சுவபன் சௌத்ரி
பண்டிட் சுவபன் சௌத்ரி (Pandit Swapan Chaudhuri) இவர் ஓர் இந்திய கைம்முரசு இணைக் கலைஞரவார், மேலும் எல்லா நேரத்திலும் இந்த கருவியின் சிறந்த நிபுணர்களில் ஒருவராக கருதப்படுகிறார். பண்டிட் ரவிசங்கர், உஸ்தாத் அலி அக்பர் கான், உஸ்தாத் விலாயத் கான், பண்டிட் பீம்சென் ஜோஷி, பண்டிட் ஜஸ்ராஜ் உஸ்தாத் அம்ஜத் அலிகான் உள்ளிட்ட பல இந்திய இசைக்கலைஞர்களுடன் இவர் தனது நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். [1] [2], .
பண்டிட் சந்தோசு கிருட்டிணா பிசுவாசு என்பவர் இவரது குருவாவார். இலக்னோ கரானாவைச் (பாடும் பாணி) சேர்ந்த இவர், தனது13 வயது, அனைத்திந்திய வானொலியில் தனது தாத்தாவான, பனாரசு கரானாவின் பண்டிட் காந்தே மகாராஜுடன் சேர்ந்து நிகழ்ச்யினை வழங்கினார்.
விருதுகள்
தொகுஇவர் அமெரிக்காவின் கலை விருதினை பெற்றுள்ளார். மேலும், பெர்குசிவ் கலை அமைப்பின் அங்கத்தினராக பரிந்துரைக்கப்பட்டார். 1996 ஆம் ஆண்டில், இவர், இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து இந்தியாவில் பாரம்பரிய இசைக்கான மிக உயர்ந்த விருதான சங்கீத நாடக அகாதமி விருதைப் பெற்றார். பின்னர், 2019 ஆம் ஆண்டில், இந்திய அரசிடமிருந்து இந்தியாவின் மிக உயர்ந்த கௌரவங்களில் ஒன்றான பத்மசிறீ விருதினைப் பெற்றார். [3] [4]
சாதனைகள்
தொகுபிரபல பாலிவுட் பாடகி ஆஷா போஸ்லே, உஸ்தாத் அலி அக்பர் கான் ஆகியோருடன் இணைந்து லெகஸி (1997), பாஸிங் ஆன் த டிரெடிஷன் (1998) என்ற இரண்டு இசைத் தொகுப்பினை வெளியிட்டார். இது கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது
கற்பித்தல்
தொகுசுற்றுப்பயணம் மற்றும் நிகழ்ச்சிகளில் மிகவும் பரப்பரப்பாக இருந்தபோதிலும், இவர் கைம்முரசுவை கற்பிப்பதில் தனது வாழ்க்கையின் ஒரு குறிப்பிடத்தக்க நேரத்தை அர்ப்பணித்துள்ளார். இவர் சுவிட்சர்லாந்தின் சான் ரஃபேல் மற்றும் பாசலில் உள்ள அலி அக்பர் இசைக் கல்லூரியின் தாள இயக்குநராகவும், துறைத் தலைவராகவும், காலார்ட்ஸில் மூத்த ஆசிரிய உறுப்பினராகவும் இருந்தார்.
மேலும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ "Review/Music; Translating the Spirit of Classical Hindustani Raga, by JON PARELES". New York Times. 4 May 1992. https://www.nytimes.com/1992/05/04/arts/review-music-translating-the-spirit-of-classical-hindustani-raga.html.
- ↑ "Review/Music; North India Vocal Works With Rules By BERNARD HOLLAND". New York Times. 1 June 1990. https://www.nytimes.com/1990/06/01/arts/review-music-north-india-vocal-works-with-rules.html.
- ↑ "2019 Padma Awardees List". padmaawards.gov.in.
- ↑ "Government announces Padma awards 2019: Gautam Gambhir, Prabhu Deva, Kader Khan among awardees". https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/government-announces-padma-awards-2019-gautam-gambhir-prabhu-deva-kadir-khan-among-awardees/articleshow/67690881.cms.