சுவவலம்பன்

சுவவலம்பன் (Swavalamban) என்பது அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க வகை செய்யும் திட்டம் ஆகும். இந்திய அரசால் 2010-11 ஆண்டு இந்திய வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க வகை செய்யும்,[1][2][3] தன் கையே தனக்கு உதவி எனப்படும் இந்த திட்டத்திற்கு, 'ஸ்வவலம்பன்' என்று இந்தியில் பெயர் சூட்டப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின்படி, 60 வயதிற்கு மேலானவர்களுக்கு சாகும் வரை 1,000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும். இந்த ஓய்வூதியத் திட்டம் கூலித் தொழில் செய்பவர்கள் மற்றும் தினக்கூலியாக வேலை செய்பவர்களுக்காக தயாரிக்கப்பட்டது.

இந்த திட்டத்தில் சேர விரும்பும் கூலி வேலை செய்பவர்கள் மாதத்திற்கு நூறு ரூபாய் வீதம் 20 ஆண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டும். அதன் பிறகு அவர்களுக்கு 1,000 ரூபாய் பென்ஷன் கிடைக்கும். நூறு ரூபாய்க்கு அதிகமாக கட்டினால், ஓய்வூதியமும் அதற்கேற்றாற் போல அதிகமாக கிடைக்கும். அரசின் நலத்திட்ட உதவித் தொகைகள் பயனாளிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.


மேற்கோள்கள்தொகு

  1. "Swavalamban Pension Scheme". National Informatics Centre. பார்த்த நாள் 10 சனவரி 2015.
  2. "FM to launch Swavalamban pension scheme tomorrow". Business Standard. பார்த்த நாள் 10 சனவரி 2015.
  3. "Pranab Mukherjee launches LIC's 'Swavalamban' Pension scheme - See more at: http://www.indiainfoline.com/article/news-top-story/pranab-mukherjee-launches-lic-s-swavalamban-pension-scheme-113101501890_1.html#sthash.zQ7Zm6hl.dpuf". India Infoline News Service. பார்த்த நாள் 10 சனவரி 2015.

காண்கதொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவவலம்பன்&oldid=1784706" இருந்து மீள்விக்கப்பட்டது