மான் பன்றி
(பேபிரூசா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
புரு முக்கொம்புப் பன்றி | |
---|---|
Babyrousa celebensis | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
பெருவரிசை: | |
வரிசை: | |
குடும்பம்: | பன்றி
|
துணைக்குடும்பம்: | Babyrousinae
|
பேரினம்: | புரு முக்கொம்புப் பன்றி
|
இனங்கள் | |
See text. |
மான் பன்றி (Babirusa) என்னும் ஒருவகைப் பன்றிக் குடும்பத்துப் பேரினம் இந்தோனேசியத் தீவுகளில் ஒரு மாநிலமான மலுக்குத் தீவுகளில் உள்ள புரு, சுலா ஆகிய தீவுகளில்[1] வாழ்கின்றன. இப் பேரினத்தில் நான்கு கொம்புகள் கொண்ட சுலாவெசி நாற்கொம்புப் பன்றி ஓரளவுக்கு அறியப்பட்ட விலங்கு. நான்கு கொம்புகள் உள்ள விலங்கு என்று கூறினாலும், அவற்றுள் இரண்டு கொம்புகள் இவ்விலங்கின் கீழ்த் தாடையில் உள்ள நாய்ப் பற்கள் அல்லது புலிப் பற்கள் ஆகும். இதனை எயிறு என்றும் கூறுவர். மேற்றாடையில் இருந்தும் நடுவே நெற்றிப்புறமாக வளைந்து உள்ள மேலும் இரண்டும் கொம்புகளும் எயிறே. இப் பேரினத்தில் உள்ள விலங்குகள் சூயிடீ என்னும் பன்றிக் குடும்பத்தைச் சேர்ந்தவை.
பெயர்க்காணம்
தொகுBabirusa என்றால் இந்தோனேசிய மொழியில் மான் பன்றி என்று பொருள்.
இனங்கள்
தொகு- புரு பபிரூசா, Babyrousa babyrussa – also known as the Hairy or Golden Babirusa.
- †Babyrousa bolabatuensis (subfossil)
- சுலாவெசி நாற்கொம்புப் பன்றி, சுலாவெசி முக்கொம்புப் பன்றி, பேபிரவுசா செலெபென்சிசு (Babyrousa celebensis ).
- தோகியன் மான் பன்றி பேபிரவுசா தோக்கியன்சிசு
மேற்கோள்கள், அடிக்குறிப்புகள்
தொகு- ↑ Wilson, D. E., and Reeder, D. M., ed. (2005). Mammal Species of the World (3rd ed.). Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4.
{{cite book}}
: CS1 maint: multiple names: editors list (link)