சுவாமிமலை கே. ராஜரத்தினம்

சுவாமிமலை கே. ராஜரத்தினம் (பி. 1931 ) ஒரு தமிழக நடன ஆசிரியர்.

சுவாமிமலை கே.ராஜரத்தினம்

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

கும்பகோணம் அருகில் உள்ள சுவாமிமலையில் பாரம்பரியம் மிக்க இசை வேளாளர் சமுதாயத்தில், 1930 ஜூலை 3ஆம் தேதி பிறந்தார் ராஜரத்தினம். இவர் மிக இனிமையான குரல்வளம் மிக்கவராக திகழ்ந்தார். ஆதலால் ஆரம்பத்தில் நாட்டியத்திற்கு பின் பாடல்கள் பாட சென்னை வந்தார். நாட்டியத்தில் ஆர்வம் ஏற்பட்டதால் வழுவூர் ராமையா பிள்ளையிடம் சுமார் 15 வருடங்கள் குரு குலவாசமாக நாட்டியத்தைப் பயின்றார். திருவாளப்புத்தூர் சுவாமிநாதபிள்ளை, மயிலாப்பூர் கௌரி அம்மாள் இவர்களிடமும் முறையாக நடனம் பயின்றார்.

வழுவூர் ராமையா பிள்ளை தம்பி மிருதங்க வித்துவான் வழுவூர் நடராஜசுந்தரம் பிள்ளையின் மகள் நாகலட்சுமியை 1959ஆம் ஆண்டு மணந்தார். இவருக்கு விஜயகிருஷ்ணன், சங்கர் என்ற மகன்களும், ஜெயகமலா என்ற ஒரு மகளும் உள்ளனர். இதில் ஜெயகமலா தன் தந்தையுடன் இணைந்து நடனப்பள்ளியை நடத்தியதுடன் தன் மகள் நிருத்தியாவிற்கு நடனம் கற்பித்துள்ளார்; பல மேடைகளிலும் நடனம் ஆடி உள்ளார்.

கலை வாழ்க்கை

தொகு

நடனப்பள்ளி

தொகு

சுவாமிமலை கே. ராஜரத்தினம் 1960ஆம் ஆண்டு கமலா கலா நிலையம் என்ற பெயரில் நாட்டியப் பள்ளி ஒன்றை மயிலாப்பூரில் தெடங்கி பத்தாண்டுகள் நடத்தினார். இது மாணவர்களால் ”ராஜரத்தினலாயா” என்று அழைக்கப்பட்டது. இங்கு பல மாதர் சங்கங்களுக்கும், கலாநிகேத்தன் போன்ற நாட்டிய பள்ளிகளுக்கும் நாட்டியம் பயிற்றுவித்தார். இவர் சுமார் 200 மாணவர்களை உருவாக்கி உள்ளார். இவரின் இனிமையான குரலுக்கு ஓரு ரசிகர்கள் கூட்டம் உருவானது.

பெற்ற பட்டங்கள்

தொகு

மறைவு

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.hindu.com/fr/2007/06/29/stories/2007062950680300.htm பரணிடப்பட்டது 2008-03-03 at the வந்தவழி இயந்திரம்>
  2. http://shilpakrishnan.com/gitaumesh.aspx பரணிடப்பட்டது 2009-02-28 at the வந்தவழி இயந்திரம்>
  3. http://www.lasya.org/gurus.shtml[தொடர்பிழந்த இணைப்பு]>
  4. http://www.narthaki.com/info/profiles/profil78.html>
  5. http://rajarathnalaya.blogspot.com