சூரை
புதைப்படிவ காலம்:முன் இயோசீன்-சமீபத்திய , 56.0–0 Ma
[1]
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
ஸ்கோம்பிஃபார்ம்ஸ்
குடும்பம்:
ஸ்கோம்பிரிடே
பேரினம்:
துன்னினி

சூரை (Tuna) என்பது கானாங்கெளுத்தி வகையைச் சேர்ந்த உவர்நீரில் வாழும் மீன் இனம் ஆகும். இதில் 5 பேரினங்களாக மொத்தம் 15 இனங்கள் உள்ளன. இது வேகமாக நீந்தக்கூடிய மீன்களில் ஒன்றாகும். சான்றாக மஞ்சள் துடுப்புச் சூரை மணிக்கு 75 கிலோ மீட்டர்கள் வரை செல்லக் கூடிய திறன் கொண்டது.[2]

வெப்பக் கடல்களில் காணப்படும் இவ்வகை மீன்கள் வணிகத்திற்காக பெருமளவில் பிடிக்கப்படுகின்றன. அதிகமாக பிடிக்கப்படுவதன் விளைவாக தென் நீல துடுப்புச் சூரை போன்ற சில சூரை இனங்கள் தற்போது அழிவின் விளிம்பில் உள்ளன.

உணவாக

தொகு

மாலத்தீவில் சூரை மீன்களைக கொண்டு தயாரிக்கப்படும் மாசிக் கருவாடு என்ற உணவு, மாலத்தீவு, இலங்கை, தென்னிந்தியா, கேரளா மற்றும் லட்சத்தீவு போன்ற பகுதி மக்களால் உண்ணப்படுகின்றது.

வகைப்பாடு

தொகு
 • குடும்பம் ஸ்கோம்பிரிடே : கானாங்கெளுத்தி
  • இனம் துன்னினி : சூரை
   • பேரினம் அல்லோதுன்னஸ் : கேரை
   • பேரினம் ஆக்சிஸ் : எலிச்சூரை
   • பேரினம் இயூதைன்னஸ் : சுரளி
   • பேரினம் கத்சுவோனஸ் : வரிச்சூரை
   • பேரினம் துன்னஸ் : உண்மைச்சூரை
    • துணையினம் துன்னஸ் : மஞ்சள் துடுப்பு இனம்
    • துணையினம் நியோதுன்னஸ் : நீல துடுப்பு இனம்

மேற்கோள்கள்

தொகு
 1. "Tribe Thunnini Starks 1910". PBDB.
 2. Block, Barbara A.; Booth, David; Carey, Francis G. (1992). "Direct measurement of swimming speeds and depth of blue marlin" (PDF). Journal of Experimental Biology (Company of Biologists Ltd.) 166: 267–284. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-0949. https://journals.biologists.com/jeb/article-pdf/166/1/267/1228608/267.pdf. பார்த்த நாள்: 19 September 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரை&oldid=3655966" இலிருந்து மீள்விக்கப்பட்டது