சுவாதி கொலை வழக்கு

சுவாதி கொலை வழக்கு என்பது 24 சூன் 2016 அன்று, சென்னை நுங்கம்பாக்கம் தொடருந்து நிலையத்தில் சுவாதி எனும் பெண்மணி கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கினைக் குறிக்கும்.[1]

கொலை விவரம் தொகு

சென்னையிலுள்ள இன்போசிசு தகவல் தொழினுட்ப நிறுவன ஊழியரான சுவாதி, நாள்தோறும் நுங்கம்பாக்கம் தொடருந்து நிலையத்தில் புறநகர் தொடருந்தில் ஏறி பணிக்கு சென்றுவரும் வழக்கத்தினைக் கொண்டிருந்தார். சூன் 24 அன்று காலை 6 மணிவாக்கில் தொடருந்திற்காக காத்துக் கொண்டிருந்த வேளையில், இளவயது கொலையாளி ஒருவனால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

கொலையாளி விவரம் தொகு

சூலை 1, 2016 இரவு செங்கோட்டைக்கு அருகே மீனாட்சிபுரம் எனும் சிற்றூரில் 24 அகவையுடைய இராம்குமார் என்ற கொலையாளி கைது செய்யப்பட்டார். கைதினைத் தவிர்க்க குற்றவாளி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் காவற்துறையால் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.[2][3]

கொலைக்கான காரணம் தொகு

கொலைக்கான காரணத்தை தமிழக காவற்துறை இதுவரை கண்டறியப்படவில்லை.

புலனாய்வு விவரம் தொகு

சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்துகளை அடுத்து, புலனாய்வு செய்யும் பொறுப்பு இரயில்வே காவற்துறையிடமிருந்து சென்னை நகர காவற்துறைக்கு முறைப்படி மாற்றப்பட்டது.[4]

பாதுகாப்பு குறித்தான கண்டன விமர்சனங்கள் தொகு

பெருமளவில் மக்கள் கூடும் ஒரு தொடருந்து நிலையத்தில் கண்காணிப்புக் காமிராக்கள் அமைக்கப்படாதிருந்தது குறித்து குமுகாயத்தின் பல்வேறு அமைப்புகள் தமது கண்டன விமர்சனங்களை தெரிவித்தன.[5]

பொதுமக்களின் செயற்பாடுகள் குறித்தான விமர்சனங்கள் தொகு

கொலை நிகழ்வு நடந்த நேரத்தில் அங்கிருந்தோர் கொலையைத் தடுக்கவோ, கொலையாளியைப் பிடிக்கவோ முயற்சி செய்யவில்லை; கொலைத் தாக்குதலுக்குள்ளான பெண்ணைக் காப்பாற்ற முயற்சி எதுவும் எடுக்கப்படவில்லை என்பன போன்ற குற்றச்சாட்டுகள் குமுகாயத்தின் பல்வேறு அமைப்புகளால் எழுப்பப்பட்டன.

அஞ்சலிக் கூட்டங்கள் தொகு

கொலையைக் கண்டித்து, சென்னை நகரில் அஞ்சலிக் கூட்டங்கள் இடம் பெற்றன.[6]

ராம்குமார் மரணம் தொகு

சுவாதியின் கொலை வழக்கை தமிழக காவல் துறை சரியாக விசாரிக்கவில்லை, பல உண்மைகளை இவர்கள் மறைத்துவிட்டனர். இதனால் இந்த வழக்கை சிபியையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ராம்குமாரின் அம்மா நீதிமன்றத்தில் முறையிட்டார்.[7]

இதற்கிடையில் சென்னை புழல் சிறைச்சாலையில் குற்றவாளி என்று கைதுசெய்யப்பட்டிருந்த ராம்குமார் 2016 செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி சிறை வளாகத்தில் இருந்த மின்சார பெட்டியில் கைவைத்து இறந்துவிட்டதாகச் சிறைத்துறையினர் அறிவித்தனர். [8]

மேற்கோள்கள் தொகு

  1. "Techie hacked to death". தி இந்து. 25 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 1 சூலை 2016.
  2. "Swathi's murderer arrested in Tirunelveli". தி இந்து ஆங்கிலம். சூலை 2, 2016. பார்க்கப்பட்ட நாள் 2 சூலை 2016.
  3. "சுவாதி கொலை வழக்கு:செங்கோட்டையில் சந்தேக நபர் கைது". தினமணி. 2 சூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 2 சூலை 2016.
  4. "Swathi murder case: Chennai city police take over investigation". தி இந்து. 27 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 1 சூலை 2016.
  5. "Chennai's Nungambakkam railway station does not have CCTV cameras". தி இந்து. 25 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 1 சூலை 2016.
  6. "A cry for justice". தி இந்து. 30 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 4 சூலை 2016.
  7. பல உண்மைகளை போலீஸார் மறைத்துவிட்டனர்: சுவாதி கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் - ராம்குமாரின் தாயார் மனு தாக்கல்
  8. சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் சிறையில் தற்கொலை தி இந்து தமிழ் 18 செப்டம்பர் 2016

உசாத்துணை தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாதி_கொலை_வழக்கு&oldid=3108200" இலிருந்து மீள்விக்கப்பட்டது