சூத்திர நிலை

சூத்திர நிலை என்பதனை விளக்க நன்னூல் சில உதாரணங்களைத் தருகிறது. அவை,

ஆற்றில் தண்ணீர் இடையறாது தொடர்ந்து ஓடுவது போல மேற்கூறிய சூத்திரங்களையும் சொல்ல வேண்டிய கருத்துக்களையும் தொடர்பு விட்டுப்போகாமல் தொடர்ச்சியாக ஒன்றையடுத்து ஒன்றென நீரோட்டம் போலச் சொல்லுதல் வேண்டும்.

முன்னும் பின்னும் பார்த்தபடி நடக்கும் சிங்கம் போல சொல்கின்ற கருத்து முன்னர்ச் சொல்லப்பட்ட பொருளையும் பின்னர் சொல்லவிருக்கும் கருத்தையும் தழுவி பொருந்தும் வகையில் நூல் நடக்கவேண்டும்.

இடைவெளியாக இடம்விட்டு தத்திச் செல்லும் தவளை போல அடுத்து சொல்லவிருக்கும் கருத்துடன் இயைந்து நிற்கும் வகையில் பாய்ச்சல் இருக்கவேண்டும்.

வானில் உயரத்தில் உலவும் பருந்து நெடுந்தொலைவு கீழே இறங்கி தான் விரும்பிய இரையைக் கொண்டு செல்வது போல நூலில் ஓரிடத்தில் கூறப்பட்ட பொருள் பல கருத்துகளைக் கடந்து சென்ற பின்னரும் பொருளோடு பொருந்துமாறு இருக்க வேண்டும்.[1]


அடிக்குறிப்புகள்

தொகு
  1. ஆற்றொழுக்கு அரிமா நோக்கம் தவளைப்
    பாய்த்துப் பருந்தின்வீழ் வன்னசூத் திரநிலை. - நன்னூல் - (19)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூத்திர_நிலை&oldid=3245705" இலிருந்து மீள்விக்கப்பட்டது