சுலாவெசி நாற்கொம்புப் பன்றி

சுலாவெசி நாற்கொம்புப் பன்றி
CITES Appendix I (CITES)[1]
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
பெருவரிசை:
செடார்டியோடாக்டைலா
வரிசை:
குடும்பம்:
சூயிடே
பேரினம்:
இனம்:
பே. செலெபென்சிசு
இருசொற் பெயரீடு
பேபிரூசா செலெபென்சிசு
தெனிஞெர், 1909

சுலவேசி நாற்கொம்புப் பன்றி என்பது நான்கு கொம்புள்ள, பேபிரூசா செலெபென்சிசு (Babyrousa celebensis) என்னும் அறிவியற் பெயர் கொண்ட பாலூட்டிச் சிற்றினம் ஆகும். இது இந்தோனீசியத் தீவுகளில் வடக்கு சுலவேசியையும் அருகே உள்ள லெம்பேத் தீவுகளையும் இயற்கை வாழிடமாகக் கொண்டுள்ள ஓரினம். நான்கு கொம்புகள் உள்ள விலங்கு என்று கூறினாலும், அவற்றுள் இரண்டு கொம்புகள் இவ்விலங்கின் கீழ்த்தாடையின் நாய்ப்பற்கள் அல்லது புலிப்பற்கள் ஆகும். இதனை எயிறு என்றும் கூறுவர். மேல்தாடையின் மேலே நெற்றியை நோக்கி வளைந்து செல்லும் இரண்டு கொம்புகளும் எயிறே. இவ் விலங்கு சூயிடீ என்னும் பன்றிக் குடும்பத்தைச் சேர்ந்த விலங்கு.[2][3]

அறிவியற் பெயராக உள்ள பேபிரூசா (அல்லது பாபிரூசா) என்பது மலாய் மொழியில் உள்ள, பாபி (babi = பன்றி) + ரூசா (rusa = மான்) ஆகிய இருசொற்களின் கூட்டு ஆகும். மானின் கொம்பு போல் உள்ளதால் இப்பெயர் ஏற்பட்டது.

மேற்கோள்கள், அடிக்குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 Macdonald, A.A.; Burton, J.; Leus, K. (2008). "Babyrousa babyrussa". IUCN Red List of Threatened Species 2008: e.T2461A9441445. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T2461A9441445.en. https://www.iucnredlist.org/species/2461/9441445. பார்த்த நாள்: 16 January 2022. 
  2. Meijaard, E.; Groves, C. P. (2002). "Upgrading three subspecies of Babirusa (Babyrousa sp.) to full species level". IUCN/SSC Pigs, Peccaries, and Hippos Specialist Group (PPHSG) Newsletter 2 (2): 33–39. 
  3. Meijaard, E.; d'Huart, J. P. & Oliver, W. L. R. (2011). "Babirusa (Babyrousa)". In Wilson, D. E. & Mittermeier, R. A. (eds.). Handbook of the Mammals of the World. Vol. 2. Hoofed Mammals. pp. 274–276. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-84-96553-77-4.