துர்கா கோட்

இந்திய நடிகை

துர்கா கோட் (Durga Khote) (14 ஜனவரி 1905 முதல் 22 செப்டம்பர் 1991 வரை) ஓர் இந்திய நடிகை ஆவார், அவரது காலத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவராக தொடங்கி, இந்தி மற்றும் மராத்தி திரையுலகம், நாடககங்கள் பொன்றவற்றில் இவர் 50 க்கும் மேற்பட்ட ஆண்டுகளில் பணியாற்றியுள்ளார், சுமார் 200 படங்கள் மற்றும் பல திரையரங்கு தயாரிப்புகளில் பங்காற்றியுள்ளார்.

துர்கா கோட்
"அமர் ஜியோதி"யில் கோட் (1936)
பிறப்புவிட்டா லாட்
(1905-01-14)14 சனவரி 1905
மும்பை, மும்பை மாகாணம், British India
இறப்பு22 செப்டம்பர் 1991(1991-09-22) (அகவை 86)
மும்பை, மகாராஷ்டிரா. இந்தியா
பணிநடிகர், திரைப்பட தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1931–1983
விருதுகள்
  • பெங்கால் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் வழங்கிய சிறந்த நடிகருக்கான விருது
  • சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது
புகழ்ப்பட்டம்
"அமர் ஜியோதி"யில் துர்கா கோட் (1936)

2000இல் "இந்தியா டுடே" வெளியிட்ட சிறப்பிதழ் ஒன்றில் இந்தியாவை கட்டமைத்த நூறு நபர்களில் இந்தியத் திரைப்படத்துறை சார்பில் துர்கா கோட் பெயரும் இடம் பெற்றது.[1] திரைப்பட தொழிலில் நுழைந்த மரியாதைக்குரிய குடும்பங்களின் முதல் பெண்மணியாக அவர் இருந்தார், இது சமூக கட்டுப்பாட்டை உடைதெறிந்தது.[2]

பாலிவுட் படங்களில் தாய் பாத்திரங்களில் நடித்துள்ள நடிகைகளில் முதல் பத்து நடிகைகளில் ஒருவராக இருந்துள்ளார்.[3] அவைகளில் குறிப்பிடத்தக்க படங்களான "ஜோதாபாய்", முகல்-இ-அசாம் (1960); படத்தில் கைகேயி வேடம் விஜய் பட்டின் "பாரத் மிலாப்: போன்ற படங்களில் தாய் வேடங்களை ஏற்று நடித்துள்ளார். 1983இல் இந்திய சினிமாவுக்கு வாழ்நாள் முழுவதும் பங்களிப்பு வழங்கியதற்காக இந்தியத் திரைப்படத்துறை வழங்கும் மிக உயர்ந்த விருதான தாதாசாகெப் பால்கே விருது பெற்றார்.

இளமைக் காலம்

தொகு

கோவாவில் இருந்து வந்த கொங்கனி மொழி பேசும் ஒரு குடும்பத்தில் கோட் விட்டா லாட் என்ற பெயரில் பிறந்துள்ளார்.[4] அவரது தந்தையின் பெயர் பாண்டர்காங் சாம்ராவ் லாட் மற்றும் அவரது தாயின் பெயர் மஞ்சுளாபாய் என்பதாகும்.[4] கந்தேவாடியிலுள்ள ஒரு பெரிய விரிந்த குடும்பம் வளர்ந்தார். அவர் கதீட்ரல் உயர்நிலை பள்ளி மற்றும் செயின்ட் சேவியர் கல்லூரியில் இளங்கலை படித்தார், கல்லூரிக்குச் செல்லும் போதே, அவர் கோட் குடும்பத்தில் திருமணம் செய்துகொண்டு தனது கணவருடன் குடியேறினார்.[5]

26 வயதிலேயே, துர்கா கோட் கணவரை இழந்தார். பகுல் மற்றும் ஹரின் என்ற தனது குழந்தைகளுக்கு ஆதரவாக திரைப்படத்தில் பணிபுரிய ஆரம்பித்தார். அவ்வாறு செய்யும்போது, அனவருக்கும் அவர் ஒரு முன்னோடியாக ஆனார்: ஒரு பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்து புகழ் பெற்றார், மேலும் துணிச்சலானவராக கருதப்பட்ட இவர் திரைப்படத் தொழிலாளிகளின் பாதுகாவலராகவும், இருந்தார். மேலும், பெரும்பாலான பெண் கதாபாத்திரங்களில் அந்த நேரத்தில் ஆண்கள் நடித்து வந்தனர்.

தொழில்

தொகு
 
"அயோத்தியேச்சா ராஜா" படத்தில் தாராமதி வேடத்தில் கோட்

துர்கா கோட்டே பிரபாத் பிலிம் கம்பெனி மூலம் 1931 ஆம் ஆண்டின் பேசாப் படமான "ஃபாரேபி ஜால்"லில் ஒரு சிறிய பாத்திரத்தில் அறிமுகமானார், அதன் பின்' 'மாயா மச்சீந்திரா (1932) படத்தில் நடித்தார். 1932இல் இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் எடுக்கப்பட்ட பதிப்பான "அயோத்யாச்சா ராஜா" என்ற பிரபாத்தின் மற்றொரு படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார், மராத்தி மொழி பேசும் முதல் பேசும் பட்மாகும், இது நல்லதொரு வெற்றியைப் பெற்றது, அதில் அவர் "ராணி தாராமதி"யாக நடித்தார்.[6]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

துர்கா கோட்டே இளமைக் காலத்தில் தனது சொந்த சாதி மற்றும் சமூக பின்னணியைப் கொண்ட ஒரு இளைஞரான "விஸ்வநாத் கோட்" என்பவரை திருமணம் செய்துகொண்டார். இது ஒரு மரபு சார்ந்த குடும்பத்தின் பாரம்பரிய திருமணமாக இருந்தது, இந்த இணை ஒரு இசைவான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து, இவர்களுக்கு இரண்டு மகன்கள் ஆவர். பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் விஸ்வநாத் ஒரு இயந்திர பொறியியலாளராக இருந்தார். அவரது குடும்பம் உயர் நடுத்தர மற்றும் தொழில்முறை, நவீன ஆங்கில கல்வி மற்றும் உயர் சமூக நிலைப்பாட்டில் இருந்தது; அவருடைய மூதாதையர்கள் முக்கிய வங்கியாளர்களாக இருந்தனர். துர்காவின் 26 வயதில் விஸ்வநாத் கோட் இளம் வயதில் இறந்தார். 2013 மே 3 அன்று இந்திய அஞ்சல் துறை மரியாதைக்குரிய துர்காவின் முகத்தைத் தாங்கி நிற்கும் ஒரு தபால் முத்திரையை, வெளியிட்டது.

குறிப்புகள்

தொகு
  1. Women of Substance பரணிடப்பட்டது 8 சனவரி 2009 at the வந்தவழி இயந்திரம், இந்தியா டுடே.
  2. Ten most important women stars in Indian films பரணிடப்பட்டது 21 மார்ச்சு 2009 at the வந்தவழி இயந்திரம் Gautam Rajadhyaksha, ரெடிப்.காம்.
  3. Memorable Moms பரணிடப்பட்டது 2022-10-04 at the வந்தவழி இயந்திரம் The Statesman, 4 October 2008.
  4. 4.0 4.1 "Archived copy". Archived from the original on 5 ஏப்பிரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 15 சனவரி 2015.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  5. "Durga Khote Profile on Cineplot.com".
  6. "Profile with photographs". Archived from the original on 18 சனவரி 2006. பார்க்கப்பட்ட நாள் 22 சனவரி 2006.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Durga Khote
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துர்கா_கோட்&oldid=3944511" இலிருந்து மீள்விக்கப்பட்டது