சு. அனவரத விநாயகம் பிள்ளை
சு. அனவரத விநாயகம் பிள்ளை (20 செப்டம்பர் 1877 – 1940) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழறிஞர், பேராசிரியர், எழுத்தாளர், அகராதி தொகுப்பாளர், பதிப்பாளர் ஆவார்.[1]
சு. அனவரத விநாயகம் பிள்ளை | |
---|---|
பிறப்பு | 20 செப்டம்பர் 1877 |
இறப்பு | 1940 (அகவை 62–63) |
கல்வி | முதுகலை, இளங்கலை, சென்னை கிறிஸ்தவக் கல்லூரி |
பணி | பேராசிரியர் |
அறியப்படுவது | எழுத்தாளர், அகராதி தொகுப்பாளர், பதிப்பாளர் |
பெற்றோர் | சுப்பிரமணிய பிள்ளை, ஈசுவரவடிவு |
இவரது பெற்றோர் சுப்பிரமணிய பிள்ளை, ஈசுவர வடிவு அம்மாள் ஆகியோராவர். இவர் சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் இளங்கலை மெய்யியல் படித்தார். பின்னர் தமிழில் முதுகலை பட்டம் பெற்றார். முதுகலை பயிலும்போது நச்கினார்க்கினியரைப்பற்றிய ஆய்வுக் கட்டுரை எழுதினார். கிறிஸ்தவக் கல்லூரியில் முதலில் ஆசிரியராகவும், பிறகு உள்நாட்டு மொழிகட்கான கண்காணிப்பாளராகவும், நீண்டகாலம் பணிபுரிந்தார். கொழும்புப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகவும், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதிக் குழு உறுப்பினராக இருந்தார்.[2]
இவர் பல தமிழ் நூல்களை ஆராய்ச்சிமிக்க முன்னுரைகளுடன் பதிப்பித்திருக்கின்றார். தமிழ், தமிழ்த் தொன்மங்கள் உள்ளிட்ட பல பொருள்கள் குறித்து பல கட்டுரைகளும், நூல்கள் எழுதியுள்ளார்.