சுல்தான் இசுமாயில் மின் நிலையம்
சுல்தான் இசுமாயில் மின்நிலையம் (ஆங்கிலம்: Sultan Ismail Power Station; மலாய்: Stesen Janakuasa Sultan Ismail) என்பது மலேசியா, திராங்கானு மாநிலத்தின், டுங்குன் மாவட்டத்தில் (Dungun District), பாக்கா (Paka) நகரத்தில் அமைந்துள்ள ஒரு மின் நிலையம் ஆகும். மாநிலத் தலைநகரான கோலா திராங்கானுவில் (Kuala Terengganu) இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ளது.
சுல்தான் இசுமாயில் மின்நிலையம் Sultan Ismail Power Station | |
---|---|
நாடு | மலேசியா |
அமைவு | 4°35′53″N 103°26′57″E / 4.59806°N 103.44917°E |
நிலை | செயலில் உள்ளது |
இயங்கத் துவங்கிய தேதி | 1988 |
இயக்குபவர் | தேசிய மின்சார வாரியம் (National Electricity Board) (1988-1990) (Tenaga Nasional Berhad)(1990-தற்போது) |
இந்த மின்நிலையத்தில் 1,136 மெகாவாட் (MW) மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தெனாகா நேசனல் (Tenaga Nasional) எனும் மலேசிய மின் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த சுழற்சி வகையிலான மிகப் பெரிய மின் நிலையமாக விளங்குகிறது.[1]
பொது
தொகுமலேசியாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையமாக விளங்கும் இந்த சுல்தான் இசுமாயில் மின் நிலையம் (Sultan Ismail Power Station) பாக்கா நகரில் உள்ளது. அதனால் இந்த நகரமும் பிரபலமாக அறியப்படுகிறது. இந்த மின் நிலையம், தேசிய மின் நிறுவனமான தெனாகா நேசனல் (Tenaga Nasional) மூலம் நடத்தப்படுகிறது.
இந்த நிலையம் 1987-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. மற்றும் 1988-ஆம் ஆண்டில் திராங்கானு மாநில அரசர் சுல்தான் மகமூத் அல்-முக்தாபி பில்லா சா அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.
இயற்கை எரிவாயு
தொகுஎரிசக்தி துறைக்குச் சேவை செய்யும் ஏராளமான வெளிநாட்டினர் மற்றும் புலம்பெயர் வெளிநாட்டினர் பாக்கா நகரில் வசிக்கின்றனர். 2013-ஆம் ஆண்டில், மலேசியாவில் அதிக வாழ்க்கைச் செலவைக் கொண்ட மூன்றாவது இடமாக பாக்கா இடம்பெற்று உள்ளது.
இந்த நிலையம் இயற்கை எரிவாயுவை (Natural Gas) முக்கிய எரிபொருளாகப் பயன்படுத்துகிறது. பெட்ரோனாஸ் (Petronas) நிறுவனம், அருகிலுள்ள அதன் எரிவாயு ஆலையில் இருந்து எரிவாயுவை வழங்குகிறது.