சுலைகா சௌத்ரி

சுலைகா சௌத்ரி இந்தியாவில் புது டெல்லி மற்றும் மும்பையைச் சேர்ந்த நாடக இயக்குநர் மற்றும் ஒளி வடிவமைப்பாளர் ஆவார். அவர் புது தில்லியில் உள்ள நாடக கலை மற்றும் வடிவமைப்பு கல்வியகத்தின் வருகை தரும் ஆசிரியர் (காட்சிப்பணி) ஆவார்.

சுலைகா சௌத்ரி, சங்கீத நாடக அகாடமி, யுவ புருஸ்கர் விருது 2007 [1][2] மற்றும் சார்லஸ் வாலஸ் இந்தியா டிரஸ்ட் விருது, 2001/2002 ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

கல்வி மற்றும் ஆரம்ப வாழ்க்கை

தொகு

சௌத்ரி, 1995இல் அமெரிக்காவின் வெர்மான்ட்டில் உள்ள பென்னிங்டன் கல்லூரியில் நாடக இயக்கம் மற்றும் ஒளி வடிவமைப்பில் தேர்ச்சி பெற்றார். அவர் பிரபல இந்திய நாடக இயக்குநரான இப்ராஹிம் அல்காசியின் பேத்தியும், நாடக இயக்குநரும், புது தில்லியின் தேசிய நாடகப் பள்ளியின் முன்னாள் தலைவருமான அமல் அல்லானாவின் மகளும் ஆவார். அவர் தனது குடும்பத்தைப் பற்றி இவ்வறு குறிப்பிடுகிறார் - "பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, நான் என்னைச் சுற்றி நாடக ஒத்திகைகளுடன் வளரவில்லை. குழந்தைகளாகிய நாங்கள் அவ்வளவு நாடகங்கள் பார்த்ததில்லை. ஒருவேளை, நாங்கள் அவ்வளவு ஆர்வம் காட்டாததாலேயே நான் சொந்தமாக அதை வந்தடைந்தேன் போல." [3]

வேலை

தொகு

இடஎல்லை மற்றும் அதன் சார் கதையுடனான அவரது சோதனைகள் அவரது படைப்புகளைப் பரவலாகத் தெரிவிக்கின்றன. அவரது பணியானது செயல்திறனின் தன்மையையும் உரைகளுக்கும் நடிகருக்கும் இடையேயான உறவையும், நடிகருக்கும் இடத்துக்கும் இடையே உள்ள தொடர்பையும், செயல்திறன் அனுபவத்தில் பார்வையாளரின் பங்கையும் பற்றி ஆராய்கிறது.[4][5] அவர் தனது படைப்புகளை "இடஎல்லையின் ஆய்வு மற்றும் விவரிப்புகளின் கட்டுமானம் மற்றும் அனுபவத்தில் இடஎல்லை வகிக்கும் பங்கு - அது மனித உடலின் இடமாக இருந்தாலும் சரி, அல்லது செயல்திறன் நடக்கும் இடமாக இருந்தாலும் சரி" என்று விவரிக்கிறார்.[6] அவரது முதல் பெரிய நாடகத் தயாரிப்பான 'ரோலண்ட் ஷிம்மெல்ப்ஃபெனிக்கின் 'அரேபியன் நைட்', கோஜ் சர்வதேச கலைஞர்கள் சங்கத்துடன் இணைந்து மேக்ஸ் முல்லர் பவனால் ஆதரிக்கப்பட்ட ஒரு சோதனை தளம் சார்ந்த நிறுவல் மற்றும் செயல்திறன் ஆகும்.[7] 2006 ஆம் ஆண்டில் புது தில்லியில் உள்ள கோஜ் ஸ்டுடியோவில் தயாரிப்பு செய்யப்பட்டும் சியோல்லில் 2007 ஆம் ஆண்டு சியோல் கலை நிகழ்ச்சிகளில் மீண்டும் வழங்கப்பட்டது.[8]

 
ஹான்ஸ் உல்ரிச் ஒப்ரிஸ்ட் கோஜ் மராத்தான், 2011 இன் போது சுலைகா சௌத்ரி.

ஹருகி முரகாமியின் சிறுகதையான ஆன் சீயிங் தி 100% பெர்ஃபெக்ட் கேர்ள் ஒன் பியூட்டிஃபுல் ஏப்ரல் மார்னிங்கைத் தழுவிய, 2008 இல் கோஜ் ஸ்டுடியோவில் வழங்கப்பட்ட தனது அடுத்த திட்டமான 'ஆன் சீயிங்' மூலம் தளம் சார்ந்த நிறுவல் மற்றும் செயல்திறன் கலையின் இந்த பாணியைத் தொடர்ந்தார். இது புது தில்லி [9] மற்றும் பல்வேறு நாடக விழாக்கள் மற்றும் 2010 இல் வியன்னாவில் உள்ளஎஸ்ஸெல் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.[10][11] புது டெல்லியில் உள்ள கோஜ் ஸ்டுடியோவில் மூன்று அறைகளில் அமைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, பார்வையாளர்களை நடிகர்களுடன் சேர்த்து ஒவ்வ்ரு அறைக்கும் நகர்த்தவேண்டியிருந்தது.[3] இந்த தனித்துவமான நடிப்பைப் பற்றி சௌத்ரி, "செயல்திறன் மற்றும் பார்வையாளர்கள் நகரும்போது - உரை துண்டாகிறது. நான் அந்த இணைப்பை ஆராய விரும்பினேன்" என்று விளக்குகிறார்.[3]

சௌத்ரியின் திட்டமான நோர்வே நாடக ஆசிரியர் ஹென்ரிக் இப்சனின் இறுதி நாடகமான ஜான் கேப்ரியல் போர்க்மேனை அடிப்படையாகக் கொண்ட, ராக்ஸ் மீடியா கலெக்டிவ்வின் மூல உரைகளுடன் ஒத்த 'ஹென்ரிக் இப்சனின் ஜான் கேப்ரியல் போர்க்மேனுக்கான சில நிலை திசைகள்', 2009 ஆம் ஆண்டு டெல்லி இப்சன் விழாவிற்காக நியமிக்கப்பட்டது.[8]

சௌத்ரியின் பிற்காலப் பணிகள் அவரது மேடைத் தயாரிப்புகளிலிருந்து உருவாக்கப்பட்ட நிறுவல்களைக் கொண்டிருந்தன. 2010 ஆம் ஆண்டு கோஜ் ஸ்டுடியோஸின் ஆர்ட்டிஸ்ட் ரெசிடென்சி திட்டத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட அவரது முந்தைய மேடைத் தயாரிப்பான 'ஹென்ரிக் இப்சனின் ஜான் கேப்ரியல் போர்க்மேனுக்கான சில நிலை திசைகள்' என்பதைத் தழுவிய அவரது அடுத்த திட்டமான, 'ப்ரோபோசிஷன்ஸ்: ஆன் டெக்ஸ்ட் அண்ட் ஸ்பேஸ்' நடிகர்களை விடுத்து நாடகத்தில் இருக்கும் இடஎல்லை மற்றும் உரைகளின் மூலம் மொழிபெயர்க்கப்பட்டது. அவரது அடுத்தத் திட்டமான, 'ப்ரோபோசிஷன்ஸ்: ஆன் டெக்ஸ்ட் அண்ட் ஸ்பேஸ் II', ரோலண்ட் ஷிம்மெல்ஃபென்னிக்கின் 'முன்/பின்' நாடகத்தின் உரைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு இடஎல்லை மற்றும் உரை நிறுவல், 2011 இல் மும்பையின் மேக்ஸ் முல்லர் பவனின் ஒத்துழைப்புடன் மும்பையின் ப்ராஜெக்ட் 88 இல் திறக்கப்பட்டது. எந்த ஒரு கலைஞர்களும் இல்லாமல், நாடகத்தின் நிறுவல், உரை, ஒலி, இடம் மற்றும் ஒளி ஆகியவற்றில் கதையின் தன்மையை இது ஆராய்கிறது.[5][12]

ராக்ஸ் மீடியா கலெக்டிவ் உடன் இணைந்து அவரது சமீபத்திய திட்டமான 'சீன் அட் செகந்திராபாத்', 1857 இல் காலனித்துவ போர் புகைப்படக் கலைஞர் ஃபெலிஸ் பீட்டோ எடுத்த புகைப்படத்தை மறுகட்டமைக்க முயற்சித்த பல்லூடக நிகழ்ச்சியாகும். இந்தத் திட்டம் 2011 இல் ப்ருஷெல்சில் உள்ள குன்ஸ்டன்ஃபெஸ்டிவல்டெசார்ட்ஸில் திரையிடப்பட்டது [13][14]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

சவுத்ரி முன்பு நடிகரான மணீஷ் சவுத்ரியை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது , ஆன் சீயிங் தி 100% பெர்ஃபெக்ட் கேர்ள் ஒன் பியூட்டிஃபுல் ஏப்ரல் மார்னிங் மற்றும் அரேபியன் நைட்ஸ் போன்ற அவரது பல தயாரிப்புகளில் கணவர் ஒத்துழைத்தார். அவர்களின் முன்னாள் குழு, பெர்ஃபார்மர்ஸ் அட் வொர்க் என்று அழைக்கப்பட்டது. இது 1997 இல் தொடங்கி முதன்மையாக உரையை காட்சிகளாக மொழிபெயர்ப்பதில் வேலை செய்தது. ஹெர்மன் ஹெஸ்ஸியின் சித்தார்த்தா, வர்ஜீனியா வுல்ஃப்ஸ் ஆர்லாண்டோ மற்றும் அவர்களின் சொந்த, மகாபாரத திட்டம் போன்ற படைப்புகளை இக்குழு தயாரித்துள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Voices in my Head". http://www.indianexpress.com/news/voices-in-my-head/689713/. 
  2. name="SNA">"Ustad Bismillah Khan Yuva Puraskar". Sangeet Natak Academi. Sangeet Natak Akademi. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.
  3. 3.0 3.1 3.2 name="Delhi Compass"
  4. name="Timeout">. 
  5. 5.0 5.1 . 
  6. name="Timeout"
  7. name="Khoj">"Arabian Night". Khoj. Khoj International Artists' Association. Archived from the original on 2 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. 8.0 8.1 name="Zuleikha">"Zuleikha Chaudhuri". Khoj International Artists' Association. Khoj International Artists' Association. Archived from the original on 3 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. name="IFA">"in India and far beyond: Khoj International Artists' Association". ifa.de/. Institut für Auslandsbeziehungen (ifa). Archived from the original on 2 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. name="IFA"
  11. name="Essl">"India Awakens: Under the Banyan tree". essl.museum/en. Essl Museum, Vienna. Archived from the original on 3 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  12. "Propositions- on Text and Space II". Project 88. Project 88, Mumbai. Archived from the original on 3 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 27 November 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  13. "Brussels: Kunstenfestivaldesarts, 2011". kfda.be. Kunstenfestivaldesarts. Archived from the original on 2 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 27 November 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  14. a, a. "The Kunstenfestivaldesarts is greater than the sum of its part". www.flanderstoday.eu. Flanders today. Archived from the original on 2 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 27 November 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுலைகா_சௌத்ரி&oldid=4169446" இலிருந்து மீள்விக்கப்பட்டது