சுவாமி சொரூபானந்த சரஸ்வதி
சுவாமி சொரூபானந்த சரஸ்வதி (Swami Swaroopanand Saraswati) (பிறப்பு: 2 செப்டம்பர் 1924 – மறைவு: 11 செப்டம்பர் 2022) இந்திய ஆன்மீகத் தலைவர்களில் ஒருவர் ஆவார். இவர் ஒரே நேரத்தில் குஜராத்தில் உள்ள துவாரகை மடம் மற்றும் உத்தர காண்டத்தில் உள்ள ஜோஷி மடம் ஆகியவற்றின் சங்கராச்சாரியாராக 2022ஆம் ஆண்டு வரை இருந்தார்.[1][2] இவர் 2022ஆம் ஆண்டில் சமாதி அடைந்த பிறகு இவரது சீடரான சுவாமி அவிமுக்தேஷ்வரானந்தா சரஸ்வதி இவ்விரு மடங்களின் சங்கராச்சாரியாக இருந்துவருகிறார்.
பிறப்பு & வாழ்க்கை
தொகுசுவாமி சொரூபானந்த சரஸ்வதி , மத்தியப் பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் உள்ள திகோரி கிராமத்தில் பிராமண குடும்பத்தில் 2 செப்டம்பர் 1924 அன்று போத்திராம் உபாத்தியாயாவிற்கு பிறந்தார். இவர் ஜோதிர் மடத்தின் (1941-1953) சங்கராச்சாரியார் பிரம்மானந்த சரஸ்வதியின் நேரடி சீடராக இருந்தவர்.
1973 இல் சுவாமி ஜோஷி மடத்தின் சங்கராச்சாரியார் மறைவிற்குப் பின், பத்ரிநாத் ஜோதிர் மடத்தின் சங்கராச்சாரியார் (சர்ச்சைக்குரிய) பட்டம் சுவாமி சொரூபானந்தருக்கு வழங்கப்பட்டது. பின்னர் இவருக்கு 1982 இல் துவாரகா பீடத்தின் சங்கராச்சாரியாராகவும் ஆனார் .
சுவாமி சொரூபானந்த சரஸ்வதி தனது 98வது வயதில் 11 செப்டம்பர் 2022 அன்று மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள நரசிங்பூரில் காலமானார்.[3][4] சங்கராச்சாரியாரின் இறுதிச் சடங்கில் சுமார் 3,00,000 பேர் கலந்துகொண்டனர். இவரது மறைவிற்குப் பின்னர் துவாரகை மடம் மற்றும் ஜோஷி மடம் ஆகிய மடங்களுக்கு சுவாமி அவிமுக்தேஷ்வரானந்தா சரஸ்வதி தலைவராக உள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Shri Jagat Guru Swaroopanand" இம் மூலத்தில் இருந்து 12 May 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150512054457/http://jagadgurushankaracharya.org/.
- ↑ "Thumbnail sketch biography of Swami Swaroopanand Saraswati". Paul Mason. n.d. பார்க்கப்பட்ட நாள் 26 January 2015.
- ↑ துவாரகா பீட சங்கராச்சாரியார் மறைந்தார்
- ↑ Swami Swaroopanand Saraswati passes away