பவபூதி (Bhavabhuti) (சமக்கிருதம்: भवभूति) இந்தியாவின் எட்டாம் நூற்றாண்டின் சமஸ்கிருத மொழி நாடகங்கள் மற்றும் கவிதைகளால் நன்கறியப்பட்ட அறிஞர் ஆவார். பவபூதி, தற்கால மகாராஷ்டிர மாநிலத்தின் விதர்பா பிரதேசத்தின் கோந்தியா மாவட்டத்தில் உள்ள பத்மபுரம் எனும் ஊரில் நீலகண்டர் – ஜதுகாமி இணையருக்கு பிறந்தவர். இவரின் இயற்பெயர் ஸ்ரீகண்ட நீலகண்டன் ஆகும். இவரது குருவின் பெயர் பரமஹம்ச தயாநிதி ஆவார்.

பவபூதி, கன்னோசி மன்னர் யசோவர்மனின் அரசவைக் கவிஞராக இருந்ததாகக் கருதப்படுகிறார்.

பவபூதியின் படைப்புகள்

தொகு
  • மகாவீரசரித்திரம் (Mahaviracharita) (பால காண்டத்து இராமரின் வீரத்தை விளக்கும் நூல்[1]
  • மாலதிமாதவன் (மாலதி – மாதவனின் காதல் கதை) [2]
  • உத்தரராமசரித்திரம் (Uttararamacarita) (உத்தர காண்ட இராமரின் சரித்திரத்தைக் கூறும் நூல்[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Mahavira charita of Bhavabhuti
  2. Vidyakara; Daniel H.H. Ingalls, An Anthology of Sanskrit Court Poetry, Harvard Oriental Series Volume 44, p. 75
  3. The Uttara rama charita of Bhavabhuti

வெளி இணைப்புகள்

தொகு
  • The Uttara Rama Charita of Bhavabhuti. With Sanskrit commentary by Pandit Bhatji Shastri Ghate of Nagpur and a close English translation by Vinayak Sadashiv Patvardhan. The Nyaya Sudha Press, Nagpur 1895 [1]
  • Rama's later history or Uttara-Ram-Charita of Bhavabhuti. Critically edited with notes and an English transltation by Shripad Krishna Belvalkar. Harvard University Press 1915 [2]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவபூதி&oldid=2555393" இலிருந்து மீள்விக்கப்பட்டது