்த்திகள் உடையவையாய் இருக்கின்றன. துணை மின்நிலையங்களில், சாதனங்கள் மற்றும் மின்வாய்களை பல வகையான மிகுசுமை அல்லது தரை/நிலப் பிழைகளிலிருந்து பாதுகாக்க வேண்டியிருப்பதால், பாதுகாப்பு உணர்த்தி அமைப்புகள் பல்கூட்டுத்தொகுதியாக இருக்கக்கூடும்.

உயர்-மின்னழுத்தப் பிரிகலன்களை, அவை மின்வில் சுடரை அணைக்க பயன்படுத்தப்படும் ஊடகத்தின் அடிப்படையில், பரவலாக வகைப்படுத்தப்படுத்தலாம்:

  • பெருமளவு எண்ணெய்
  • குறைந்த அளவிலான எண்ணெய்
  • காற்று ஊதுலை
  • வெற்றிடம்
  • எஸ்எஃப்6|எஸ்எஃப்6

இவற்றைத் தயாரிக்கும் சில நிறுவனங்கள் ஏபிபி, ஜிஈ(ஜெனரல் எலெக்ட்ரிக்), அரேவா, மித்சூபிஷி எலெக்ட்ரிக், பென்சில்வேனியா பிரேக்கர், சீமென்ஸ், தோஷிபா, கொன்கார் ஹெச்விஎஸ், மற்றும் பிஹெச்ஈஎல் ஆகியவையாகும்.

காப்பிடப்பட்ட எண்ணெய் சிந்துவதால் ஏற்படும் சுற்று சூழல் பாதிப்பு மற்றும் செலவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பல புதிய பிரிகலன்கள் தற்பொழுது எஸ்எஃப்6 காற்றை உபயோகித்து மின்வில் சுடரை அணைக்கின்றன.

சுற்றமைப்புப் பிரிகலன்களில் இருக்கும் பிரிக்கும் எந்திரம் கொண்ட உள்ளடைப்பு இயங்கும் தொடரின் மின்னிலையில் இருந்தால் இயங்கும் தொட்டி என்றும் நில மின்னிலையில் இருந்தால் இயங்காத் தொட்டி என்றும் வகைப்படுத்தப்படுகின்றன. 765 கேவி அறுதியிடப்பட்ட மின்னழுத்தத்துடன் உயர்-மின்னழுத்த மாறுதிசை மின்னோட்ட சுற்றமைப்புப் பிரிகலன்கள் வழக்கமாகக் கிடைக்கின்றன.

அனுப்பீட்டு அமைப்புகளில் பயன்படுத்தப்படும் உயர்-மின்னழுத்த சுற்றமைப்புப் பிரிகலன்கள் ஒரு முத்தருவாய் மின் தொடரின் மூன்று துருவங்களையும் திறப்பதற்கு பதிலாக, ஒரு துருவத்தைத் திறப்பதற்கு ஏதுவாக இருக்குமாறு அமைக்கப்படலாம். சில வகை பிழைகளில் இது அமைப்பின் ஸ்திரத்தன்மையையும் இருப்பையும் மேம்படுத்தும்.

ஸல்ஃபர் ஹெக்ஸாப்ளூரைட் (எஸ்எஃப்6) உயர்-மின்னழுத்த சுற்றமைப்புப் பிரிகலன்கள்

தொகு

மின்வில் சுடரை அணைப்பதற்காக ஸல்ஃபர் ஹெக்ஸாஃப்ளூரைட் வாயு சூழ்ந்த தொடுமுனைகளை ஒரு ஸல்ஃபர் ஹெக்ஸாப்ளூரைட் சுற்றமைப்புப் பிரிகலன் பயன்படுத்துகிறது. இவை அநேகமாக அனுப்பீட்டு-நிலை மின்னழுத்தங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன; அடக்கமான வாயு-காப்பிட்ட இணைப்பியமைப்புகளில் இவை பொருத்தப்படலாம். பனி படர்ந்த பருவ நிலைகளில், எஸ்எஃப்6 வாயுவை திரவப்படுத்த வேண்டியிருப்பதால் சுற்றமைப்புப் பிரிகலன்களின் மின்னழுத்தம் குறைவாக அறுதியிடப்பட வேண்டியோ அல்லது கூடுதலாக உஷ்ணப்படுத்த வேண்டியோ இருக்கலாம்.

இதர பிரிகலன்கள்

தொகு

கீழ்காணும் வகைகள் தனிப் பகுதிகளில் விவரிக்கப்பட்டிருக்கின்றன.

  • ஒரு மிகை-மின்னோட்ட சாதனத்தை திறப்பதற்கு சக்தியில்லாத, மிகச் சிறியதாய் இருக்கும் நிலப் பிழைகளுக்கு எதிராக பாதுகாக்கும் பிரிகலன்கள்:
    • எச்ச-மின்னோட்ட சாதனம் (ஆர்சிடி, முன்னர் எச்ச மின்னோட்ட சுற்றமைப்புப் பிரிகலன் எனப்படுவது) - மின்னோட்ட சமநிலையின்மையை கண்டறியும். ஆனால் இது மிகை-மின்னோட்டப் பாதுகாப்பை வழங்காது.
    • மிகை-மின்னோட்ட பாதுகாப்புடன் எச்ச மின்னோட்ட பிரிகலன் (ஆர்சிபிஓ) - ஆர்சிபி மற்றும் எம்சிபியின் செயல்பாடுகளை ஒரே அமைப்பில் இணைந்து வழங்குகிறது. ஐக்கிய நாடுகள் மற்றும் கனடாவில், தரை (நில) பிழை கண்டுபிடித்தல் மற்றும் மிகை-மின்னோட்ட பாதுகாப்பு ஆகிய இரண்டையும் இணைந்து அளிக்கும் பலகையில் பொருத்தியுள்ள சாதனங்கள் நிலப் பிழை சுற்றமைப்பு தடை செய்யும் பிரிகலன்கள் (ஜிஎஃப்சிஐ) என்று அழைக்கப்படுகின்றன; நிலப் பிழையை மட்டுமே கண்டுபிடிக்கும் ஒரு சுவரில் மாட்டப்பட்டிருக்கும் வடிகால் கருவி ஜிஎஃப்டி என அழைக்கப்படுகிறது.
    • நில மின்னொழுகி சுற்றமைப்புப் பிரிகலன் (ஈஎல்சிபி) - இது சமநிலையின்மையைக் கண்டுபிடிப்பதை விட நில மின்னோட்டத்தை நேரடியாகக் கண்டுபிடிக்கிறது. பல்வேறு காரணங்களினால் இவை புதிய அமைப்புகளில் காணப்படுவதில்லை.
  • தானியங்கி மூடி - ஒரு தாமதத்திற்கு பின் தானாகவே மறுபடி மூடிக் கொள்ளும் ஒரு வகை சுற்றமைப்புப் பிரிகலன். இவை மேலே பொருத்தப்பட்டிருக்கும் மின்சக்தி பகிர்மான அமைப்புகளில் குறுகிய இடைவெளி கொண்ட பிழைகள் தொடர்ந்து நிகழாமல் இருப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றன.
  • பாலிஸ்விட்ச் (பாலிஃப்யூஸ்) - சுற்றமைப்புப் பிரிகலன் என்றில்லாமல் தானாகவே மறுபடி மீள்விப்பு நிலைக்கு சென்றுவிடும் உருகி என விவரிக்கப்படும் ஒரு சிறிய சாதனம்.

மேற்குறிப்புகள்

தொகு
  1. இராபர்ட் ஃப்ரெய்டெல் மற்றும் பால் இஸ்ரேல், எடிசனின் மின் விளக்கு: ஒரு கண்டுபிடிப்பின் வரலாறு , ரட்ஜர்ஸ் பல்கலைக்கழக பத்திரிக்கைத் துறை, நியூ ஃப்ரன்ஸ்விக் நியூ ஜெர்ஸி யுஎஸ்ஏ,1986 ஐஎஸ்பிஎன் 0-8135-1118-6 பிபி.65-66
  2. பி. எம். வீடியின், மின் சக்தி அமைப்புகள் இரண்டாவது பதிப்பு , ஜான் வைலி அண்ட் சன்ஸ், லண்டன், 1972, ஐஎஸ்பிஎன் 0471924458 பிபி. 428-430
  3. ஹெச்டிடிபி://போன்லெ.என்.அலிபாபா.காம்/ப்ராடக்ட்/50348671/51680889/சிவிட்ச்/எம்சிபி___எம்சிசிபி.ஹெச்டிஎம்எல்[தொடர்பிழந்த இணைப்பு]
  4. சில தயாரிப்பாளர்கள் இப்பொழுது 72.5 கேவி வரை, மேலும் 145 கேவி வரை, திறன் கொண்ட ஒரு தனித்த-புட்டி வெற்றிட பிரிகலனை வழங்குகின்றனர். காண்க: ஹெச்டிடிபி://டபிள்யூடபிள்யூடபிள்யூ3.இண்டர்சயின்ஸ்.வைலி.காம்/ஜர்னல்/113307491/அப்ஸ்ட்ராக்ட்?சிரீட்ரை=1&எஸ்[தொடர்பிழந்த இணைப்பு] ரீட்ரை=0 எலக்ட்ரிக்கல் எஞ்சினியரிங்க் இன் ஜப்பான், வால் 157 இஷ்யூ 4 பக்கங்கள் 13-23
  • பிஎஸ் ஈஎன் 60898-1. மின்சார துணைப்பொருட்கள் - வீடுகள் மற்றும் அவற்றைப்போன்ற இடங்களுக்கு மிகை-மின்னோட்டத்திலிருந்து பாதுகாக்கும் சுற்றமைப்புப் பிரிகலன்கள் பிரித்தானிய தரநிலைகள் நிறுவனம், 2003.

புற இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Circuit breakers
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுற்றமைப்புப்_பிரிகலன்&oldid=3925021" இலிருந்து மீள்விக்கப்பட்டது