சூரியப் புயல்

(சூரிய புயல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சூரியப் புயல் (solar storm) என்பது சூரியனில் ஏற்படும் ஒரு குலைவாகும். இது புவி, அதன் காந்த மண்டலம் உள்ளடக்கிய முழு சூரிய மண்டலத்தையும் தாக்கும் , மேலும் நீண்ட கால மாற்றமான விண்வெளிக் காலநிலைக்கும் குறுகிய கால விண்வெளி வானிலைக்கும் காரணமாகும்.[1]

வகைகள்

தொகு

சூரிய புயல்களில் பின்வருவன அடங்கும்.

  • சூரியச் சுடர்வீச்சு என்பது சூரிய வளிமண்டலத்தில் ஏற்படும் பெரிய வெடிப்பு ஆகும். இது, காந்தப்புலக் கோடுகளைத் தாக்கிக் குறுக்கீட்டு அவற்றை மறுசீரமைப்பதனால் ஏற்படுகிறது
  • சூரியப்புறணி பொருண்மை உமிழ்வு என்பது சூரிய மின்ம ஊடகத்தின் மிகப்பெரிய வெடிப்பால் ஏற்படுகிறது. சில வேளைகளில் இது சூரியச் சுடர்வீச்சுகளுடன் தொடர்பு கொண்டுள்ளது.
  • புவியியல் காந்தப் புயல் என்பது சூரிய வெடிப்பின் புவிக் காந்தப்புலத்துடனான ஊடாட்டமாகும்.
  • சூரியத் துகள் நிகழ்வு (SPE) புரோட்டான் அல்லது ஆற்றல் மிக்க துகள்களின் (SEP) புயல் ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Schmieder, Brigitte (November 2018). "Extreme solar storms based on solar magnetic field". Journal of Atmospheric and Solar-Terrestrial Physics 180: 46–51. doi:10.1016/j.jastp.2017.07.018. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S1364682617304261. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரியப்_புயல்&oldid=3954404" இலிருந்து மீள்விக்கப்பட்டது