சுலோவேனிய விக்கிப்பீடியா


சுலோவேனிய விக்கிபீடியா (Slovene Wikipedia) என்பது கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவின் சுலோவேனிய மொழி பதிப்பாகும். 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் சுலோவேனிய விக்கிபீடியா செயல்படுகிறது. 2007 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் சுலோவேனிய மொழியில் 50000 கட்டுரைகள் எழுதப்பட்டன. 2021 ஆம் ஆண்டு சனவரி மாத நிலவரப்படி இம்மொழியில் 171000 கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.

சுலோவேனிய விக்கிப்பீடியா
வலைத்தள வகைஇணைய களைக்களஞ்சியத் திட்டம்
கிடைக்கும் மொழி(கள்)சுலோவேனிய மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்கட்டாயமல்ல
உரலிhttp://sl.wikipedia.org/

சுலோவேனிய விக்கிபீடியா அந்நாட்டில் மேற்கோள் பணிகளுக்காக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. சுலோவேனியப் பயனர்கள் அதிகம் பார்வையிடுகின்ற சமூக வலைப்பின்னல் சேவைகளில் ஒன்றாகவும் இவ்விக்கிப்பீடியா திகழ்கிறது. பொதுவாக இதிலுள்ள அதிகாரப்பூர்வ இணையப் பயன்பாட்டு புள்ளிவிவரங்களுக்கும் விக்கிபீடியா பதிப்புகளுக்கும் இடையில் வேறுபாடுகள் ஏதும் இருப்பதில்லை. விக்கிப்பீடியா.ஆர்க் என்ற அடிப்படையான ஆள்களப் பெயரில் மட்டுமே சுலோவேனிய விக்கிப்பீடியா பகுப்பாய்வு செயல்களை மேற்கொள்கிறது.[1] பெரும்பாலான சந்தர்ப்பங்களில், சுலோவேனிய மொழி பதிப்பு விக்கிபீடியா பற்றிய ஊடக அறிக்கை பட்டியலில் இதன் பொதுவான இருப்பு இடம்பெறுகிறது.[2][3] இருப்பினும், கட்டமைக்கப்பட்ட அறிவின் ஒப்பீட்டளவில் ஒரு பெரிய மற்றும் சுதந்திரமாக அணுகக்கூடிய அமைப்பாக, சுலோவேனிய விக்கிப்பீடியா திகழ்கிறது. எடுத்துக்காட்டாக, மொழியியல் மென்பொருளைப் பயிற்றுவிப்பதற்கான மூல மின் நூலகத்தை உருவாக்குவதற்கும்,[4] சுலோவேனிய இலக்கிய ஆசிரியர்களின் வலை இருப்பை பகுப்பாய்வு செய்வதற்கும் இவ்விக்கிப்பீடியா அங்கு பயன்படுத்தப்படுகிறது.[5] உலுப்லயானா பல்கலைக்கழகப் பேராசிரியர்களுடன் இணைந்து பல வெற்றிகரமான ஒத்துழைப்பு திட்டங்கள் சுலோவேனிய மொழி விக்கிப்பீடியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுலோவேனிய நாட்டு மாணவர்களைக் கொண்டு உள்ளடக்க உருவாக்கத்தை மேம்படுத்துவது ஒரு கற்பித்தல் முறையாக இங்கு பின்பற்றப்படுகிறது.[6]

சுலோவேனிய தீவிர விக்கிபீடியர்கள் தேசிய ஊடகங்களில் விக்கிபீடியா பற்றிய விவாதங்களில் இடம்பெறுகின்றனர். பொதுவான விக்கிப்பீடியா மேம்பாடு மற்றும் சுலோவேனிய மொழி விக்கிப்பீடியா சார்ந்த விவாதங்கள் இதில் இடம்பெறுகின்றன.[7][8]

மைல்கற்கள்

தொகு
  • 100 கட்டுரைகள் - சூன் 18, 2002
  • 1,000 கட்டுரைகள் - செப்டம்பர் 30, 2003
  • 10,000 கட்டுரைகள் - பிப்ரவரி 7, 2005
  • 20000 கட்டுரைகள் - திசம்பர் 17, 2005
  • 30,000 கட்டுரைகள் - சூன் 30, 2006
  • 40,000 கட்டுரைகள் - பிப்ரவரி 15, 2007
  • 50,000 கட்டுரைகள் - சூலை 17, 2007
  • 100,000 கட்டுரைகள் - ஆகத்து 15, 2010

மேற்கோள்கள்

தொகு
  1. "RIS: Najbolj obiskana spletna skupnost v Sloveniji je Youtube, sledita ji Facebook in Wikipedia" (in Slovenian). Dnevnik. September 16, 2010. http://www.dnevnik.si/novice/znanost/1042388400. பார்த்த நாள்: June 2, 2011. 
  2. Budal, Martina (April 11, 2006). "Uporaba brezplačna in vsestranska, sodelovanje neomejeno" (in Slovenian). Večer இம் மூலத்தில் இருந்து செப்டம்பர் 29, 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070929012412/http://bor.czp-vecer.si/vecer2000_XP/2006/04/11/2006-04-11%20STR-16-16%20MX-01%20IZD-01-02-03-04-05-06%20PAG-SLOVENIJA.PDF. பார்த்த நாள்: June 2, 2011. 
  3. "Na Wikipedii več kot trije milijoni člankov" (in Slovenian). MMC RTV-SLO. August 24, 2009. http://www.rtvslo.si/znanost-in-tehnologija/na-wikipedii-vec-kot-trije-milijoni-clankov/210617. பார்த்த நாள்: June 2, 2011. 
  4. (2010) "Learning to Mine Definitions from Slovene Structured and Unstructured Knowledge-Rich Resources". Proceedings, European Language Resources Association.
  5. Hladnik, Miran(2006). "Contemporary Slovene Literature and Electronic Sources". Almanac, 20–23.
  6. Hladnik, Miran (July 22, 2007). "Wikipedija v izobraževalnem procesu" (in Slovenian). Archived from the original on ஜூன் 26, 2013. பார்க்கப்பட்ட நாள் June 2, 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)CS1 maint: unrecognized language (link)
  7. "Jani Melik in Jernej Polajnar - administratorja slovenske Wikipedije". Nočni obisk. RTV Slovenija. Radio Slovenija, 1. program. September 19, 2010. அணுகப்பட்டது June 2, 2011.
  8. Upelj, Boris (September 27, 2010). "Najbolj obsežen seznam vprašanj in odgovorov na svetu prosi za pomoč" (in Slovenian). Dnevnik. http://dnevnik.si/objektiv/vec_vsebin/1042406182. பார்த்த நாள்: June 2, 2011. 

புற இணைப்புகள்

தொகு
 
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் சுலோவேனிய விக்கிப்பீடியாப் பதிப்பு