சுவாலமாலினி கோவில்

சுவாலமாலினி கோவில் அல்லது ஸ்ரீ அதிசய சேத்திர சிம்மனகட்டே சுவால மாலினி திகம்பர சமணக் கோவில் அல்லது அதிசய ஸ்ரீ சேத்திர சிம்மனகட்டே என்பது கர்நாடகாவின் சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள நரசிம்மராசபுரத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற சமணக் கோவிலாகும். [1]

ஸ்ரீ அதிசய சேத்திர சிம்மனகட்டே
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்நரசிம்மராசபுரா, சிக்மங்களூரு , [[கர்நாடகா]]
புவியியல் ஆள்கூறுகள்13°36′18.7″N 75°29′51.1″E / 13.605194°N 75.497528°E / 13.605194; 75.497528
சமயம்சமணம்
இணையத்
தளம்
www.simhanagadde.org

கோவில் பற்றி

தொகு

இந்த கோவில் சுவாலமாலினி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட முக்கிய சமண மையங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. [2] கோவிலில் சுவாலமாலினியின் சிலை உள்ளது, இது இக்கோவிலின் காவல் தெய்வமாக இருந்து வருகிறது. தனம், இரட்டை அம்பு, சக்கரம், திரிசூலம், பாசம், கொடி, கிண்ணம் மற்றும் கலசம் ஆகியவற்றை ஏந்திய எட்டுக் கைகளைக் கொண்டது இந்தச் சிலை. இந்தக் கோவில் விஜயநகர காலத்தைச் சேர்ந்தது. முலா சங்கத்தின் யபானியா பிரிவின் ஒரு பகுதியாகும். [3] இந்த கோவில் வளாகத்தில் ஹும்ச மாதா உள்ளது. கர்நாடகாவில் எஞ்சியிருக்கும் 11 பட்டாரக்களில் இது ஒரு தலமாகும். [4] [5] கோவிலின் சமவசரணத்தின் சித்தரிப்பு பார்சுவநாத பசதியில் உள்ளது. [6]

இந்த கோவில் அதன் சதுர்விதா (நான்கு மடங்கு) தான' பாரம்பரியத்திற்கு பிரபலமானது. [7]

மேலும் பார்க்கவும்

தொகு
  • ஹம்சா ஜெயின் கோவில்கள்
  • பத்மாவதி

மேற்கோள்கள்

தொகு

மேற்கோள்

தொகு

ஆதாரம்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாலமாலினி_கோவில்&oldid=4154615" இலிருந்து மீள்விக்கப்பட்டது