சுவாதி மாலீவால்

(சுவாதி மாலிவால் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சுவாதி மாலீவால் (Swati Maliwal-பிறப்பு: 15, அக்டோபர், 1984) ஓர் சமூக ஆர்வலர் மற்றும் தில்லி மாநிலங்களவை உறுப்பினர் ஆவார். இவர் தில்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஆவார். இவர் தில்லி மகளிர் ஆணையத்தின் இளைய தலைவர் ஆவார்.

சுவாதி மாலீவால்
மாலீவால் 2024 சனவரியில்
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
19 சனவரி 2024
முன்னையவர்சுசீல் குமார் குப்தா
தொகுதிதில்லி
தில்லி மகளிர் ஆணையம்
பதவியில்
சூலை 2015 – 19 சனவரி 2024
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 அக்டோபர் 1984 (1984-10-15) (அகவை 40)
காசியாபாத், உத்தரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிஆம் ஆத்மி கட்சி
வாழிடம்(s)புது தில்லி, இந்தியா
தொழில்அரசியல்வாதி, செயற்பாட்டாளர்

தில்லி மகளிர் ஆணையத்தில் சேருவதற்கு முன்பு, மலிவால் தில்லி முதலமைச்சரின் பொதுக் குறைகள் குறித்து ஆலோசகராகப் பணியாற்றினார்.

சமூக ஆர்வலர் அண்ணா அசாரே மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஊழலுக்கு எதிரான இந்திய இயக்கத்தின் முக்கிய உறுப்பினராக மாலீவால் இருந்தார். 2015-இல் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு அமைந்த பிறகு, தில்லி மகளிர் ஆணையத்தின் தலைவராக மாலீவால் நியமிக்கப்பட்டார். இவர் சனவரி 2024-இல் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

வாழ்க்கை

தொகு

மாலீவால் 1984ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தில் பிறந்தார் [2] இவர் அமித்தி பன்னாடுப் பள்ளியில் பயின்றார். பின்னர் ஜெ. எசு. எசு. தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் இளநிலைப் பட்டம் பெற்றார்.[2] இவர் எச். சி. எல்லில்தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இதன் பிறகு அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியாவுடன் "பரிவர்தன்" என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் சேர்ந்தார்.

அரசியல்

தொகு

மலிவால் தனது முதல் பதவிக்காலத்தைச் சூலை 2015இல் தில்லி மகளிர் ஆணையத்தின் தலைவராகத் தொடங்கினார்.[3] சூலை 2018-இல் இவரது பதவிக்காலம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.[4] மகளிர் ஆணைய தலைவர் பதவியை வகிக்கும் இளையவர் இவரே.[5]

2018ஆம் ஆண்டில், ஏப்ரல் 13ஆம் தேதி தொடங்கிய 10 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.[6][7] 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்தை இயற்ற வேண்டும், ஐக்கிய நாடுகளின் தரநிலைகளின் கீழ் காவலரைப் பணியமர்த்துதல் மற்றும் காவல்துறையின் பொறுப்புக்கூறலை கோருதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை இவர் வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார்.[6] மாலீவால் பிரதமர் நரேந்திர மோதிக்கு ஒரு திறந்த கடிதத்தை வெளியிட்டார்.[8] இவரது வேலைநிறுத்தம் 16 மற்றும் 8 வயதுடைய சிறுமிகள் இருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் தொடர் போராட்டங்களின் போது நடந்தது.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. "AAP members Sanjay Singh, Swati Maliwal and ND Gupta elected to Rajya Sabha". Hindustan Times. 2024-01-12. பார்க்கப்பட்ட நாள் 2024-01-16.
  2. 2.0 2.1 Krishna, Srikanth (20 August 2018). "Who is Swati Maliwal and why is she on indefinite hunger strike?". IB Times. International Business Times. பார்க்கப்பட்ட நாள் 14 October 2018.
  3. "Swati Maliwal Takes Charge as DCW Chief". The Pioneer. 21 July 2015. https://www.highbeam.com/doc/1P3-3747734501.html. 
  4. "Swati Maliwal's Term as DCW Chief Extended". Hindustan Times. 24 July 2018 இம் மூலத்தில் இருந்து 15 அக்டோபர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181015002909/https://www.highbeam.com/doc/1P4-2073913219.html. 
  5. Safi, Michael (5 May 2017). "Her pain should be our pain': the woman tackling Delhi's rape crisis". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 14 October 2018.
  6. 6.0 6.1 "DCW chief Swati Maliwal ends hunger strike after 10 days". Indian Express. 21 April 2018. பார்க்கப்பட்ட நாள் 15 October 2018.
  7. 7.0 7.1 "Indian women's commissioner on hunger strike over rape laws". Manveena Suri. CNN. 18 April 2018. பார்க்கப்பட்ட நாள் 14 October 2018.
  8. "Swati Maliwal: Call to speed up child rape executions in India". BBC News. 16 December 2017. பார்க்கப்பட்ட நாள் 14 October 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாதி_மாலீவால்&oldid=4108405" இலிருந்து மீள்விக்கப்பட்டது