சுஷ்மா சிங்

இந்திய அரசியல்வாதி

சுஷ்மா சிங் (Sushma Singh) ஒரு இந்திய ஆட்சிப்பணி அதிகாரி மற்றும் இந்தியாவின் ஐந்தாவது தலைமை தகவல் ஆணையர் ஆவார். [1] இவர் தீபக் சந்துவுக்குப் பிறகு தலைமைத் தகவல் ஆணையராக நியமிக்கப்பட்ட இரண்டாவது பெண்மணி ஆனார்.

சுஷ்மா சிங்
தலைமை தகவல் ஆணையர்
பதவியில்
19 திசம்பர் 2013 – 21 மே 2014
முன்னையவர்தீபக் சாந்து
பின்னவர்இராஜீவ் மாத்தூர்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்

தொழில் வாழ்க்கை

தொகு

இவர் சார்க்கண்டு பிரிவைச் சார்ந்த மேநாள் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஆவார். இவர் இந்தியக் குடிமைப் பணிகளிலிருந்து பணி நிறைவின் காரணமாக 2009 ஆம் ஆண்டு மே 31 ஆம் நாள் ஓய்வு பெற்றார்.[2] இவர் இந்திய அரசின் பல்வேறு செயலகப்பதவிகளிலும் சேவையாற்றியுள்ளார். இவர் இந்தியத்தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் செயலராகவும் இந்தியப் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலராகவும் சேவையாற்றினார். இவர் செப்டம்பர் 23,2009 இல் மத்திய தகவல் ஆணையத்தின் இந்தியத் தகவல் ஆணையரானார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Sushma Singh takes oath as CIC". தி இந்து. 20 December 2013. http://www.thehindu.com/news/national/sushma-singh-takes-oath-as-cic/article5480172.ece. பார்த்த நாள்: 20 December 2013. 
  2. 2.0 2.1 "Sushma Singh appointed as the Chief Information Commissioner". DNA. 19 December 2013. பார்க்கப்பட்ட நாள் 20 December 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுஷ்மா_சிங்&oldid=3891085" இலிருந்து மீள்விக்கப்பட்டது