சு. சேவியர்
சு. சேவியர் (S. Xavier)(15 ஏப்ரல் 1920 - 6 திசம்பர் 2009) என்பவர் இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞரும், தொழிற்சங்க தலைவரும், சுதந்திராக் கட்சியின் அரசியல்வாதியும் ஆவார். இவர் 1967 முதல் 1971 வரை திருநெல்வேலி மக்களவைத் தொகுதியின் மக்களவை உறுப்பினராகவும் இருந்தாா். சேவியர் திசம்பர் 6, 2009 அன்று காலமானார்.[1]
சு. சேவியர் S. Xavier | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் திருநெல்வேலி | |
பதவியில் 1967–1971 | |
பிரதமர் | இந்திரா காந்தி |
முன்னையவர் | முத்தையா |
பின்னவர் | முருகானந்தம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1920 |
இறப்பு | 6 திசம்பர் 2009 |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | சுதந்திராக் கட்சி |
தொழில் | அரசியல்வாதி |
இளமை
தொகுசேவியர் 1920ஆம் ஆண்டில் திருநெல்வேலியில் தலித் குடும்பம் ஒன்றில் பிறந்தார். 1941-ல் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் பட்டம் பெற்று அதே ஆண்டில் அரசாங்கப் பணியில் சேர்ந்தார். 1952-ல் சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று வழக்கறிஞர் பட்டம் பெற்றார். 1953 முதல் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றார். சென்னை மாகாணத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாள அமைப்புக்களை சேவியர் வழிநடத்தினாா்.[2]
அரசியல்
தொகு1959ஆம் ஆண்டு சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி நிறுவிய சுதந்திராக் கட்சியில் சேவியர் ஆர்வத்துடன் இணைந்து செயல்பட்டாா். 1967ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
தொகுஆதாரங்கள்
தொகு- Ralhan, O. P. (2002). Encyclopaedia of Political Parties. Anmol Publications PVT LTD. p. 19. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8174888659, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7488-865-5.
{{cite book}}
: More than one of|ID=
and|id=
specified (help)