சுலபா தேசுபாண்டே
சுலபா தேசுபாண்டே (Sulabha Deshpande மராத்தி: सुलभा देशपांडे; 1937 - 4 ஜூன் 2016) ஓர் இந்திய நடிகை மற்றும் நாடக இயக்குநர் ஆவார். மும்பையில் மராத்தி நாடகங்கள் மற்றும் இந்தி நாடகங்கள் தவிர, இவர் 73 க்கும் மேற்பட்ட முக்கிய பாலிவுட் படங்களில் நடித்தார். இவர் பூமிகா (1977), அரவிந்த் தேசாய் கி அஜீப் தஸ்தான் (1978), மற்றும் காமன் (1978) போன்ற கலைத் திரைப்படங்கள் ,பல தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் நாடகங்களில் நடித்துள்ளார்.[1][2] 1960 களின் கலை நாடக இயக்கத்தில் ஒரு முன்னணி நபராக இருந்த இவர், ரங்கையன் மற்றும் விஜய் டெண்டுல்கர், விஜய மேத்தா மற்றும் சத்யதேவ் துபே போன்ற இணைந்து பணியாற்றியுள்ளார். 1971 ஆம் ஆண்டில், இவர் தனது கணவர் அரவிந்த் தேசுபாண்டேவுடன் இணைந்து இவிசுகர் எனும் நாடகக் குழுவினை நிறுவினார், மற்றும் தொழில்முறை குழந்தைகள் நாடகப் பிரிவினையும் நிறுவினார் அது சந்திரசாலா என்ற பெயரில் தொடங்கப்பட்டது.[3] பிற்காலத்தில், ஜீ லே ஜாரா, ஏக் பாக்கெட் உமீத், அஸ்மிதா போன்ற தொடர்களிலும் , இங்கிலீஷ் விங்கிலீஷ் போன்ற படங்களிலும் நடித்தார்.
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஇவர் மும்பையில் பிறந்து வளர்ந்தார், அங்கு இவர் மும்பை கோட்டையில் உள்ள சித்தார்த்தா கல்லூரியில் படித்தார், பின்னர் கல்வியியல் பட்டம் பெற்றார்.
தேசு பாண்டே மும்பையின் தாதரில் உள்ள சபில்டாசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அங்கு பணிபுரியும் போது இவர் பிரபல நாடக ஆசிரியர் விஜய் தெண்டுல்கரிடம் தனது மாணவர்களுக்காக ஒரு சில நாடகங்களை எழுதும்படி கேட்டார். இது நாடகத்துடனான இவளது தொழில் வாழ்க்கையின் துவக்கமாக அமைந்தது , காலப்போக்கில் 1960 களின் பரிசோதனை நாடக இயக்கத்தில் முன்னோடியாக ஆனார், இவர் விஜய மேத்தா, விஜய் டெண்டுல்கர், அரவிந்த் தேசு பாண்டே மற்றும் ஸ்ரீராம் லகூ ஆகியோரால் நிறுவப்பட்ட ரங்கயான் குழுவில் சேர்ந்தார்.[4] விரைவில், இவர் தனது நடிப்புத் தொழிலைத் தொடங்கினார், இருப்பினும் இவர் மத்லியா பிந்தே மற்றும் சாசா அனி கசவ் போன்ற நாடகங்களுக்காக மாநில அளவிலான போட்டிகளில் வென்றபோது பரவலாக அறியப்பட்டார். ரங்கையன் குழு கலைந்த பிறகு, இவர் தனது கணவர் அரவிந்த் தேசு பாண்டே மற்றும் அருண் ககடே ஆகியோர் சேர்ந்து 1971 இல் இவிசுகர் என்ற நாடகக் குழுவை உருவாக்கினார். விஜய் டெண்டுல்கரின் பிரபல நாடகமான சாந்ததாவில் லீலா பெனாரே கதாநாயகியாக நடித்தார். 1967 இல் வெளியான சந்ததா! கோர்ட் சாலு அஹே எனும் நாடகத்தில் தனது திறமையை வெளிப்படுத்தினார். பின்னர் இவர் சத்யதேவ் துபே இயக்கிய நாடகத்தின் 1971 திரைப்பட பதிப்பில் நடித்தார், இது இவரது தொழில் வாழ்க்கையின் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு இவர் 1970 மற்றும் 1980 களில் இந்திய புதிய அலை சினிமாவின் இயக்குநர்களாகக் கருதப்பட்ட சியாம் பெனகல் உள்ளிட்டோரின் இயக்கத்தில் பாலிவுட் சினிமா மற்றும் மராத்தி சினிமாக்களில் பணியாற்றினார்.[5][6]
விருதுகள்
தொகு1987 இல் மராத்தி மற்றும் இந்தி நாடகங்களில் நாடக நடிப்புக்காக இவருக்கு சங்கீத நாடக அகாதமி விருது வழங்கப்பட்டது, இந்த விருதை இந்தியாவின் தேசிய இசை, நடனம் & நாடக அகாடமியான சங்கீத் நாடக அகாதமி வழங்குகிறது. பயிற்சி பெறும் கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த இந்திய அங்கீகாரம் இது.[7] 2010 இல் தன்வீர் சன்மான் விருதையும் பெற்றார் [5] இவர் நானாசாகேப் பதக் புரஸ்கார், கண்பத்ராவ் ஜோசி புரஸ்கார், போன்ற பல்வேறு இதர விருதுகளையும் பெற்றுள்ளார்.
சான்றுகள்
தொகு- ↑ "Theatre guru Satyadev Dubey passes away". The Hindu. 25 December 2011. http://www.thehindu.com/arts/theatre/article2747083.ece.
- ↑ "Interview : 'Reaction matters to me'". தி இந்து. 16 November 2008 இம் மூலத்தில் இருந்து 16 ஏப்ரல் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100416053514/http://www.hindu.com/mag/2008/11/16/stories/2008111650040200.htm.
- ↑ "Quality, not quantity of life, matters, feels Sulabha Deshpande". Indian Express. 13 October 2012. http://www.indianexpress.com/news/quality-not-quantity-of-life-matters-feels-sulabha-deshpande/1016147/0.
- ↑ Vijay Tendulkar. Five Plays For Children. Scholastic India. p. introduction. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8184771339.
- ↑ 5.0 5.1 "Tanveer Sanman for Sulabha Deshpande" இம் மூலத்தில் இருந்து 2014-02-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140202095651/http://articles.timesofindia.indiatimes.com/2010-12-02/pune/28258514_1_roopwedh-pratishthan-honour-theatre-personalities-tanveer-natyadharmi-puraskar.
- ↑ "Tanveer Sanman for veteran actress Sulabha Deshpande". http://www.dnaindia.com/entertainment/report_tanveer-sanman-for-veteran-actress-sulabha-deshpande_1476461.
- ↑ "SNA: List of Akademi Awardees". Sangeet Natak Akademi Official website. Archived from the original on 17 February 2012.