சூசானா கபுட்டோவா
சூசானா கபுட்டோவா ( ஸ்லோவாக் உச்சரிப்பு: ; née Strapáková ; பிறப்பு: 21 சூன் 1973 ) என்பவர் ஸ்லோவாக்கிய அரசியல்வாதியும், வழக்கறிஞரும், செயற்பாட்டாளருமாவார். ஸ்லோவாக்கியாவின் சனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 2019 சூன் 15 ஆம் நாள் பதவியேற்கவுள்ளார். ஸ்லோவாக்கியா நாட்டு வரலாற்றில் முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் அதிபர் என்ற பெருமையையும், குறைந்த வயதில் அதாவது 45 வயதில் சனாதிபதி ஆனவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.[1]
Zuzana Čaputová | |
---|---|
ஸ்லோவாக்கியாவின் சனாதிபதி | |
பதவியில் 15 சூன் 2019 | |
பிரதமர் | பீட்டர் பெல்லிகிரினி |
Succeeding | ஆண்ட்ரேஜ் கிஸ்கா |
ஸ்லோவாக்கியா முற்போக்குக் கட்சியின் துணைத் தலைவர் | |
பதவியில் 15 மார்ச் 2018 – 19 மார்ச் 2019 | |
தலைவர் | slovenčina (sk) |
முன்னையவர் | Position established |
பின்னவர் | Vacant |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | Zuzana Strapáková 21 சூன் 1973 பிராத்திஸ்லாவா, ஸ்லோவாக்கியா சோசலிச குடியரசு |
அரசியல் கட்சி | ஸ்லோவாக்கியா முற்போக்குக் கட்சி (2017–2019) சுயேச்சை (2019–present) |
துணைவர் | இவன் செபுடா ( விவாகரத்து ) |
துணை | பீட்டர் கோனெக்னி |
பிள்ளைகள் | 2 |
கல்வி | காமினியஸ் பல்கலைக்கழகம் |
தனது சொந்த ஊரான பெஸிநாய்க் பகுதியில் நிலத்தில் நச்சுப்பொருட்கள் நிரப்பப்படுவதை எதிர்த்து மிகப் பெரும் சூழலியல் போராட்டத்தை ஒரு தசாப்தகாலம் முன்னெடுத்து நடத்தியதற்காக இவர் முதன்முதலில் அறியப்பட்டார். இதற்காக இவருக்கு, 2016 ஆண்டு கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டய சனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட கபுட்டோவா 58 விழுக்காடுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Santora, Marc; Germanova, Miroslava (30 March 2019). "Zuzana Caputova Is Elected Slovakia’s First Female President" (in en-US). The New York Times. பன்னாட்டுத் தர தொடர் எண்:0362-4331. https://www.nytimes.com/2019/03/30/world/europe/slovakia-election-president.html.
- ↑ "Zuzana Čaputová, the spiritual liberal who beat Slovakia’s populists". Guardian. 13 April 2019. https://www.theguardian.com/world/2019/apr/13/zuzana-caputova-slovakia-president-spiritual-liberal-progressive-values. "The country’s first female president says she won’t compromise on progressive values in her search for pragmatic solutions"