விஜயா மேத்தா

இந்திய நடிகை

விஜயா மேத்தா (Vijaya Mehta) (பிறப்பு 4 நவம்பர் 1934 [1] ) ஒரு பிரபல இந்திய மராத்தி திரைப்பட மற்றும் நாடக இயக்குநரும், பல இணைத் திரைப்படங்களில் நடிக்கும் ஒரு நடிகரும் ஆவார். மும்பையைச் சேர்ந்த "இரங்காயன்"நாடகக் குழுவின் நிறுவனர் உறுப்பினரான இவர், நாடக ஆசிரியர் விஜய் தெண்டுல்கர் நடிகர்கள் அரவிந்த் தேஷ்பாண்டே, ஸ்ரீராம் லகூ ஆகியோருடன் சேர்ந்து பணியாற்றினார். பார்ட்டி (1984) என்ற திரைப்படத்தில் பாராட்டப்பட்ட பாத்திரத்துக்காகவும், ராவ் சாஹேப் (1986) மற்றும் பெஸ்டன்ஜி (1988) ஆகிய படங்களுக்காகவும் இவர் மிகவும் பிரபலமானவர். இரங்காயன் நாடகக் குழுவின் நிறுவனர் உறுப்பினராக 1960களின் மராத்தி சோதனை நாடகங்களில் ஒரு முன்னணி நபராக இருந்தார்.[2] 1987இல் இவருக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.

விஜயா மேத்தா
2012இல் விஜயா மேத்தா
பிறப்புவிஜயா ஜெயவந்த்
4 நவம்பர் 1934 (1934-11-04) (அகவை 90)
வடோதரா, பரோடா அரசு, பிரித்தானிய இந்தியா (தற்போதைய வடோதரா, குசராத்து, இந்தியா)
வாழ்க்கைத்
துணை
ஹரின் கோட் (இறப்பு)
பரூக் மேத்தா
பிள்ளைகள்அனஹைதா உபேராய்
விருதுகள்1975 சங்கீத நாடக அகாதமி விருது
பார்ட்டி படத்துக்காக 1985 ஆசியா பசிபிக் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது
ராவ் சாஹெப் படத்திற்காக 1986 சிறந்த துணை நடிகைக்கான தேசிய திரைப்பட விருது

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்

தொகு

இவர், விஜயா ஜெயவந்த் என்ற பெயரில் குசராத்தின் வடோதராவில் 1934இல் பிறந்தார்.[3] இவர் மும்பை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். தில்லியில் இப்ராஹிம் அல்காசி மற்றும் ஆதி மர்ஸ்பானுடன் நாடகத்தைப் பயின்றார்.

தொழில்

தொகு

இவர் 60களின் மராத்தி சோதனை நாடகங்களில் ஒரு முக்கிய நபராக இருந்தார்.[4]

சி.டி. கானோல்கரின் ஏக் ஷூன்யா பாஜிராவ் என்ற இவரது மேடை தயாரிப்பு சமகால இந்திய நாடக அரங்கில் ஒரு அடையாளமாக கருதப்படுகிறது. ஜெர்மானியக் கவிஞரும், நாடக ஆசிரியருமான பெர்தோல்ட் பிரெக்ட்டின் தி காகசியன் சாக் சர்க்கிள், அயோனெஸ்கோ வித் சேர்ஸ் ஆகியவற்றைத் தழுவி மராத்தி நாடக அரங்குகளில் அறிமுகப்படுத்தினார்.

ஜெர்மன் இயக்குநர் பிரிட்ஸ் பென்னெவிட்சுடன் இந்தோ-ஜெர்மன் நாடகத் திட்டங்களில் இணைந்து பணியாற்றினார். இதில் ஜெர்மன் நடிகர்களுடன் பிரபலமான சமசுகிருத நாடகமான முத்ரா ராக்ஷஸம் என்ற பாரம்பரிய நாடகம் இருந்தது. பெஸ்டன்ஜியைத் தவிர, இவரது பெரும்பாலான படைப்புகள் இவரது மேடை நாடகங்களின் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தழுவல்களைக் கொண்டுள்ளன.

விருதுகள்

தொகு

நாடகங்களில் சிறந்து விளங்கியதற்காக 1975ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாதமி விருது இவருக்கு வழங்கப்பட்டது. 1986ஆம் ஆண்டில் ராவ் சாஹேப் (1986) திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய திரைப்பட விருதையும் வென்றார்.

சொந்த வாழ்க்கை

தொகு

இவர் முதலில் நடிகை துர்கா கோட்ட்டின் மகன் ஹரின் கோட் என்பவரை மணந்தார். இருப்பினும் அவர் சிறு வயதிலேயே இறந்தார். அவர் மூலம் இவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். அதன்பிறகு, இவர் பாரூக் மேத்தா என்பவரை மணந்தார்.[5]

விருதுகள்

தொகு
  • 1987 ஆம் ஆண்டில் இந்திய அரசால் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது
  • 1975 சங்கீத நாடக அகாதமி விருது
  • 1985 ஆசியா பசிபிக் திரைப்பட விழா : சிறந்த நடிகை: பார்ட்டி [6]
  • 1986 சிறந்த துணை நடிகைக்கான தேசிய திரைப்பட விருது: ராவ் சாஹேப் [7]
  • 2009 தன்வீர் சன்மான் [8]
  • 2012 சங்கீத நாடக அகாதமி தாகூர் ரத்னா

மேலும் படிக்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Abhijit Varde: Daughters of Maharashtra: Portraits of Women who are Building Maharastra : Interviews and Photographs, 1997, p. 87
  2. "The return of Desdemona". Mumbai Mirror. 25 January 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-06-22.
  3. Gulati, Leela (editor); Bagchi, Jasodhara (Editor); Mehta, Vijaya (Author) (2005). A space of her own : personal narratives of twelve women. London: SAGE. p. 181. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780761933151. {{cite book}}: |first1= has generic name (help)
  4. "Shantata! Awishkar Chalu Aahe". Mumbai Theatre Guide. August 2008.
  5. Shanta Gokhale (26 November 2012). "Life at play". Pune Mirror இம் மூலத்தில் இருந்து 17 பிப்ரவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130217225014/http://www.punemirror.in/printarticle.aspx?page=comments&action=translate&sectid=63&contentid=2012112620121126075151856ed14874e&subsite=. 
  6. Awards imdb.
  7. "33rd National Film Awards". இந்திய சர்வதேச திரைப்பட விழா. pp. 28, 36. Archived from the original on 5 May 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-06-22.
  8. [1]
  9. Gulati, Leela (editor); Bagchi, Jasodhara (Editor); Mehta, Vijaya (Author) (2005). A space of her own : personal narratives of twelve women. London: SAGE. p. 181. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780761933151. {{cite book}}: |first1= has generic name (help)

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜயா_மேத்தா&oldid=4173684" இலிருந்து மீள்விக்கப்பட்டது