உத்தர காண்டம்
உத்தர காண்டம் (Uttara Kanda) வால்மீகி எழுதிய இராமாயணம், யுத்த காண்டத்துடன் நிறைவுகிறது. பின்னர் அயோத்தியில் நடந்த இராமர்-சீதை, லவன்-குசன் ஆகியவர்களின் வரலாற்றுச் செய்திகளை உத்தர காண்டம் கூறுகிறது. இக்கண்டத்தில் வதந்தியான பொய்ச் செய்தியை கண்டு வருத்தமுற்று, கர்ப்பிணியான சீதையை, இராமர் காட்டிற்கு அனுப்புவதும், காட்டில் சீதை வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் அடைக்கலமாகத் தங்குவதும், ஆசிரமத்தில் சீதை லவன்-குசன் எனும் இரட்டைக் குழந்தைகளைப் பெறுவதும், வால்மீகி முனிவர் லவ-குசர்களுக்கு, போர்க்கலையையும், மேலும் தான் இயற்றிய இராமாயணத்தையும் இலவ-குசர்களுக்கு கற்பித்தலும் கூறப்படுகிறது.
அசுவமேத யாகம்
தொகுசீதையின் உருவ பொம்மையைத் தனருகில் வைத்துக் கொண்டு, இராமர் அசுவமேத யாகம் செய்வதும், பல நாடுகளை சுற்றி வர அனுப்பப்பட்ட வேள்விக் குதிரையை, இலவ-குசர்கள் கட்டி வைத்தலும், வேள்விக் குதிரைகளை மீட்க வந்த சத்துருக்கனன், பரதன், இலக்குமணன் முதலானோர்களை இலவ-குசர்கள் போரில் வெல்வதும், இறுதியில் இராமரே நேரில் வந்து, இலவ-குசர்களை சந்தித்து வேள்விக் குதிரையுடன், லவ-குசர்களையும் அயோத்திக்கு அழைத்துச் செல்வதும், சீதை பிளவுண்ட பூமியில் இறங்கி இறத்தலும், இராமர் ஆயிரம் ஆண்டுகள் அயோத்தியை ஆண்ட பின்னர், இராமன் தனது நாட்டின் பகுதிகளை இலவ- குசர்களுக்குப் பிரித்துக் கொடுத்தல் போன்ற விவரங்கள் உத்தர காண்டத்தில் உள்ளது. இராமர் வைகுந்தம் செல்லும் நேரம் நெருங்கி விட்டதை அறிந்து, தனது உடன்பிறப்புகளுடன் பூவுலகை விட்டு வைகுந்தம் ஏகும் வரை உத்தர காண்டத்தில் கூறப்படுகிறது.
இராமாயணச் சொற்பொழிவுகளில்
தொகுஇராமாயணக் கதாகாலட்சேபங்களிலும், [1]உபன்யாசங்களிலும் [2]உபன்யாசங்களிலும் இராமர் பட்டாபிசேகத்துடன் சொற்பொழிவை நிறைவு செய்வர். துன்பியலாக முடியும் உத்தர காண்டப் பகுதியை எடுத்துரைப்பதில்லை என்பது மரபாக உள்ளது.
பிரபல கலாசாரத்தில்
தொகு- கி பி எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பவபூதி எனும் சமஸ்கிருத மொழி அறிஞர், இராமாயணத்தின் இறுதிப் பகுதியான உத்தர காண்ட வரலாற்றை உத்தரராமசரிதம் என்ற பெயரில் சமஸ்கிருத நாடகத்தை இயற்றியுள்ளார். [3]
- ஒட்டக்கூத்தர் தமிழ் மொழியில் உத்தர காண்டம் எழுதியுள்ளார். [4]
- உத்தர காண்டத்தில் கூறப்படும் செய்திகள் லவ குசா திரைப்படத்தில் காட்டப்படுகிறது.[5]